கணனிகள் கையளிப்பு போன்ற செய்திகளுடன் விரிகிறது இன்றைய செய்திப்படங்கள் பகுதி updated 27-01-2012

அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நலம் விரும்பிகளால் 10 கணணிகள் எமது மாணவர்களின் கணனி அறிவை வளர்ப்பதற்கென்று அனுப்பப்பட்டது. 2 கணனிகள் எமது பாடசாலைக்கும். மிகுதி 8 கணனிகளும் புதிதாக அமைக்கப்படுகின்ற பல நோக்கு மண்டபத்திலும் வைப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன. இதன் ஒரு அம்சமாக கணனிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதன் போது உரியவர்களிடம் கணனிகள் கையளிக்கப்பட்டன.

 

 

 

 

கடந்த ஒன்றரை வருடங்களாக சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் நடைபெற்று முடிவுறும் தறுவாயில் உள்ளது. 29-01-2012 அன்று தொடக்கம் 45 நாட்களுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

 

 

குப்பிழான் சனசமூக நிலையத்தில் இயங்கும் முன்பள்ளிக்கு save the children அமைப்பினரால் ரூபா 10,000 பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

குப்பிழான் கடாகடம்பை மயானத்திற்கு போகும் வீதி புனரமைக்கப்பட்ட காட்சிகளை கீழே காண்கிறீர்கள்

குப்பிழான் வடக்கு குருந்தடி மூலை வீதி புனரமைக்கப்பட்ட காட்சி பதிவுகள்.

 

கற்கரை விநாயகர் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பல நோக்கு மண்டபத்தினை கீழே காண்கிறீர்கள்.

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா ஆதரவில் குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் முன் பக்க மதில் மீழ் அமைக்கப்படும் காட்சி பதிவுகள்

 

 

அண்மையில் வெளிநாட்டு நிறுவனங்களால் 50,000 ரூபா பெறுமதியான உயர்சாதி பசுக்கள் சமாதி கோவில் மீழ் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் ஒரு பசு பன்றிக்கு வைக்கப்பட்ட வெடி மருந்தில் காயமடைந்து இறந்துள்ளது. பாதுகாப்பு வலயத்தில் இருந்த பகுதிகளில் பெருமளவு பன்றிகள் இருந்து பல பயிர் அழிவுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.