மரண அறிவித்தல்

தோற்றம்

06-11-1999

மறைவு

09-12-2010

செல்வன்  மதுசன் விமலஸ்ரீ


குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வன் மதுசன் விமலஸ்ரீ 9.12.2010 அன்று இறைவனுடன் கலந்து விட்டார்...

விமலசிறி கவிதா அவர்களின் அன்பு மகனும்.  அமரர் சிவனாந்தசோதி, தவமணியின் (இலங்கை)  அன்பு பேரனும். மதுசியா, அபி் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், ஜெயசோதி- ஜெயசுதா (சுவிஸ்),   சுகிதா-கீசவன் (சுவிஸ்), விஜிதா,குரு ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.

ராகுல், அஷ்னாராவித்,அபிசன்,அபினன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும் ஆவர். சுருதி, ஜீவித், சகி, அனுசன் ஆகியோரின் மைத்துனனும் ஆவர்.

பெரியம்மா சிவஞானவதி, சோதி, ரதி. பெரியப்பா பாக்கியம், தனசிங்கம்,சந்திகுமார். மாமி சுதாசி ஆகியோரின் அன்பு செல்லமும் ஆவார்.
 
கண்ணுக்குள்ளே உன் உருவம் வந்து வாட்டுதாடா...
கண்ணும் இடம் எல்லாம் உன் உருவம் வந்து என் இதயத்தை
கொல்லுதாடா.. பத்து மாதம் உன்னை தவம் இருந்து நான் பெற்று எடுக்கவில்லையாடா... என்னாலே உன் பிரிவை தாங்க முடியவில்லை. என்றால். உன்னை பெற்றவள் நிலை என்ன ஆக்கும் என்று நீ சிந்திக்கமால்
மண்ணைவிட்டு விண்ணுலாகம் போனாயே...
கள்ளம் கபடம் இல்ல உன் சிரிப்பை நிறுத்தி வைக்க இறைவனால் எப்படி முடிந்தது... உன் மழலை மொழியை நான் இனி என்று கேட்பேன்... தவிக்குதடா.. என் உள்ளம்..
சொல்லி அழுதால் தீராதடா என் கவலை....  பாவிகள் பல மண்ணில் இருக்க உன்னை வந்து அழைத்தனே கொடிய அரக்கன்.... மறுபிறவியில்  நம்பிக்கை இல்லையாடா.. இருந்தும் விருப்புதடா மறுபடியும் நீ மண்ணில் வந்து பிறக்க..
எங்கள் வீட்டில் வந்து மறுபடியும் நீ  பிறந்து விடு... எங்களை பிரிந்து போகாதே............
                                                                  
                  
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சுகி.....0041-565081969 
விஜி....0041566213839

தகவல்  பெரியம்மா சிவா 0044-2072239838