மரண அறிவித்தல்

  திருமதி தையல்நாயகி அருள்பிரகாசம்
 
தோற்றம் 00-00-1937 மறைவு 01-02-2015


திருநெல்வேலி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தைத் தற்காலிக வசிப்பிடமாகவும், தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருள்பிரகாசம் தையல் நாயகி அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(01.02.2015) தனது 78 ஆவது வயதில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அருள்பிரகாசத்தின் அன்பு மனைவியும், செல்வநாயகம் - குப்பிளான் ( ஓய்வு நிலை நில அளவைப் புல உதவியாளர்), அருள் நாயகி(கோப்பாய்), அருள்மாலினி-பிரான்ஸ் (யாழ்.போதனா வைத்தியசாலையின் ஓய்வுநிலைத் தாதி உத்தியோகத்தர்), அருட் செல்வி-கனடா (முன்னாள் ஆங்கில ஆசிரியர்), அருள் மலர்-இலண்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இந்திரவதனா, குலசபாநாதன், பாலசுப்பிரமணியம், சற்குணராஜா மற்றும் காலஞ் சென்ற பிரபாகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்,

கிரிசாந்(இந்தியா), ரவிசாந் (ஊடகவியாளர்),சசிகாந், கயன், சுரபி, சயந்தன், அபிராமி, அகல்யா, சுபேந்தா, நிகேசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-வை.செல்வநாயகம்(மகன்)
“இந்திரவவனம்”
குறிஞ்சிக்குமரன் வீதி,
குப்பிளான் தெற்கு
குப்பிளான்.

தொடர்புகளுக்கு

வை.செல்வநாயகம்(மகன்)-0212059318, 0750437833.
அருள்நாயகி(மகள்)-0777114184.
அருட்செல்வி(மகள்)-0014168364504.