மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மொழி, கலை, கணனி வகுப்புக்களை ஆரம்பிக்கும் குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம் (Photos)

பல்துறை சார்ந்த அறிவை மாணவர்கள் மத்தியில் விருத்தி செய்யும் நோக்குடன் யாழ். குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இலவச மொழி, கலை மற்றும் கணனி சார்ந்த விரைவில் இலவச வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கனடா விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் இதற்கான நிதி அனுசரணையை வழங்கியுள்ளனர்.

தரம்-01 முதல் 03 வரையான மாணவர்கள், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், க.பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் க.பொ.த உயர்தரம் கற்றுக் கொண்டிருப்பவர்கள் ஆகியோர் மொழிப்பாடங்களுக்கும், தரம்-01 முதல் 13 வரையான மாணவர்கள் கலைப்பாடங்களுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களாவர்.

யாழ். முன்னணி ஆசிரியர்களினால் போதனைகள், செய்முறைகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் வசதிக்கேற்ப நேர அட்டவணை கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்ப முடிவுத் திகதி இந்த மாதம்-10 ஆம் திகதியாகும்.

விண்ணப்பப் படிவங்களை வார நாட்களில் மாலை-05 மணி முதல் 06 மணி வரை குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு அருகிலுள்ள சனசமூக நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

குறித்த வகுப்புக்களில் குப்பிளான் கிராம மாணவர்கள் மட்டுமல்லாமல் அயற் கிராமங்களான ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, ஈவினை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற முடியுமென மேற்படி சனசமூக நிலையத்தின் தலைவரும், உடுவில் பிரதேச கலாசார உத்தியோகத்தருமான பொன் சந்திரவேல் தெரிவித்தார்.

 

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ-ரவிசாந்-)