மரண அறிவித்தல்
திரு வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன், கண்ணாடி நாதன்)
தோற்றம் 19-10-1968 மறைவு 13-07-2012

யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசெர்னை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன் , கண்ணாடி நாதன்) 13-07-2012 வெள்ளிக்கிழமை அகாலமரணமானார்.

அன்னார் அமரர் வீரசிங்கம் திருமதி செல்வரத்தினம் (இலங்கை) ஆகியோரின் இளைய மகனும் திருச்செந்தூர்நாதன் இலங்கை அமரர் இராஜஸ்வரி ஆகியோரின் மூத்த மருமகனும்.

சுதாஜினி (சுசி)யின் அன்புக் கணவரும் சர்மினி, சுஜீபன், சிந்துயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

இராசமணி (கனடா), தங்கவடிவேல் (இலங்கை), அமரர் சிவமணி, சக்திவேல் (கனடா), பரமசிவம் (கொலன்ட்), சுந்தரலிங்கம் (கனடா) ஆகியோரின் இளைய சகோதரரும்.

அமரர் சிவபாதம், கனகம்மா (இலங்கை), அமரர் திருநாவுக்கரசு, றாகினி (கனடா) , உதயகுமாரி (கொலன்ட்), ஜெயந்தி (கனடா) சுதாகரன் (பிரான்ஸ்), சுபாஜினி (சுவிஸ்), சுகிர்தா (இலங்கை), சுகந்தன் (இலங்கை), சுதர்சன் (இலங்கை), சுகன்யா(இலங்கை), சுதர்சினி (இலங்கை), சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

விமலாம்பிகை (பிரான்ஸ்), சிறிஸ்கந்தராசா (சுவிஸ்), விஜயன் (இலங்கை), அருள்ரூபன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

ஈமைகிரிககள் நடைபெறும் விபரம்

01.08.2012 புதன்கிழமை 10.௦௦ மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நாளை மறுதினம் வியாழக்கிழமை (02.08.2012) 11.௦௦ மணி முதல் ஈமைக் கிரிஜைகள் நடைபெற்று பின்னர் அன்னாரின் பூதவுடல் தகனம் 14.௦௦ மணிக்கு நடைபெறும்.

மயான விலாசம்
லுசேர்ன் மயானம்
Friedetal Strasse-60
6004 Luzern

(லுசேர்ன் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து 18 இலக்க பஸ் மூலம் செல்லவும்)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அன்பு 0041 78 330 11 02
சிவனாமன் 0041 78 788 68 20
மனோ 0041 76 310 75 75