மரண அறிவித்தல் 

திரு நடராஜா ஜெயராஜன்

தோற்றம் - 03 - 02 - 1957

மறைவு - 25 - 05 - 2011

குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு நடராஜா ஜெயராஜன் அவர்கள் 25-05-2011 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற நடராஜா (ஓய்வு பெற்ற எழுதுவினைஞர்) நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும். இரத்தினசிங்கம் (இளைப்பாறிய ஆசிரியர்) பூமணி (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும், ராகினி (வதனி) அவர்களின் அன்புக் கணவரும்.

கீதாஞ்சலி, ஜெயகஜன், ஜனனி, காயத்திரி, றமணி, ஜெயகுலனின் அன்புத் தந்தையும். றிஸ்வின், றியா ஆகியோரின் அன்பு பேரனும்.

ஜெயக்குமார் (ஜேர்மனி), சந்திரகுமார்(அவுஸ்ரேலியா), ஜெயக்குமாரி(ஜேர்மனி), ஜெயராஜகுமாரி (இலங்கை), இந்திரகுமார் (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

சாந்தகுமார்(இந்தியா), காலம் சென்ற சாந்தகுமாரி(ஜானகி), வாசுகி (கனடா), ஆனந்தகுமார்(ரூபன்,சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-06-2011 சனிக்கிழமை் மாலை 4.00 மணி தொடக்கம் மாலை 9.00 மணிவரை Highland Funeral Home & Cremation Centre, 3280 Sheppard Avenue East, Sheppard Ave. & West of Warden Avenue என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதே மண்டபத்தில் 05-06-2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஈமைக்கிரிஜைகள் நடைபெற்று, அதன் பின்னர் St. John's Norway Cemetery, 256 Kingston Road, Scarborough, ONT, M1M 1N5 என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
வாசுகி

தொடர்புகளுக்கு
ராகினி (கனடா) - 0016473445326
ஜெயகஜன் ( கனடா) - 0016478892147
கீதா (கனடா ) - 0016472921981
ஜெயகுமாரி(ஜேர்மனி) - 00493070124296
இந்திரகுமார் (கனடா) - 0014165363434
வாசுகி (கனடா) - 0016473027438
ஆனந்தகுமார்( சுவிஸ்) - 0041435360095
தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், தாய்.