மரண அறிவித்தல்

  திருமதி தங்கம்மா இராமலிங்கம்
 
தோற்றம் 08-06-1938 மறைவு 12-06-2015


குப்பிழான் தெற்கு மின்திரையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா இராமலிங்கம் அவர்கள் 13-06-2015 சனிக்கிழமை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு மற்றும் செல்லம் தம்பதிகளின் கனிஸ்த புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தர் மற்றும் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற கந்தர் இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்.

சுப்பிரமணியம் (இலங்கை), காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பரமேஸ்வரி (இலங்கை), இராஜரட்ணம் (செல்வம், ஜேர்மனி) மற்றும் விமலாவதி (கலா,கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்.

தயானந்தராஜா, கமலராஜினி(ராஜி) மற்றும் கனகசபாபதி (கோபால்) ஆகியோரின் அன்பு மாமியாரும்
பிரணவதரன் (பிரணவன், பிரான்ஸ்), ஜசீதரன், சுகன்ஜா, கம்ஷா, யசோதரன், சராதரன், சார்லினி, சவுதன் ஆகியோரின் அன்பு பேத்தியும்.

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, அன்னம்மா, பொன்னம்மா மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் சகோதரியும்.

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சின்னையா, மற்றும் கமலா (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 15-06-2015 திங்கட்கிழமை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் குப்பிழான் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுப்பிரமணியம் (இலங்கை) - 0094213001919
பரமேஸ்வரி (இலங்கை) - 0094777364963
இராஜரட்ணம் (ஜேர்மனி) - 00492981908487
விமலாவதி (கனடா) - 006477976665, 0014169534323
பிரணவதரன் (பிரான்ஸ) ;- 0033123666600124
யசோ - 00947784488450