1986 தொடக்கம் 1990 வரை இயங்கிய பிறைன் கல்வி நிலையத்தின் வரலாற்றுப் பதிவுஅன்பான உறவுகள் அனைவருக்கும் அன்பு கனிந்த வணக்கம். மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரையும் 23 ஆண்டு முற்பட்ட காலப்பகுதிக்கு எடுத்து செல்லவுள்ளோம். அந்த பசுமையான நினைவுகள் உங்கள் முன் ஒளிப்படங்களாக விரியவுள்ளன. 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எடுக்கப்பட்ட காட்சிகள். இதில் இருப்பவர்களில் சில பேர் இன்று எம்மோடு இல்லை. 1987 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரை எமது கிராமத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு கல்வி நிலையம் இருந்தது. அது தான் Brian Insitute. இதன் ஸ்தாபகர் திரு சிவா ஆசிரியர். இந்த பெயரில் தற்போதும் ஒரு கல்வி நிலையம் இயங்குகிறது.


பழைய வரலாற்றை நாம் புரட்டி போட்டோமானால் எமது கிராமத்தில் பல கல்வி நிலையங்கள் இயங்கி எமது மக்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. கல்வி நிலயங்களை நடத்தியவர்கள் பலர் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர தொடங்கியதால் அந்த கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் வேறு சிலர் கல்வி நிலையங்களை நடத்தினார்கள். 1986 ஆண்டு முதன் முதலாக எமது கிராமம் பாரிய இடப்பெயர்வை சந்தித்தது. இந்த இட்பெயர்வின் பின் அங்கிருந்த கல்வி நிலையங்கள் மூடப்பட. திரு சிவா ஆசிரியர் அவர்களின் முயற்ச்சியால் நடமாடும் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்வி நிலையம் ஆனது ஆரம்பத்தில் ஏழாலை அதன் பின்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இயங்கின. அதனோடு முதலாம் கட்ட ஈழத்திற்கான போர் முடிவடைய மீண்டும் எமது கிராமத்தில் பிறைன் கல்வி நிலையம் என்ற பெயரில் இயங்கியது. தரம் 6 தொடக்கம் 10 வரை மாணவர்கள் பயின்றார்கள், ஆரம்ப காலங்களில் எமது மாணவர்களில் அரைவாசிப் பேர் அயல் கிராமங்களில் படித்து வந்தார்கள். இந்த கல்வி நிலயம் அரம்பிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலானோர் எமது கிராம கல்வி நிலையங்களில் கற்றார்கள் அதோடு எமது அயல் கிராமமான ஏழாலை கிராமத்தில் இருந்தும் பெருமளவு மாணவர்கள் கல்வி கற்றனர். அப்படி பெருமளவு மாணவர்களுடன் இயங்கிய இந்த கல்வி நிலையத்தின் ஆயுட் காலம் 2ம் ஈழப் போரோடு முடிவுக்கு வந்தது.


அந்த இனிய நாட்களின் நினைவலைகள் பல இரவுகள் தூக்கமின்றி பலரையும் தவிக்கவைத்தது. கள்ளம் கபடம் இல்லாத அந்த இனிய இளமை காலத்தில் நாம் எவ்வளவோ குறும்புகளை செய்திருந்தோம், ஆசிரியர்களிடம் அடியும் வாங்கியுள்ளோம். ஆனாலும் ஒவ்வொரு நொடியையும் சந்தோசமாக அனுபவித்திருக்கின்றோம். காலம் செய்த கோலத்தால் எல்லாம் விரைவாகவே மாறிவிட்டது. நாட்டு நிலமை மிகவும் மோசமாக மாறியது. ஒவ்வொருதராக வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர தொடங்கினார்கள்.ஆனாலும் எமது உணர்வுகள் இன்னும் சாகவில்லை. வருடங்கள் போய் இருக்கலாம் உணர்வுகள் என்றும் இளமையாகவே இருக்கிறது. அறிவையும், ஒழுக்கத்தையும், சந்தோசத்தையும் கொடுத்த அந்த கல்வி நிலையம் இன்று இல்லாவிட்டாலும் ஒவ்வொரு மாணவனின் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இன்றும் பசுமையாக இருக்கிறது. இன்று 23 வருடங்கள் கடந்து விட்டது, இந்த 23 ஆண்டு காலப்பகுதியில் எமது பழைய நண்பர்களை சந்திக்கவேயில்லை. எமது ஆயுட்காலத்தில் இது சாத்தியமோ தெரியாது. ஆனாலும் இப்படியான படங்களை பார்ப்பதன் மூலம் ஒரு திருப்தி ஏற்படுகிறது. இந்த படங்கள் ஒவ்வொரு பகுதியாக வெளிவரவுள்ளது. அதன் பகுதி1, பகுதி 2 இங்கே தரப்படுகிறது. படங்களை தந்து உதவிய திரு சிவா ஆசிரியர் அவர்களுக்கும், திரு மதி அவர்களுக்கும் நன்றிகள்.

புகைப்படத்தொகுப்பு 1
புகைப்படத்தொகுப்பு 2