பாடசாலை பிரதான மண்டப வேலைகளில் ஏற்பட்டுள்ள சிறிய மந்த நிலை தொடர்பான செய்திப்படங்கள். updated 10-02-2013


குப்பிழான் புலம் பெயர் உறவுகளினால் அமைக்கப்படும் பாடசாலை பிரதான மண்டப வேலைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இவ்வேளை எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் கிடைக்கப்பெறாமையினால் கட்டிட வேலைகள் சிறிய மந்த நிலையை அடைந்துள்ளது என்பதை உங்களுக்கு அறியத்தரும் இவ்வேளை, மனித நேயமும், ஊர் பற்றும் உள்ள உறவுகள் தொடர்ந்து தமது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். இந்த கட்டிட வேலைகளை பார்வையிடுவதற்காக திரு கிருஸ்ணன் ஜயாவின் மகன் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்திருந்தார். அவரோடு அவரின் நண்பரான பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியும், விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா உறுப்பினர் முகுந்தன் அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் காட்சிகளையே நீங்கள் காண்கிறீர்கள்.