மரண அறிவித்தல்

 
புலவர் மணி விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் 
 
தோற்றம் 12-11-1931 மறைவு 05-03-2016

 

ஈழத்தின் மூத்த ஆன்மீக வாதியும், குப்பிளான் தந்த பெண் புலவருமான புலவர் மணி விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் தனது 84 ஆவது வயதில் நேற்றுச் சனிக்கிழமை காலமானார்.


அன்னார் காலம் சென்ற சீனியர் சின்னையா, உமையாள் தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும், பொன்னம்மா கணபதிப்பிள்ளை, காலம் சென்ற சிவதொண்டன் சி. நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். 

மேலும் தவராசா ( இலண்டன்), தேவராசா (இலண்டன்), விக்கினேஸ்வரி (குப்பிளான)், சரோஜாதேவி (நந்தினி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், சிவயோகன் ( பிரான்ஸ)் , சிவகணநாதன் (கணன்- பிரான்ஸ்), சிவாஜினி (பிரான்ஸ்), சிவகெளரி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார். 

அன்னாரது இறுதிக் கிரியைகள் யாவும் நாளை திங்கட்கிழமை (07-03-2016) சிவராத்திரி நன்னாளில் குப்பிளானிலுள்ள அவரது உறவினரது  இல்லத்தில் இடம்பெற்றுப் புகழுடல் தகனக் கிரியைகளுக்காகக் குப்பிளான் காடகடம்பை இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

 

இத் தகவலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- க.தேவராசா (பெறாமகன் - இலண்டன்)   

 

 

தொடர்புகளுக்கு:-

க.தேவராசா (இலண்டன்)- 00447574266308.
க.தவராசா (இலண்டன்)- 00443330113809
சிவகணநாதன் (கணன்)- 0033148808901
சி.ஆனந்தன் (குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயத்தின் பொருளாளர்) - 0212059361