விசேட நிர்வாக கூட்டம் தொடர்பான அறிக்கை மற்றும் தவறுக்கு வருத்தம் தெரிவித்தல். updated 28-05-2015

குறிஞ்சிகுமரன் சனசமூகநிலைய விசேட கூடம் ஆனது 16.05.2014 அன்று திரு சோ.பரமநாதன் தலைமையில் சனசமூக முன்றலில் நடைபெற்றது இக் கூடத்திலே விசேடமாக ஆராயபட்ட விடயங்களாக

01 . சனசமூக நிலைய தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை மற்றும் செயற்பாடுகள்

02. சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ஏற்பட்ட தவறுகள்.

03. சனசமூக நிலையத்துக்கு உடாக மேற்கொள்ப்பட்டு வரும் முன்பள்ளி செயற்திட்டம்

போன்றன தொடர்பாக விசேட கூடத்தில் ஆராயப்பட்டன. இதிலே முக்கியமாக சனசமூக நிர்வாகத்தினரால் குப்பிளான் இணையத் தளங்களுக்கு   இறுதியாக அனுப்பட்ட அறிக்கையில் சனசமூக நிலைய நிர்வாகம் சார்பாக திரு கணேசலிங்கம் மோகன் அவர்களால் சேர்கபட்ட ஒரு தொகை நிதி நிர்வாகத்துக்கு இதுவரை கொடுக்கப்படவில்லை என்று அறிக்கை இடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக திரு மோகன் அவர்கள் சார்பாக திரு ம. செல்வராஜா அவர்கள் கூறும் போது மோகன் அவர்கள் கடந்த 2009 தன் பின்னர் யாரிடமும் அவ்வாறு பணம் ஏதும் சேர்க்கவில்லை எனவும் அவர் தனது சொந்த செலவிலே தான் பத்திரிக்கை போட்டதாகவும் கூறிருந்தார்.

இது தொடர்பாக குறிஞ்சிகுமரன் சனசமூக நிலையத்தினர் சார்பாக கூறும்போது கடந்த காலங்களில் திரு மோகன் அவர்கள் தனிபட்ட நிதியில் இருந்து பத்திரிகை போட்டு இருப்பின் அதனை நிர்வாக ரீதியாக எந்த தெரியபடுதல்களையும் மேற்க்கொள்ளவில்லை, அத்துடன் திரு மோகன் அவர்கள் பத்திரிகைக்காக கொடுக்கும்  பணத்தினை நிறுத்தும் போது எந்த தெரியபடுத்தல்களையும் செயவில்லை எனவும் கூறினர். அத்துடன் இது தொடர்பாக எமது நிர்வாகம் சார்பாக திரு மோகன் மற்றும் அவர் குடும்பம் சார்பாக அவர்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு எமது சனசமூக நிலைய நிர்வாகம் சார்பாக மன்னிப்பு கேட்டுகொள்கின்றோம்.

மற்றும் கிராமத்துக்கு ஒரு மில்லியன் அரச திட்டத்தின் பிரகாரம் எமது கிராமம் சார்பாக ஒதுக்கபட்ட ரூபா 500,000 நிதியினையும் கொண்டு மேலதிக தேவைப்படும் நிதியினை கிராம சார்ந்து சேர்பதுடன் , புலம் பெயர் எமது உறவுகளிடம் இவ் முன்பள்ளி தொடர்பான நிதி சேர்பதற்கு திரு கணேசலிங்கம் மோகன் அவர்களுடன் கலந்து பேசி இது தொடர்பான செயற்படுதல்களினை மேற்கொள்வதாக திரு ம.செல்வராஜா அவர்களினால் கூறபட்டது.

எனவே இவ் முன்பள்ளி தொடர்பாக யாராவது நிதி உதவி செய்யவிரும்பினால் திரு க. மோகன் உடனோ அல்லது எமது செயற்பாட்டாளர் திரு கு . உதயகுமார் ( 0779173918) எனும் தொலை பேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளும் ஆறு வேண்டிகொள்கின்றோம்.

                              நன்றி