குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் தேவஸ்தான திருப்பணிகான பங்களிப்பு". updated 29-09-2015

குவலய விழி என அழைக்கப்படும் யாழ் மாவட்டத்தில் அழகிய கிராமமே குப்பிளான். சைவமும் தமிழும் இசையும் தழைத்தோங்கிய கிராமம். உலக சைவ மக்களால் போற்றப்படும் காசிவாசி செந்தில் நாதையரும், இசைவல்லுனர் செல்லத்துரையும், சித்தர்களும் வாழ்ந்த கிராமம் குப்பிளான் வாழ் மக்களின் குலதெய்வமாகவும், ஆரம்பகால கோயிலாகவும் விளங்குவது குப்பிளான் கற்கரை விநாயகர். பல்லாயிரக்கான அடியார்களின்குறை தீர்த்து அருள் பாலித்துவேண்டுமென வேண்டிய வரத்தை அள்ளி கொடுப்பவர் " கடவுளை நம்பினோர் கைவிடப்பாடார்" என்ற வாக்கியத்திற்கு அமைய எமது ஊர் மக்களின் உண்மையும் அனுபவமும்.

சைவசமய ஆகம கிரிகை விதி முறைப்படி ஓவ்வொரு ஆலயமும் 12 வருடத்திற்கு ஓரு முறையாவது கும்பாபிசேகம் செய்ய வேண்டும். அந்த வகையில் எங்களுடைய கற்பக விநாயகர் ஆலயம் 14 வருடங்களாகியும் கும்பாபிசேகம் செய்யப்படாமல் இருப்பது குல தெய்வமாக வழிபட்டோருக்கும், ஊர் மக்களுக்கும் தீமை விளைவிக்கும் என்பதை "முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்கு தீங்குள வாரி வளம் குன்றும்" திருமந்திர பாடல் விளக்குகின்றது. ஆகவே எமது ஆலயத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பல திருத்தவேலைகளும், கர்ப்பக்கிரகம் புதிதான கட்டிடம் கட்டுதலும், கூரை வேலகளும் மற்றும் பல் வேலைகள் ஆலயத்தில் இடம் பெற வேண்டியிரிருக்கின்றது கிட்ட தட்ட 2.5 கோடி நிதி தேவைப்படுகின்றது

ஆகவே குப்பிளான் வாழ் மக்கள் அனைவரது குல தெய்வமாக விளங்கும் கற்பக விநாயகர் அனைத்து அடியார்களும் எந்தவிதமான முரண்பாடுகளும், வேறுபாடுமின்றி "சிறு துளி பெரு வெள்ளம்" என்பதற்கு இணங்க ஆலய திருப்பணி வேலைகளை எல்லோருடைய பங்களிப்பிலும் தாமதமின்றி செய்து மகா கும்பாபிசேகத்தை நிறை வேற்றி கற்பக விநாயகப்பெருமானின் திருவருள் பெறுவோமாக.

பிரித்தானியா தொடர்புகளுக்கு.
திரு கணேஸ்குமார் - 07411354315
திரு சச்சிதானந்தன் - 07983421889
திரு மோகனதாஸ் - 07725868320

மற்றைய நாடுகளுக்கான தொடர்பிலக்கம் பின்னர் தரப்படும்.

படங்கள்
சி.திசாந்தன்