குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பினரால் தரப்பட்ட தகவல்கள் updated 31-01-2011

இந்த அமைப்பின் பிரதிநிதி உருத்திர கணேசலிங்கம் அவர்களால் 510 சுவிஸ் பிராங் சேகரித்து குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் உணவுத் திட்டத்துக்கு சேகரித்து அனுப்பப்பட்டது. இந்த தொகையை வளங்கியோர் விபரங்கள். கிருஸ்ணதாசன் 100, உதயகுமார் 100, சி.சிவகுமார் 100, திருஞானேஸ்வரமூர்த்தி 100, மு.கணேசலிங்கம் 100, வை.விக்கினேஸ்வரன் 10 சுவிஸ் பிராங்குகள் ஆகும்.
இந்த அமைப்பின் பிரதிநிதி இராமுப்பிள்ளை சிவலிங்கம் (பாபு) மூலம் விக்கினேஸ்வரா பாடசாலை கட்டிட நிதிக்கு 07-10-2008 அன்று முன்னாள் அதிபர் சி.சிவகுமார், உதவி ஆசிரியர் குகனேசன் அவர்களிடம் அனுப்பப்பட்ட தொகை 1300 சுவிஸ் பிராங். இ.சிவலிங்கம் 100, த.பாலசுந்தரம் 100, பா.பிரதீப்ராஜ் 200, பாமினி லோகன் 100, சிவமணி ரோஜா 100, ப.பாஸ்கரன் 100, ஜெ.பத்மரஜனி 100, க.பிரியா 100, வி.நாகேஸ்வரன் 100, இ.சிவாநந்தகுமார் 100, இ.குணபாலன் 100, இ.ஆனந்தன் 100.

திரு.அருணாசலம் அருணகிரிநாதன் மாணவர்களுக்கு வழங்கிய உதவிகள்.
updated19-01-2011


திரு.அருணாசலம் அருணகிரிநாதன் குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கிய உதவிகளின் விபரத்தை இங்கே தருகிறார்.
குப்பிளானை சொந்த இடமாகவும் சுவிஸ்ஸலாந்து லவுசான் மானிலத்தில் வசித்துவரும் அருணாசலம் அருணகிரிநாதன் ஆகிய நான் தெரிவிப்பதாவது, கடந்தவருடம் ஆனி மாதம் குப்பபிளான் விக்னேஸ்வரா  மகாவித்தியாலய மாணவர்களின் கல்வி வளர்சிக்காக, அப்பாடசாலையின் அதிபர் (குணம்) அவர்களுக்கு அப்பிரதேச கிராமசேவகர் திருவாளர் பரமநாதன் மூலம் ரூபா 50,000 என்னால் வழங்கப்பட்து.
ஆயினும், முதலாம் மாணவர்களுக்கு காசாக வழங்குவதற்கென என்னால் வழங்கப்பட்ட இந்நிதியானது, அதிபரினால்  புத்தககங்களும்,சப்பாத்தும் வழங்கப்பட்டது. ஓரிரு அலுவலக அலுமாரிகளும் வாங்ககப்பட்டது. இதற்கான கொள்வனவு சிட்டையும் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலதிக படங்கள்

முன்னாள் அதிபர் திரு சிவகுமாருடனான சந்திப்பு updated 16-01-2011

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் சம்பந்தமாக முன்னாள் அதிபர் திரு.சிவகுமார் அவர்களுடன் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அவர் வழங்கிய சில தகவல்கள் வருமாறு. பாடசாலை பழைய கட்டிடத்தை திருத்த அனுமதி பெற்று கூரை வேலைகள் செய்வதற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்தேன். இதற்கு எமது ஊர் தில்லையம்பலம் சசிதரன், சுன்னாகம் இலங்கை வங்கி உறுதுணையாக இருந்தது.ஆனால் நான் ஓய்வு பெறும் வயதை அடைந்துள்ளமையாலும் என்னால் திட்டமிட்டபடி வேலைகளை முடிக்க முடியவில்லை காரணம் நான் போட்ட திட்டம் செயற்பாடுகளை புதிய கட்டிடத்திற்கான அத்திவாரத்தை போட்டு, தூண்களை நிறுவியுள்ளேன். மிகுதியை தற்போதைய அதிபரும், பாடசாலை அபிவிருத்தி சபையும் செய்து முடிக்க வேண்டும் என்பது எனத பெரு விருப்பமாகும். எனது இறுதிக் காலத்திற்கு முன் இது நிறைவு பெற்றால் மிக்க மகிழ்ச்சியடைவேன் என ஓய்வு பெற்ற அதிபர் திரு.சிவகுமார் கூறியுள்ளார். மேலும் அவர் கட்டிட ஆரம்ப வேலையின் செலவு விபரத்தையும் வெளியிட்டு உள்ளார்.
காலம் சென்ற திரு.சுந்தரலிங்கம் நினைவாக (காய கிட்டினர் மருமகன்) மனைவி, பிள்ளைகள் தந்த ஆரம்ப நிதி 3 லட்சம், அதன் 3 வருட வட்டி 30,000. சுவிஸ் வாழ் குப்பிழான் மக்கள் 100,000. திரு.கிருஸ்ணன் உதவி சசிதரன் மூலம் 100,000.
எமது மதிப்புக்குரிய குப்பிழான் உறவுகளே திரு.சிவகுமார் ஆசிரியர் மிகவும் நேர்மையாக எமது பாடசாலையை அபிவிருத்தி செய்வதில் அயராது உழைத்த உத்தமர்களில் ஒருவர்.திரு.வீ.கிருஸ்ணராஜா அவர்கள் திரு.சிவகுமார் அவர்களின் கணக்குகளை பரிசீலித்து அதற்கான சான்றிதல்களை வழங்கியுள்ளார். அந்த உத்தமர் என்றென்றும் உடல் ஆரோகியத்துடன் வாழ நாம் எல்லோரும் பிரார்திப்போமாக.

குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் தொடர்பான செய்திகள்.
updated 09-01-2011வன்னிப்போர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களில் குப்பிழானை பிறப்பிடமாக கொண்டவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையான குப்பிழானை பூர்விகமாக கொண்டவர்கள் மீண்டும் எமது ஊருக்கு திரும்பியுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலனோர் தமது குடும்பத்தின் உறவுகளை, சொத்துக்களை இழந்து எவ்வித வசதிகளும் இன்றி, மிகவும் பரிதாபத்துக்கு உரிய நிலையில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதல் கட்டமாக அண்மையில் ஒரு சிறிய உதவி வழங்கும் நிகழ்வு கிராமசேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர்களுக்கு ரூபா 76,000 செலவில் உடுதுணிகள்,பெட்சீட்கள் வழங்கப்பட்டன. இந்த மக்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்.

updated 09-01-2011
திருமதி.பஞ்சாட்சரதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு திரு.பஞ்சாட்சரதேவன் அவர்களால் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு அமைப்பினர் ஊடாக மதியபோசனம் வழங்கப்பட்டது.

இன்றைய ஊர்புதினத்தில் பல்கலைகழக மாணவர்களின் புதிய அமைப்பு.updated 2-1-2011

கடந்த 1-1-2011 சனிக்கிழமை அன்று குப்பிழானை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான சந்திப்பு ஒன்று கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போது அவர்களுக்கென்று தனியான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு குப்பிழான் வடக்கு, தெற்கு பல்கலைக்கழகங்களின் ஒன்றியம் என்னும் பெயர் இடப்பட்டது. இதன் தலைவராக இராசரத்தினம் நிரூபன், செயலாளராக கந்தலிங்கம் சிவகிருஸ்ணன், பொருளாளராக பெரியதம்பி பிரசாந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த அமைப்பின் ஆரம்ப செயல்பாடுகளாக குப்பிழானில் இருக்கும் ஆலயங்கள், பாடசாலை, புராதன சின்னங்கள் போன்றவற்றின் வரலாற்றை தொகுத்தல், பல்வேறு துறைகளில் பல்கலை கழகங்களில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய ஆக்கங்களை தொகுத்து புத்தகமாக வெளியிடல், புலம் பெயர்ந்து வாழும் பல்கலைகழக மாணவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தல். எமது கிராமத்து மாணவர்களின் இம் முயற்சியானது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. மற்றும் இதில் ஒரு இன்பம் கலந்த அதிர்ச்சி என்னவென்றால் எமது கிராமத்தில் இருந்து 34 பேருக்கும் மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள் என்பது தான்.
.