குப்பிழான் கன்னிமார் வருடாந்த உற்சவம் பற்றிய விபரம் மற்றும் பாடசாலை பிரதான மண்டபத்தின் தற்போதைய தோற்றம்.updated 27-02-2011


குப்பிழான் அருள்மிகு கன்னிமார் வருடாந்த மகோற்சவம் 08-04-2011 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தேர்த்திருவிழா 16-04-2011 அன்றும் தீர்த்த திருவிழா 17-04-2011 அன்றும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த 10 நாள் மகோற்சவ வேளையில் அடியார்களுக்கு அன்னதானம் கொடுக்க ஏற்பாடாகியுள்ளது.

கன்னிமார் ஆலய பின்பகுதி கூரைவேலைகள் செய்வதற்கு ரூபா 25 லட்சம் தேவைப்படுகிறது. இந்த நிதியை பெறுமுகமாக அடியார்களிடம் ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் உண்டியல் கொடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களால் இயன்ற பணத்தை உண்டியலில் போட்டு அடுத்த பெளர்ணமி அன்று மீண்டும் ஆலயத்தில் ஒப்படைப்பார்கள். மேலும் வெளிநாடுகளில் வதியும் அடியவர்களிடம் இருந்தும் உதவிகள் வேண்டப்படுகிறது.

பல காலமாக முடங்கி கிடந்த குப்பிழான் குறிஞ்சிக்குமரன் சனசமுக நிலையத்திற்கான புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான கூட்டம் 25-02-2011 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த புதிய நிர்வாக சபையின் தலைவராக பொ.சர்வானந்தன், செயலாளராக செ.ரவிசாந், பொருளாளராக செ.கிருபராஜ் தெரிவு செய்யப்பட்டனர். இந்த சனசமுக நிலைய கட்டிடத்தில் முன்பள்ளி (nursery) பாடசாலை ஆரம்பிப்பதென்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த பள்ளிக்குரிய செலவுகளை திரு.சோ.பரமநாதன் ( கிராமசேவகர்) வழங்குவதாக அறிவித்துள்ளார். இப்படியான நல்ல செயல் திட்டங்கள் எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் பத்திரிகைகள், சஞ்சிகைள் போடுவதற்கான முயற்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் வருடாந்த மகோற்சவம் 04-08-2011 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தேர்த்திருவிழா 12-08-2011 அன்றும் தீர்த்த திருவிழா 13-04-2011 அன்றும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

குப்பிழான் கேணியடி வைரவர் ஆலய கட்டிடம் ஆனது பலகாலமாக போதிய புனரமைப்பு இன்றி இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த கட்டிடத்துக்கு வர்ணம் பூச்சு வேலைகள் அதன் நிர்வாக சபையால் செய்து முடிக்கப்பட்து. அண்மையில் அரச உதவியுடன் கேணி திருத்தி அமைக்கப்பட்து என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய பிரதான கட்டிடத்திற்கான வேலைகள் கடந்த ஜனவரி ஆரம்பிக்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது. அந்த காட்சியையே நீங்கள் கீழே காண்கிறீர்கள்.
எமது விளையாட்டு வீரர்களின் சாதனை மற்றும் ஊர் செய்திகள். updated19-02-2011உடுவில் பிரதேச செயலகத்தில் உள்ள 30 பிரிவுகளுக்கான மென்பந்து (cricket) போட்டி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இப்போட்டியில் குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டு கழக மென்பந்து குழுவினரும் பங்கு பற்றியிருந்தனர். எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டு கழகம் ஆனது இறுதிப் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது. இந்த அணியின் தலைவராக கணேசலிங்கம் அருண்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் நடைபெற்ற யாழ் மாவட்ட அணிகளுக்கான போட்டியில் எமது அணி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் இவ்வீரர்களை கவுரவிக்குமுகமாக ஒரு நிகழ்வை நடத்தி, அதன் எதிர்கால வளர்ச்சிக்கு நிதிப் பங்களிப்பையும் வளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எமது கிராம உறவுகள் எமது கிராம விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவி செய்வது அவசியமாகும்.

குப்பிழான் விக்கினேஸ்வரா உதவும் கரங்கள் தமது இரண்டாவது கொடுப்பனவான மாசி மாதத்திற்குரிய கொடுப்பனவை வழங்கியுள்ளது. இந்த நிகழ்வின் போது திரு.சசிதரன், திரு.கிருஸ்ணராஜா, திரு.குகதாசன், திரு.சசிகரன் பங்கு பற்றியிருந்தனர்.


சிவ.மகாலிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா. updated 14-02-2011


சிவத்தமிழ் வித்தகர் திரு.சிவ மகாலிங்கம் எழுதிய தரிசனங்களும் வாழ்வியலும் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 12-02-2011 சனிக்கிழமை இராமநாதன் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி ஆனந்தி தலைமை தாங்கினார். இருதய நிபுணர் கலாநிதி லக்ஸ்மன், முன்னாள் விரிவுரையாளர் திரு.விநாயகமூர்த்தி, கனடாவில் இருந்து வருகை தந்திருந்த சிவ.முத்துலிங்கம் ஆகியோர்களோடு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். க.பொ.தா உயர்தரத்தில் இந்து நாகரிகம் பயிலும் மாணவர்களின் நன்மை கருதி இந்த நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை குமரன் பதிப்பகம் இந்தியாவிலும், இலங்கையிலும் சம நேரத்தில் வெளியிடுகின்றனர்.

குப்பிழான் வடக்கு மீழ் எழுச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக 13 பேருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் கடந்த 12-02-2011 அன்று வழங்கப்பட்டன.


குப்பிழான் விக்கினேஸ்வரா விழையாட்டு கழகத்தின் பொதுக்குழு கூட்டமும்,உறுப்பினர் தெரிவும் பற்றிய விபரங்கள். updated 09-02-2011

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 03.02.2011 அன்று மாலை 5.00மணிக்கு விளையாட்டு கழக மைதானத்தில் முன்னாள் தலைவர் வி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் புதிய நிர்வாக குழு தெரிவு இடம்பெற்றதுடன் எதிர்கால செயற்பாடுகளும் ஆராயப்பட்டது. புதிய நிர்வாக குழுவின் தலைவராக ப.மயூரன் அவர்களும், செயலாளராக தி.மதன்ராஜ் அவர்களும், பொருளாளராக ஏ.நிர்மலன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். உபதலைவராக ஆ.மேனகன் அவர்களும், உபசெயலாளராக சே.கவாஸ்கர் அவர்களும், நிர்வாக உறுப்பினர்களாக இ.கீர்த்தனன், க.அருள்மைந்தன், அ.அஜன், வி.செந்தில்குமார். சு.சுதாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும் விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகர்களாக கு.சுரேஸ்குமார், இ.நிரூபன் ஆகியோர் உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு நிர்வாகத்தால் ஆமோதிக்கப்பட்டனர். அத்துடன் செயலாளரின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

தகவல் தி.மதன்ராஜ்


இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த குப்பிழான் வடக்கு கிராம சேவையாளர் பிரிவில், மீள் எழுச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக 08-02-2011 சனிக்கிழமை அன்று ரூபா 750,000 ரூபா கடனாக அண்மையில் குடியேறிய மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. 17 பேர் 30,000 ரூபா வீதம் இந்த கடன் தொகையை பெறுவார்கள். இத்தொகையின் வட்டி வீதம் 1வீதம் ஆகும்.


எமது கிராமத்தின் பல்கலைகழக மாணவன் செல்வன் இராசரத்தினம் நிரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா
. updated 1-2-2011


யாழ் பல்கலைக்கழகத்தின் வணிகத்துறை மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் 'விருட்சம்' சஞ்சிகை இறுவட்டு வெளியீட்டு விழா 27ம் திகதி தை மாதம் 2011ம் ஆண்டு அன்று காலை 10.00மணிக்கு வணிகத்துறை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வுகள் வணிகத்துறை மாணவர் ஒன்றியத்தலைவர் இராசரத்தினம் நிரூபன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பல்கலைக்கழக துனைவேந்தர் பேராசிரியர் ந.சண்முகலிங்கன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட தலைவர் பேராசிரியர் மு. தேவராஜா அவர்களும், கௌரவ விருந்தினராக வணிகத்துறை இணைப்பாளர் திரு மு.மு.அருள்வேல் அவர்களும், கலந்து கொன்டனர். இவ் விழாவின் முதல் நிகழ்வாக வரவேற்புரையும். தலைமையுரையினை இராசரத்தினம் நிரூபன் அவர்களும், ஆசி உரையினை துனைவேந்தர் அவர்களும், சிறப்புரை, வெளியீட்டு உரையினை பேராசிரியர் க.தேவராஜா அவர்களும், கௌரவ உரையினை திரு மு.மு. அருள்வேல் அவர்களும், நூலின் ஆய்வுரையினை பேராசிரியர் T. வேல்நம்பி அவர்களும் ஆற்றினார்கள். தொடர்ந்து ஏற்புரை நன்றி உரை என்பவற்றுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது. இந் நூல் வெளியீடானது வெகு சிறப்பாக நடைபெற்றதுடன் விசேடமாக இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். இவ் ஆக்கபூர்வமான மன்றத்தின் முயற்சிக்கு பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்களால் மிகவும் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலதிக படங்கள்