குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா விடுக்கும் பணிவான வேண்டுகோள். updated 06-02-2016

புலம் பெயர்வாழ் அனைத்து குப்பிளான் மக்களே உங்கள் உதவி இப்பொழுது எமக்கு மிகவும் அவசியமாகிறது. எமது மண்ணில் அமையும் இரண்டாவது மாடி கட்டிடத்துக்கான வேலைகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மிகவிரைவில் முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எமக்கு பெருமளவு நிதி உதவி தேவைப்படுகிறது .உங்கள் பெயர்களை முன்கூட்டி பதிவு செய்து பணம் தருவதாக உறுதியளித்தவர்கள் பணத்தை முழுமையாகவோ பகுதியாகவோ கையளிக்கலாம். கருணை உள்ளம் கொண்ட அனைவரும் இந்த நல்ல காரியத்துக்கு உதவும்படி தாழ்மையாக வேண்டுகிறோம்.

இதுவரையில் குறைந்த தொகையாக 100 டாலர்களில் இருந்து கூடுதல் தொகையாக 6000 (ஆறுயாயிரம்)டாலர்கள் வரையும் அநேகமானோர் 1000 டாலர்களையும் செம்மண்ணின் மைந்தர்கள் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்காக... நீங்களும்... ஆம் நீங்களே தான்! இரங்குவீர்களா?

 

எம் மண்னின் உயர்வு ஒன்றே எமது குறிக்கோள்!

குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா