மரண அறிவித்தல்

  திருமதி இந்திராவதி வசந்தகுமார்
 
தோற்றம் 06-01-1958 மறைவு 02-06-2014


குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இந்திராவதி வசந்தகுமார் அவர்கள் 02. 06.2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்‌ந்தார்.

அன்னார் வசந்தகுமாரின் (ஓய்வுபெற்ற கிராமஅலுவலர், தவிசாளர்- நல்லூர் பிரதேசசபை) பாசமிகு துணைவியும், காலஞ்சென்ற கந்தையா (வர்த்தகர் ஹாலி-எல கந்தையா) மற்றும் சிதம்பரம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ் சென்றவர்களான பரமலிங்கம் இராசரத்தினம் அவர்களின் அன்பு மருமகளும்,

வஜீந்த் ( ஆசிரியர்), நிருஷா (கனடா), வசந்துஷா (ஆசிரியை), வானோஜன், வவீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரகாஷின் அன்பு மாமியும், காலஞ்சென்ற கனகசபை, மற்றும் பரமேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி, மற்றும் அருணகிரி, கிருஷ்ணவேணி, பரமகுரு, சரோஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கமணி, செல்லத்துரை, காலஞ் சென்றவர்களான சின்னத்துரை, தங்கராசா மற்றும் வேவி, மன்னவராசன், ராணி, சுதந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இராமகிருஷ்ணா பாடசாலை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில் எனும் முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 03.06.2014 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்‌டுக்கொள்கிறோம்.


தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

வசந்தகுமார் (இலங்கை) - 0094777110842
பரமேஸ்வரி (இலண்டன்) - 00442085719564
கிரி (பிரான்ஸ்) - 0033952808670
சறோ (சுவிஸ்) - 0041442423815