குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் விடுக்கும் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி

அன்பின் குப்பிழான் கிராம மக்கள் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். இயற்கை தெய்வமாகிய சூரிய தேவனுக்கு நன்றி செலுத்துமுகமாக கொண்டாடப்படும் இன் நாள், தமிழுக்கு முதலாம் திகதி ஆகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் பெரியோர்கள். இந்த தை பிறப்போடு உள்நாட்டு போரின் காரணமாக அழிந்து போயுள்ள எமது கிராமத்தை கட்டி எழுப்ப வேண்டிய கடமை எம் கண் முன்பே நிற்கிறது. கடந்த வன்னிப் போரில் பாதிக்கப்பட் எமது உறவுகள் எமது உதவிக்காக காத்து நிற்கிறார்கள். எமது விக்கினேஸ்வரா மன்றமானது கடந்த காலங்களில் போர் நிலமை காரணமாகவும், அங்கு ஒழுங்கான நிர்வாகம் இன்மையாலும் ஊரின் அபிவிருத்தியில் பெருமளவு உதவிகள் செய்யமுடியாமல் போனதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இன்று அங்கு ஓரளவு சுமூகமான நிலையும், எமது கிராம அபிவிருத்திக்கென்று ஒழுங்கான நிர்வாகமும் செயற்பட்டு வருகின்றது. இந்த நல்ல சூழ் நிலையை நாம் எல்லோரும் சரியாக பயன்படுத்த வேண்டும். அதனால் எமது மன்றமானது இந்த தை முதல் கொண்டு அடுத்த மூன்று வருடங்களை குப்பிழான் கிராம அபிவிருத்தி ஆண்டாக பிரகடனம் செய்கிறது. எமக்கு பல கடமைகள் இருந்தாலும் இந்த ஆண்டு செய்யப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் வருமாறு. பாடசாலை பிரதான மண்டபம், பாடசாலை மலசல கூடம்,வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, சுடலை புனரமைப்பு, வாசிகசாலை புனரமைப்பு. கடந்த காலங்களில் எமக்கு பொருளாதார உதவிகள், நாம் நடத்தும் நிகழ்வுகளிலும் பங்கு பற்றி ஆக்கமும் ஊக்கமும் வழங்கினீர்கள். ஒவ்வொரு தடவையும் நாம் உங்கள் கதவுகளை தட்டும் போதும் மனம் கோணாது அன்புடன் வரவேற்று உதவிகளை வாரி வழங்கினீர்கள். அதற்கு எமது இதய பூர்வமான நன்றிகள். சிறு துளி பெரு வெள்ளம் நாம் ஒன்றாய் சேர்ந்து ஒற்றுமையாக எமது கிராமத்தை முன்னேற்றுவோம் என்று இந்நாளில் உறுதி எடுத்து கொள்வோம்.

அன்புடன்
குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன்.