மரண அறிவித்தல்

 

 

  திரு மயில்வாகனம் குணரத்தினம் (குணம்)  
தோற்றம் 09 -01-1941 மறைவு 12-02-2017


நவக்கிரியை பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட திரு மயில்வாகனம் குணரத்தினம் (குணம்) 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இரத்தினம் அவர்களின் அன்பு மருமகனும்,


மீனாம்பிகை (அப்புப்பிள்ளை) அவர்களின் அன்பு கணவரும், குணவதி, மாலா, ஜெயா(லண்டன்), சுதா, தவக்குமார்(கனடா), தெய்வகுமார்(பரீஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,


குஞ்சு, பஞ்சலிங்கம், உமாதேவி, அன்னலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துணருமாவார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13-02-2017 திங்கட்கிழமையன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக குப்பிழான் கடா கடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தகவல்
குடும்பத்தினர்

 

குடும்பத்தினர் - 0094771595255
அன்னலிங்கம் (டென்மார்க்) - 004548445269