சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குப்பிழான் கன்னிமார் ஆலய வருடாந்த மாகோற்சவம். updated 12-05-2014

 


எல்லோரையும் அவலத்துக்குள்ளாக்கிய போருக்கு பின்னர் ஒவ்வொரு விழாக்களும் ஒரு சம்பிரதாயத்திற்கு மட்டுமே நடைபெற்று வருகின்றது. எந்த விழாக்களும் 80க்கு முந்திய காலத்தில் நடைபெற்ற விழாக்கள் போல் நடைபெறுவதில்லை. ஆனால் இவ்வருட கன்னிமார் ஆலய மகோற்சவம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த 5ம் திகதி கோடியேற்றத்துடன் ஆரம்பமாகிய உற்சவம் இன்று சப்பறத்திருவிழா நடைபெற்றது. நாளை தேர்த்திரு விழாவும், மற்ற நாள் தீர்தோற்சவமும் நடைபெறும். நேற்று நடைபெற்ற வெட்டைத்திருவிழா எல்லோரையும் கவர்ந்தது. மேள, தாளம், ஆட்டம், பாட்டம் என்று ஊரே களை கட்டியது. கன்னிமார் ஆலயத்திலிருந்து புறப்பட்டு சொக்கர்வளவு ஆலயத்தில் வேட்டையாடுதல் இடம்பெற்றது. இப்படியான வித்தியாசமான நிகழ்வுகள் மக்களை ஆலயம் நோக்கி செல்ல வைக்கும் செயல்பாடாகும். இந்த நிகழ்வுகளை சிறப்பாக நடாத்திக்கொண்டிருக்கும் ஆலய நிர்வாகம் மற்றும் தொண்டர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. எதிர்காலத்தில் மேலும் சிறப்புற அமைய எல்லோரும் பாடுபடவேண்டும்.