குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இருந்து இரு மாணவர்கள் இவ்வருடம் புலமை பரிசில்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள். செல்வன் சி.இந்துசன் 160 புள்ளிகள், ஜெ.கனுசன் 148 புள்ளிகள். இவர்களுக்கு குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பில் இருந்து ரூபா 5000 வீதம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த அமைப்பின் மூலம் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் படிக்கும் மணவர்களுக்கு தரமான சத்துள்ள மதிய உணவு கொடுக்கும் நோக்கோடு ரூபா 250 நாள் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு உருத்திர கணேசலிங்கம் 510 சுவிஸ் பிராங், தில்லை நாதர் கணேசலிங்கம (கொலண்ட்) 50 euro, பஞ்சாட்சரதேவன் 50 euro வழங்கியுள்ளனர்.

எமது கிராமத்தை சேர்ந்த சிவத்தமிழ் வித்தகர் திரு.சிவ மகாலிங்கம் அவர்கள் மட்டக்களப்பு மக்களின் அழைப்பின் பேரில் ஒரு அறிவியல், சமய நோக்கோடு கடந்த வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது மட்டக்களப்பு கல்வியல் கல்லூரியல் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லாசிரியனே ஞானவிளக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். இவ்விழாவுக்கு நாட்டின் பல பகுதியில் இருந்து பல அறிஞர்கள் பங்கு பற்றி சிறப்பித்தனர். இவ்விழாவில் எமது கிராமத்தை சேர்ந்த அறிஞன் பங்கு பற்றிய நிகழ்வு எமது கிராமத்துக்கு கிடைத்த பெரும் புகழ். மேலும் அவர்கள் வாழைச்சேனை காளுவாக்கேணி முத்து மாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிசேக விழாவின் போது பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

அருள் மிகு கன்னிமார் அம்மன் கோவிலில் ஒவ்வொரு பறுவமும் 100 அபிராமி அந்தாதி பாடல்கள் சோ.பரமநாதன் தலைமையில் ஓதப்பட்டு வருகிறது. மாலை 5.00 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்வானது 7.00 மணிக்கு நிறைவு பெற்று அன்னைக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று, நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டு இனிதே நிறைவு பெறும். இந் நிகழ்வுக்கு பெருமளவான பக்தர்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது. சில பறுவங்களில் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் சமூக தலைப்பில் தமது உரைகளை நிகழ்த்துவார்கள். அவர்களில் சில அறிஞர்களின் விபரம் s.சுகந்தன் (சைவப் புலவர், பண்டிதர்,அஞ்சல் பகுதி உத்தியோகத்தர்) , கவிமணி .சண்முகராசா.

குப்பிழான் ஐ.சண்முகலிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா கன்னிமார் அம்மன் கோவிலில் எதிர்வரும் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை கன்னிமார் நிர்வாகம் செய்துள்ளது. திரு.ஜ சண்முகலிங்கம் மிக சிறந்த எழுத்தாளர் ஆவார். எம்மிடையே சிலர் ஊரை மாற்றும் போது திரு. சண்முகலிங்கம் அவர்கள் வேறு ஒரு ஊரில் திருமணம் செய்து இருந்தாலும், தான் எழுதும் புத்தகங்களிலோ, கட்டுரைகளிலோ, எதுவானாலும் குப்பிழான் ஜ.சண்முகலிங்கம் என்றே எழுதுவார். ஊரின் பெயரை தன் பெயரின் முன் போட்டு எழுதும் மிகச் சிறந்த எழுத்தாளர். தாயகத்தில் வாழந்து கொண்டிருக்கும் மிக சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

சன்னதி முருகன் ஆலய நிர்வாகத்தினால் மாதம் ஒரு முறை ஞான சுடர் என்னும் இதழ் வெளியிடப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்திற்கான வெளியீட்டு உரையை எமது கிராமத்தை சேர்ந்த திரு.சிறிஸ்கந்தராஜா, திரு.பரமநாதன் ஆகியோர் வருடம் தோறும் உரையாற்றி வருகிறார்கள். திரு.சோ.பரமநாதன் அவர்களால் எழுதப்பட்ட தர்மசங்கடம், பிழை பொறுத்தலும் அதன் பயனும் ஆகிய கட்டுரைகள் ஆவணி மாத இதழில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராம சேவகர் தெற்கு பகுதிக்கு உட்பட்ட வீரமனை பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மாதர் சங்க கட்டடம் அமைக்கப்பட்து. இதன் இணைப்பாளர்களாக சோ.பரமநாதன், RDO பஞ்சலிங்கம் உள்ளார்கள். இதற்கு தேவையான 2 பரப்பு இடத்தை கனடாவில் வதியும் கெனடி அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் 9 லட்சம் நிதியை கொண்டு குறைந்த வட்டியில் வறுமை கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப் படவுள்ளது.

ரூபா 18 லட்சம் செலவில் தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் விவசாய வீதி என்னும் பெயரில் புதிய வீதி அமைக்கப்பட்டது. இவ்வீதியானது களவோடை அம்மன் கோவிலில் இருந்து குப்பிழான் தெற்கு திரு.பொன்னுத்துரை வீட்டின் முற்பகுதியூடாக சென்று வீரமனையை அடைந்து கேணியடியில் நிறைவு பெறுகிறது. இவ்வீதியானது அப்பகுதியில் வதியும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் அமைப்பின் நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதன் போது எதிர்வரும் மார்கழி மாதம் 18ம் திகதி ஒரு கலை நிகழ்ச்சியொன்று நடத்துவதாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. மேலும் எமது கிராம வளர்ச்சி பணிகளை முன்னெடுத்து செல்லவும் மற்றும் லண்டன் கிளையானது தனித்து செய்யாது கனடா, மற்றும் சுவிஸ் அமைப்புகளுடன் சேர்ந்து ஆக்க பூர்வமான ஒரு அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக இதன் போது முடிவு எடுக்கப்பட்டது.