December 2010 மாத செய்திகளின் தொகுப்பு

உயர்பாதுகாப்பு வலய குடியேற்றம் மற்றும் கிராம செய்திகள்
. updated 30-12-2010


.
 


பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளில் மீள் குடியேற்றம் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குப்பிழான் வடக்கு பகுதியும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 5-12-2010 அன்று உடுவில் பிரதேச செயலர் திருமதி.மஞ்சுளாதேவி அவர்களால் கிராம அபிவிருத்தி அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். அதன் விபரம் வருமாறு தலைவர் திரு.வைரவநாதன், செயலாளர் திரு.சி.சிவசங்கர், பொருளாளர் திரு.இ.கந்தசாமி, சமூக வளவாளர் வை.சசிகரன். சமுக வளவாளர் பதவியானது வேதனத்துடன் முழு நேரமாக செயல்படவுள்ளது. இதற்கென 33 லட்சத்து 84 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எல்லா கிணறுகளையும் சுத்தம் செய்வதற்கு 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கற்கரை கற்பக விநாயகர் அலயத்திற்கு அருகில் அமைந்துள்ள பழைய நெசவு சாலை கட்டடத்தை திரும்பவும் கட்டி அதனை தொழில் பயிற்சி நிலையமாக மாற்றல். இந்த தொகையின் 20 வீதத்தை இயல் அபிவிருத்தி உட்கட்டுமானங்களுக்கும். 30 வீதத்தை வாழ்வாதரத்தை மேம்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை கடனாக வழங்கப்படவுள்ளது. இந்த கடன் வழங்கும் இணைப்பாளர்களாக திரு.அ.ஜேசுதாஸ்,திரு ஜி.பாஸ்கரன்,திரு.ஜீவதாஸ் போன்றோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே குப்பிழான் வடக்கில் 171 குடும்பத்தை சேர்ந்த 574 பேர் மீழ் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


29-12-2010 அன்று குப்பிழான் விக்கினேஸ்வரா பாடசாலை அபிவிருத்தி மன்றத்தினால் ரூபா 1லட்சம் கட்டட நிர்மானிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. இத்தொகையானது ஏற்கனவே செய்த வேலைக்கு கொடுக்க வேண்டிய மிகுதிப் பணம் ஆகும். இத்தொகை வழங்கப்பட்டதன் மூலம் தை மாதம் 3ம் திகதி வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்து. இத்தொகையின் 50,000 ரூபா பெரியவர் கிருஸ்ணர் அவர்களின் வைப்பில் இருந்து திரு.சசிகரன் அவர்களாலும், மிகுதி 50,000 லண்டனை வதிவிடமாக கொண்ட திரு.பாக்கியன் அவர்களின் அன்பளிப்பை அதிபர் குணரத்தினம் அவர்கள் வழங்கினார்கள்.

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் சார்பில் குப்பிழான் அபிவிருத்தி சங்க மண்டபத்திற்கென்று கதிரை,மேசை போன்ற தளபாடங்கள் அன்பளிப்பு செய்யப்பட்ட நிகழ்வில் எடுக்கப்பட்ட படம்.

எமது கிராம செய்திகள் updated 19-10-2010

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பொது மண்டபத்தின் வேலைகள் எதிர்வரும் மாதம் தை 3ம் திகதி ஆரம்பமாகிறது. குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பொது மண்டபம் உள்நாட்டு போர் காரணமாக முற்றாக அழிவுற்று இருந்தது. இந்த மண்டபத்தை புதிதாக கட்டி முடிப்பதற்கு அரச தரப்பினரிடம் எவ்வளவோ முயன்றும் நிதி உதவி கிடைக்கவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம் போதியளவு மாணவர்கள் இல்லை என்பது. மற்ற பக்கத்தால் ஏன் மாணவர்கள் போவதில்லை என்றால் வசதிகள் போதுமானதில்லை என்று. எமது பாடசாலையில் பயிலும் மாணவர்கள் மிகவும் வறியவர்கள். அவர்களது கல்வி தரத்தை உயர்த்த பாடசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. இதன் பிரகாரம் வெளிநாட்டில் உள்ள எமது உறவுகளின் உதவியுடன் திரு.சிவகுமாரன் அதிபராக இருந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு அடித்தளம் இடப்பட்டு தூண்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த கட்டடம் பல காலமாக அப்படியே இருந்து வருகிறது. இதற்கு காரணம் திரு.சிவகுமாரனின் ஓய்வுக்கு பிறகு, புதிதாக வந்த பாடசாலை நிர்வாகத்தினருக்கும் கட்டட நிர்மானிப்பவர்களுக்கும் உள்ள பிரச்சினையே காரணம் ஆகும். நிதி ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் கை கொடுக்க தாயாராக உள்ளார்கள். லண்டனில் இருந்து சென்ற விக்கினேஸ்வரா மன்ற உறுப்பினரின் கடும் முயற்சியால் இவர்களின் பிணக்குகள் தீர்க்கப்பட்டு, கட்டட வேலைகள் இனிதே ஆரம்பிக்க வேண்டிய உதவிகளை செய்துள்ளார். சகலரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஊரின் முன்னேற்றத்துக்கு விட்டு கொடுப்புகளை செய்தே ஆகவேண்டும். தனது 90 ஆவது வயதிலும் தனது பணத்தையும் கொடுத்து, பாடசாலையின் அபிவிருத்திக்கு உலகம் பூராவும் உதவி கேட்கும் அந்த பெரியவர் கிருஸ்ணர் அவர்களின் முன் எமது பிணக்குகள் ஒரு தூசு.

எமது கிராமத்தின் சைவ சமய பேச்சாளர் திரு.அனுசாந்தன் அவர்கள் மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார். திருவெம்பாவையை முன்னிட்டு மலேசியாவில் உள்ள இந்து கோயில்களின் அழைப்பை ஏற்று மலேசியா சென்றுள்ளார். பத்து நாட்கள் நடைபெறவுள்ள திருவெம்பாவையை முன்னிட்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.

சிவத்தமிழ் செல்வர் சிவ.மகாலிங்கம் அவர்களின் சமய சொற்பொழிவுகள் திருக்கேதிஸ்வரத்தில் இடம் பெறவுள்ளன. திருவெம்பாவையை முன்னிட்டு சிவத்தமிழ் செல்வர் அங்கு உத்தியோக பூர்வமாக விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.


குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் உதவிகள் updated 10-12-2010

எமது கிராமத்தில் பல அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. இவ் அமைப்புக்கள் சந்திப்புகளை நிகழ்த்துவதற்கு பொதுவான கட்டடம் இல்லாத குறை இருந்து வந்தது.அதைப் போக்கும் விதமாக அண்மையில் எமது கிராமத்தவர்களின் கடும் முயற்சியால் ஒரு கட்டடம் அமைக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக திறந்தும் வைக்கப்பட்டது. இந்த கட்டத்தில் கூட்டங்களை நடத்துவதற்கு தளபாட வசதி இன்மையால் பல கெடு பிடிகளுக்கு மத்தியில் பாடசாலையில் நடத்த வேண்டிய கட்டம் ஏற்பட்டது. இந்த குறைபாட்டை போக்கும் வகையில் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் கை கொடுக்க முடிவு செய்தது. குப்பிழான் விக்கினேஸ்வரா கிராம அபிவிருத்தி மன்றத்திடம் ரூபா 72,000 அண்மையில் அனுப்பி வைக்கப்பட்து. இந்த தொகை தளபாடங்கள் வாங்கவும், குப்பிழான் விக்கினேஸ்வரா கிராம அபிவிருத்தி மன்றத்தின் நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது. குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றமானது தொடர்ந்தும் குப்பிழான் அபிவிருத்திக்கு உதவ உள்ளதாக நிர்வாகத்தினர் அறியத்தருகிறார்கள்.