குப்பிழான் உதய பொன்விழா ஆண்டில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் மேலதிக விபரங்கள் மற்றும் படங்கள். updated 27-10-2014

நீண்ட காலத்தின் பின்னர் குப்பிழான் கிராம உதய பொன்விழா ஆண்டில் கிராமத்தின் மைந்தரும் வள்ளலுமான சிங்கப்புர் க. கிருஸ்ணன் அவர்களின் பிறந்த நாளன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது.

காலை பாடசாலை மாணவர்களுக்கு பிறந்தநாளையொட்டி விசேட உணவு வழங்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு விழா ஆரம்பமாகி விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து சிங்கப்புர் க. கிருஸ்ணன் அவர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 5 அடி உயரமான சரஸ்வதி சிலை பிரதம விருந்தினர் திரு த. சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. பெயர்ப்பலகையை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு தி. தர்மலிங்கம் அவர்கள் திறந்துவைத்தார். தொடர்ந்து கல்வித்தெய்வம் சரஸ்வதிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மண்டபத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு மற்றும் தேவாரத்துடன் பரிசளிப்பு விழா ஆரம்பமானது.

எமது பாடசாலை மாணவிகளின் சிறப்பான வரவேற்பு நடனத்துடன் வரவேற்கப்பட்ட விருந்தினர்கள் புதிதாக திரைகள் பொருத்தப்பட்ட மேடைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஸ்ணசாமிக் குருக்களின் ஆசியுரையும் செல்வி ஞா. லக்சிகாவின் வரவேற்புரையும் இடம்பெற்று பாடசாலை அதிபரினால் அதிபர் அறிக்கை வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து விருந்தினர்கள் உரை இடம்பெற்று பரிசில் வழங்கல் நடைபெற்றது. சரஸ்வதி சிலையை அமைத்து உதவிய சிறபக் கலைஞர் திரு உதயகுமார் கஜேந்திரன் அவர்களுக்கும் கட்டட அமைப்பாளர் திரு க. காண்டீபன் அவர்களுக்கும் பழையமாணவனும் கிருஸ்ணன் அவர்களின் குடும்ப உறுப்பினரும் சரஸ்வதி சிலையை அமைப்பதற்கு முழுமூச்சாக செயற்பட்டவருமான நீர்வேலி சி.சி.அ.த.க. பாடசாலை அதிபர் திரு தி. ரவீந்திரநாதன் அவர்களால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு பிரதம விருந்தினர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து கிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாளையொட்டி கிராமத்தில் உள்ள 50 வறிய குடும்பங்களுக்கு தலா ரூபா 2000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் விழா நிறைவடைந்தது. இவ் விழாவில் வழமைக்கு மாறாக மண்டபம் நிறைந்த மக்கள் கூடியிருந்தமை சிறப்பம்சமாக இருந்தது. (வீடியோ பின்னர் அனுப்பி வைக்கின்றேன்.)

 

அதிபர்