மரண அறிவித்தல் 

திரு வீரவாகு கணிதசிங்கம் (கோவிந்தப்பா)

தோற்றம் - 10 - 01 - 1925

மறைவு - 06 - 06 - 2011

குப்பிழான் காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் கோணேஸை ( Gonesse) வதிவிடமாகவும் கொண்ட திரு வீரவாகு கணிதசிங்கம் (கோவிந்தப்பா) அவர்கள் 06-06-2011 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற வீரவாகு குட்டிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற முத்தையா தங்கம்மா அவர்களின் பாசமிகு மருமகனும்.

அமரர் செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும். அமரர் செல்லையா பருவதம் அவர்களின் அன்பு மைத்துணரும்.

புவனேந்திரன் (கனடா), ஜெயபாலன் (லண்டன்), சிவதேவன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும். சிவகுமார், கேதீஸ்வரி, நந்தினிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும். திருமதி சரஸ்வதி துரைராஜா (கனடா) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.

கிரிதரன், தர்மினி, தர்சிகா, சிந்துஜா, சிவாஜித்தன், சிஜேதன், சிதூஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-06-2011 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 10.30 மணி வரை Chambre mortuaire hopital 1 , av du merechal juin, 95500 Gontsse என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 11.30 மணிக்கு Crematorium des joncherolles 95, rue marcel sembat, 93430 Villetaneu என்னும் இடத்தில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு
புவனேந்திரன் (கனடா) - 0019059469795
ஜெயபாலன் (லண்டன்) - 00447846709119
சிவதேவன் (பிரான்ஸ்) - 0033139854924, 0033663806288
தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், தாய்.