மரண அறிவித்தல்
திரு மாணிக்கர் தம்பிஜயா
தோற்றம் 07-09-1928 மறைவு 04-06-2012

குப்பிழானை பிறப்பிடமாகவும் மதுரை இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு மாணிக்கர் தம்பிஜயா (ஓய்வுபெற்ற ஆசிரியர் அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலை) அவர்கள் 04-06-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற மாணிக்கர், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற சுப்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும். தங்கம்மா (பரமி) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்புமலர் (இந்தியா), அன்புராஜா (கனடா)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரன், ஜெயிந்தா ஆகியோரின் மாமனாரும்,

காலம் சென்றவர்களான சின்னத்துரை (ஆசிரியர்), பார்வதி, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும், மனோஜா, ஞானசலாகரன், வனஜா, அஜந்தன், அகிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும், மானுஜா, றிசிதரன் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் 05-06-2012 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 3 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர

தொடர்புகளுக்கு

அன்புமலர் (இந்தியா) - +914524368884
அன்புராஜா (கனடா) - +00604 3257252