ஊரங்குணை பிரதேசத்தின் தற்போதைய தோற்றம். updated 25-01-2014

ஒரு காலத்தில் பல நூறு மக்கள் வாழ்ந்த பிரதேசம் போரின் காரணமாக பெரும் பகுதி அழிக்கப்பட்டு தற்போது ஆமை வேகத்தில் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு செல்ல முற்பட்டாலும் இப்பிரதேச மக்கள் புலம்பெயர்ந்த காரணத்தால் பல வீடுகள் திருத்தப்படாமல் அப்படியே இருக்கின்றது. புலம்பெயர்ந்த மக்கள் திரும்புவதற்கு வாய்ப்பேதும் தற்போது தென்படவில்லை. இன்னும் பல காலங்களுக்கு இப்படியே தான் இருக்குமோ என்ற ஜயமும் நிலவுகின்றது. சில குடும்பங்கள் புதிததாக வீடுகளை அமைப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. எமது பயணம் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தின் பின்பகுதியில் ஆரம்பித்து இராசன் கடை வழியாக ஏழாலை வடக்கு பக்கமாக புண்ணியம் கடையை அடைந்து அதன் பின்னர் திரும்பவும் அதே வழியாக கட்டுவன் எல்லையில் உள்ள வைரவர் கோவிலை அடைந்து பின்னர் சில உட்பாதைகளின் காட்சியோடு பழைய இடத்தை அடைகின்றது.