மக்கள் மன்றம் கனடா ஆதரவில் குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலையத்தின் சுற்று மதில் கட்டும் வேலைகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதையே நீங்கள் காண்கிறீர்கள்.

 

அமரர் இராமநாதன் சிவசோதி ஞாபகார்த்தமாக புனரமைக்கப்படும் விளையாட்டு மைதானத்தின் சுற்று மதில் அமைக்கும் வேலைகள் நடைபெறுவதையே கீழே காண்கிறீர்கள். செலவை குறைக்கும் நோக்கத்தோடு எமது இளைஞர்கள் அத்திவாரத்தை தாங்களே வெட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் பெருமளவு பணத்தை மீதப்படுத்த கூடியதாக உள்ளது. முன்பு மைதானத்தின் புல்லை புடுங்க கூட யாரும் முன்வந்ததில்லை. புதிய நிர்வாகம் மிகவும் நேர்மையாகவும், வெளிநாட்டு காசு தானே என்று அனாவசியமாக செலவு செய்யாமல், தாமே கஸ்டப்பட்டு பல வேலைகளை செய்கிறார்கள். அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.