குப்பிழான் விக்கினேஸ்வரா கிராம அபிவிருத்தி மன்றம் விடுக்கும் வேண்டுகோள்குப்பிழான் வாழ் அன்புக்குரியவர்களுக்கான அவசர வேண்டுகோள்.
உங்களின் கடிதம்கள், தொலைபேசி அழைப்புக்கள், நேரடி உரையாடல்கள் மூலம் எமது கிராமத்தை மீள உருவாக்கம் செய்ய துடிக்கும் எங்களுக்கு உங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யுங்கள். தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது குடும்ப அங்கத்தவர்கள் இணைந்தோ உங்களால் செய்ய முடிந்ததை செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களின் ஞாபகார்த்தமாக, பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்களின் போது தாய் மண்ணில், செம்பாட்டு மண்ணில் தவழும் கிராமத்து அமைப்புக்களையும் கை கொடுத்து தூக்கி விடுங்கள்.


கிராமத்தின் அவசர தேவைகள்


சனசமுக நிலையத்தின் வீதியோர 30 அடி மதில் கட்டல், பெயர் வளைவு, கேற் போடல் - ரூபா 100,000.
சனசமூக நிலையத்திற்கு மின்சார வசதியினை ஏற்படுத்தல் - ரூபா 50,000
கிராம முன்னேற்றச் சங்க கூட்டங்கள், சந்திப்புக்களுக்கு - 50 பிளாஸ்ரிக் கதிரை, 01 அலுமாரி - ரூபா 50,000
பாடசாலை அழிவடைந்த முன் மண்டபம் 110 அடி - 1ம் மாடி வேலைகள் - ரூபா 15,00,000.
மழை காலங்களில் மயானத்தில் எரிப்பதற்கு கொட்டகை போடல் - ரூபா 2,00,000,
விக்கினேஸ்வரா விளையாட்டு மைதானத்தின் தெற்குப் பகுதி அரைவாசிக்கு, நெற்வலை அடித்தல் - ரூபா 1,50,000
வன்னிப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள எமது கிராமத்து உறவுகளுக்கான உதவிகள்.
தாய், தந்தையரை இளந்த பிள்ளைகள் அல்லது வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பிள்ளைகளிற்கான உதவிகள்.