மரண அறிவித்தல்
  திருமதி புவனேஸ்வரி துரைராஜா  
தோற்றம் மறைவு 16-03-2014


குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சென்னையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி புவனேஸ்வரி அவர்கள் 16.03.2014 ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார்.

இவர் துரைராஜா(இளைப்பாறிய நில அளவையாளர் -ஒமான்)அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தையா வாத்தியார், இராசம்மா ஆகியோரின் மகளும்,

கார்த்திகா(அமெரிக்கா), கலாநிதி பிருந்தா(அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

விபவ் அவர்களின் மாமியாரும்,

சித்தாந்தரத்தினம்  கலாநிதி க. கணேசலிங்கம்(அவுஸ்திரெலியா), திலகவதி கமலாகரன்(கனடா) , சிவனேஸ்வரி சின்னராஜா(கனடா), சிறு வயதில் காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தகவல்
க.அரவிந்தன்