இம்மாத செய்தி துளிகள் கடந்த மூன்று சாதப்தங்களாக பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டிருந்த நமது கிராமம் இப்போது விடுதலை அடைந்துள்ளது.தற்போது வந்த செய்திகளின்படி குப்பிழான் கிராமம் பாதுகாப்பு வலயத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. ஆனாலும் கண்ணி வெடி காரணமாக மக்கள் குடியமர அனுமதிக்கப்படவில்லை. விரைவில் மக்கள் விவசாயம் செய்யவும், குடியமரவும் வேண்டிய ஏற்பாட்டை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விக்கினேஸ்வரா கிராம அபிவிருத்தி மன்றம் தொடங்கியுள்ளது. இதன் பொருட்டு அமைச்சர்கள், அதிகாரிகளின் உதவிகளை பெறுமுகமாக சந்திப்புகளை செய்து வருகிறார்கள். தற்போது குரும்பசிட்டி வரை செல்ல அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.


நவராத்திரியை முன்னிட்டு குப்பிழான் கற்கரை விநாயகர் ஆலயத்தின் கலியாண மண்டபத்தில் 15-10-2010 அன்று கலை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.இதில் சிறுவர் பேச்சு , பாடல்கள், அபிநய நடனம், இசை நாடகம் என்பன நடத்தப்பட்டன. இதன் போது பிரதம பேச்சாளராக திரு.விநாயகமூர்த்தி கலந்து கொண்டார்.

சனி விரதத்தை முன்னிட்டு நவக்கிரக ஓமம் கற்கரை விநாயகர் ஆலயத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்றது பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தின் மணிக்கூட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன் பெறுமதி 12 லட்சம் ஆகும். இதன் மணியை அன்பளிப்பு செய்ய விரும்பும் பக்தர்கள் தம்மிடம் தொடர்பு கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் வேண்டுகின்றனர்.

திருமதி.நாகம்மாவின் 31ம் நாள் நினைவை முன்னிட்டு குப்பிழான் வெளிநாட்டு அமைப்பினூடாக விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதை வழங்கியவர் அவரின் பெறா மகன் திரு.சிவானந்தராஜா. மேலும் திருமதி.இலட்சுமிபிள்ளையின் 31 ம் நாள் நினைவை முன்னிட்டு அவரின் குடும்பத்தினரும் மதிய உணவை வழங்கினர்.

குப்பிழான் வீரமனையில் முகமூடி அணிந்த குழுவினரால் கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றது. துப்பாக்கிகள், கத்தி ஆகியவற்றுடன் வந்த மேற்படி நபர்கள் 3 லட்சம் காசும்,நகையும் எடுத்து சென்றனர். பாதிக்கபட்டவர் சிவலிங்கத்தின் மூத்த மகள் ஆவார்.சிவம் ஆசிரியரின் மகன் மனோ அவர்களின் இளைய மகளின் திருமண வரவேற்பு உபசாரம் மேற்கு லண்டனில் இனிதே நடைபெற்றது. இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு மண மக்களை ஆசிர்வதித்தனர். திரு.திருமதி மனோ அவர்களும் இந்தியாவில் இருந்து வந்து கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட குப்பிழான் கிராம அபிவிருத்தி மன்றத்துக்கு அதன் ஆரம்ப செயல்பாடுகளுக்கு ருபா 10,000 kuppilanweb சார்பில் திரு.ந.மோகனதாஸ் அவர்களால் வழங்கப்பட்து.