கனடா மன்றத்தினால் வழங்கப்பட்ட உதவிகள்.

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா அமைப்பினால் குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு சப்பாத்துக்களும், காலுறைகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் கனடாவில் இருந்து நேரடியாக திரு.தங்கவேல் மற்றும் திருமதி.பூமணி இரத்தினசிங்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிபர்,ஆசிரியர்கள் இந்த உதவிகளை விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மாணவர்களிடம் கையளித்தனர். பள்ளிக்கென்று ஒரு மண்டம் இல்லாமையால் வெளியில் வைத்து இந்த நிகழ்வை நடத்த வேண்டியதாயிற்று. இனி வரும் காலங்களில் எமது பள்ளிக்கு ஒரு மண்டபம் கட்டுவதற்கு சகல ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இதற்கு கனடா மக்கள் மன்றம் உதவிகளை வழங்க தயராகி வருகிறது. கனடா வாழ் மக்களாகிய உங்களிடம் உதவிகள் கோரும் போது மனமுவந்து வழங்குங்கள். மேலதிக படங்கள்.


-------------------------------------------------------------------------------
குப்பிழான் விக்கினேஸ்வரா கலைவாணி கலை மன்றம் வழங்கிய செம்மண் 2010 நிகழ்வுகளின் தொகுப்பு. updated 20-11-2010

குப்பிழான் விக்கினேஸ்வரா கலைவாணி கலை மன்றம் வழங்கிய செம்மண் 2010 நிகழ்வு 13-11-2010 சனிக்கிழமை கனடா montreal நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குப்பிழான் மக்கள் மட்டுமன்றி, வேற்றுார் மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மங்கள விளக்கை திரு திருமதி.கமலாகரன் ஏற்றி வைத்தனர். வரவேற்றுபுரையை செல்வி.சுதானந்தன் சுதர்சினி நிகழ்த்தினார். பிரதம விருந்தினராக திரு.தமிழ்மணி தா.உயிரதன் கலந்து கொண்டார். சிறப்புரையை திரு.கமலாகரன் நிகழ்த்தினார். வரவேற்பு நடனம், திரையிசை நடனம், கவிதை, நாடகம், இன்னிசை மழை போன்ற பல நிகழ்வுகள் இடம் பெற்றன. நிறைவாக நன்றி உரையுடன் நிழச்சிகள் இனிதே முடிவடைந்தன.

------------------------------------------------------------------------------

செல்வி.அனுசியா அருந்தவராஜா, செல்வி அஜிதா அருந்தவராஜா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வின் தொகுப்பு.

07-11-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று LONDON QUEEN'S THEATRE இல் செல்வி.அனுசியா அருந்தவராஜா, செல்வி அஜிதா அருந்தவராஜா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் இனிதே நடைபெற்று நிறைவு பெற்றது. மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு, கடவுள் வணக்கத்துடன் ஆரம்பமானது. மேலும் updated 10-10-2010
------------------------------------------------------------------------------
வடமாகாண கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 2010ம் ஆண்டுக்கான கராத்தே சுற்றுப்போட்டியில் குப்பிளானை சேர்ந்த இராசரத்தினம் நிரூபன் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுக்கெண்டார்.

 யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் குமிற்ரே(kumite) பிரிவில் பங்குபற்றிய இராசரத்தினம் நிரூபன் வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துக் கொண்டார். மேலும் இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான 10வது விளையாட்டுப்போட்டியில் குப்பிளானை சேர்ந்த இராசரத்தினம் நிரூபன் வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக்கெண்டார்.

இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான 10வது விளையாட்டுப்போட்டி சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் 01-09-2010 தொடக்கம், 10-09-2010 வரை நடைபெற்றது. அதில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி சார்பில் கலந்துகெண்ட இராசரத்தினம் நிரூபன் வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கராத்தே அணியின் தலைவரும், குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம், குப்பிளான் விக்கினேஸ்வரா இளைஞர் கலை இலக்கிய மன்றம் ஆகியவற்றின் முன்னால் தலைவரும், குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் தற்போதய செயலாளரும் ஆவார். இவர் 08-11-2010 தொடக்கம் 11-11-2010 வரை வென்னப்புவவில் நடைபெறவுள்ள தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார். updated 07-10-2010

மேலதிக படங்கள்