கோழி வளர்ப்புத் திட்டம், முத்தர்வளவு விநாயகருக்கு புதிய கிணறு மேலும் பல செய்திகளுடன் இன்றைய செய்திப் படங்கள். updated 11-01-2013

குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் சுயதொழிலை ஊக்குவிக்குமுகமாக கோழி வளர்ப்பு திட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இரண்டு குடும்பங்களுக்கு கோழிக் கூடுகள் வழங்கப்பட்டன. கடந்த யுத்தத்தில் கணவனை இழந்த விதவையான திருமதி உதயகுமார் பிரேமா அவர்களும், தாய் தந்தையை இழந்த சுமதி குடும்பமும் திரு சபேசனிடம் இருந்து உதவிகளை பெறுவதையே நீங்கள் காண்கிறீர்கள். இதற்கு நிதி உதவி வழங்கியோர் திரு நாகையா அப்பன், திரு திருமேனி பஞ்சாட்சரதேவன், திரு சிறிரங்கன் இரத்தினசிங்கம்.

திரு கற்பானந்தனின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட முத்தர்வளவு விநாயகர் ஆலய தீர்த்த கிணற்றையே காண்கிறீர்கள்.

அமரர் சிவசோதி ஞாபகார்த்தமாக குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதான வேலைகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

நிகுமுக திட்டத்தின் கீழ் விசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கப்பட்டன. அவைகள் பயிரிடப்பட்ட காட்சிகளை குப்பிழான் வடக்க கிராம சேவகர் திரு சபேசன் அவர்கள் பார்யைிடுகிறார்கள்.

குப்பிழான் எறும்புக்கடவை பிரதேசத்தில் மீழ் குடியேறிய மக்களுக்கு இலங்க சேவா நிறுவனத்தினால் மலசல கூடங்கள் அமைத்துக் கொடுத்திருப்பதையே காண்கிறீர்கள்.


சமாதி கோவிலின் தற்போதைய தோற்றம்.