மரண அறிவித்தல் 

திரு இளையதம்பி வீரவாகு

தோற்றம் - 14 - 11 - 1939

மறைவு - 21-09-2011

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி வீரவாகு (21.09.2011) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளைய தம்பி தெய்வானை தம்பதியரின் இளைய மகனும் காலஞ்சென்ற கந்தையா தங்கம் தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற ஞானமணியின் அன்புக் கணவரும் ஞானராஜா (கனடா), கிருஷ்ணராஜா (ஆசிரியர், யா/மானிப்பாய் இந்துக்கல்லூரி, உதவும் கரங்கள் அமைப்பின் குப்பிழான் வடக்கு பொறுப்பாளர்), ஜெனனி (கனடா), செந்தில்கெளரி (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும் செல்வரஜி (கனடா), றஞ்சித்குமார் (கனடா), முரளிதரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனும் வினுசிகா, ஜனோபா , மதுரன் , மாறன் , அதிஷ், அதுசன் , அஸ்வின் , கயல்விழி , கனிமொழி ஆகியோரின் அன்புப் பேரனும் நல்லபிள்ளை, காலஞ்சென்ற சண்முகம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.09.2011) வியாழக்கிழமை பி.ப.2 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் திருநெல்வேலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

குகன் — இலங்கை - 0094776513433, 0094213217953

தகவல்
மனை