1988ஆண்டு இடம்பெற்ற திருமணசடங்கின் போது எடுக்கப்பட்ட படங்கள்.

நாம் இந்த உலகத்தையே விலைக்கு வாங்க வேண்டும் என்ற மன ஆசையில் இரவு பகல் பாராமல் பம்பரமாய் வேலை செய்கின்றோம். சிலர் தூக்கத்தில் நாட்களை கழிக்கின்றனர் எது எப்படியாகிலும் காலம் வேகமாக ஓடுகின்றது. ஆம் 1988 இல் நடந்த அந்த திருமண நிகழ்வு நேற்று நடந்த மாதிரி தான் எம் எண்ணத்தில் தோன்றுகின்றது. ஆனால் 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. அந்தக் காலப்பகுதி எமது புலப்பெயர்வின் ஆரம்ப காலம் தான் அதன் பின்னர் தான் பெருமளவானோர் எமது தாய் நாட்டை விட்டு புலம்பெயர ஆரம்பித்தார்கள். அன்றைய காலப்பகுதியில் திருமணங்கள் ஆடம்பரமாக இருக்கமாட்டாது ஆனால் ஒரு நல்ல நிகழ்வுக்கு வந்தோம் என்ற ஆத்ம திருப்தி இருக்கும் சொந்தங்கள், அயலவர்கள், மிக நெருங்கிய நண்பர்கள் என்ற ரீதியில் தான் அழைப்பிதல் கொடுப்பார்கள். திருமணத்திற்கு முதல் கிழமை தொடக்கம் 4ம் சடங்கு வரை ஒரே கொண்டாட்டம் தான். இன்று எல்லாம் மாறிவிட்டது. ஆடம்பரமாக செலவு செய்கின்றார்கள் பெரிய திருமண மண்டபம், பெருமளவிலான மக்கள் ஆனால் வருகின்றவர்கள் எப்போ வீட்டை செல்வோமென்று யோசிக்கிறார்களே தவிர அதில் எந்தவிதமான சந்தோசத்தையும் அனுபவிப்பதில்லை. இன்று யார் ஆடம்பரமாக செலவு செய்கின்றோம், யாருடைய விழாவுக்கு கூடிய தொகையில் ஆட்கள் வந்தார்கள் என்பது தான் நடத்துபவர்களின் குறிக்கோள். மற்றும்படி வந்தவர்கள் சந்தோசமாக இருந்தார்கள் என்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்த விடயங்களில் தற்போது தாயகம் அல்லது புலம்பெயர் தேசம் இரண்டும் இப்போது ஒன்று தான் .

இன்று எவ்வளவோ விழாக்களுக்கு செல்கின்றோம் மற்றைய கிழமையே மறந்துவிடுகின்றோம். ஆனால் அன்றைய நாட்களை யாரும் மறந்தது இல்லை. இனிமையான அந்த நினைவுகள் இன்றும் எங்கள் இதயத்தை மெதுவாக வருடிவிடுகின்றது. இந்த விழாக்களில் புதிய சொந்தங்கள் உருவாக புதிய உறவுகளுக்கு அத்திவாரமும் போடப்படுகின்றது. அந்தவகையில் காலத்தால் அழியாத பொக்கிசங்களாக இந்த நிழல் படங்களை உங்கள் முன் வைக்கின்றோம்.

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player