ஊரில் இருந்து ஒரு கடிதம்.

மக்களை நேசியுங்கள், மண்ணை நேசியுங்கள் கிராமத்தை நேசியுங்கள் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். கடந்த முப்பது வருட போரின் வடுக்களைத் தாங்கிச் சொல்ல முடியாத துயரங்களோடும், பெருமூச்சுகளோடும் எழுந்து நிற்க முயலும் எமது கிராமத்தின் நிறுவனங்களுக்கும், ஏதிலிகளானோருக்கும், தாய் தந்தையை இழந்தோருக்கும் மாணவர்களுக்கும் உறவுக் கரம் நீட்டி எழுந்து நிற்க செய்யுங்கள் அவர்கள் நாளை மண் வாசனையை உலகறியச் செய்வார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

அன்புடன்
தி.சசிதரன் ஆசிரியர்.

குறிப்பு -

நாம் பிறந்து, தவழ்ந்து, நடந்து, வாழ்ந்த எமது மண்ணின் வளர்ச்சிக்கு உதவி செய்வது அனைவரினதும் கடமை ஆகும். நீங்கள் பணத்தை அனுப்பு முன்பு அந்த அமைப்பு பற்றிய விபரங்களை நன்றாக அறிந்து கொள்ளுங்கள், அந்த பணம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா, நீங்கள் கொடுத்த வேலைத் திட்டம் சரிவர நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்யுங்கள். உங்களால் அதை உறுதி செய்ய முடியாவிட்டால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் நாம் அதற்கான உதவிகளை செய்ய காத்திருக்கிறோம். நீங்களும் ஏமாந்து அங்கு ஒரு ஊழல் சமுதாயம் உருவாக நீங்கள் காரணமாய் இருக்காதீர்கள்.

kuppilanweb