-> குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கென்று புதிய computer room சுமார் 2 1/2 லட்சம் ரூபா செலவில் வலிகாமம் கல்வி திணைகளத்தினால் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குப்பிழான் மாணவர்கள் மிகவும் பயனடைவார்கள். இதன் திறப்பு விழா அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

-> குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பெயர் பலகை எழுத்துக்கள் 26,500 ரூபா செலவில் வெள்ளியினால் பொறிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இது காலம் சென்ற கனகரட்ணம் (கனகர்) அவர்களின் ஞாபகார்த்தமாக அவரின் புதல்வன் கலைச்செல்வன்(கனடா) அவர்களால் அனபளிப்பு செய்யப்பட்டது.

-> குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கென்று photo copy machine சிங்கப்பூரை சேர்ந்த கந்தையா கிருஸ்னர் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன் இலங்கை பெறுமதி 160,000 ரூபாய்க்கள்.

-> RDO க்கு என்று 25 லட்சம் ரூபா செலவில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கட்டடம் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா அடுத்த மாதம் நடை பெறும் என எதிர்பார்கப்படுகிறது.

-> சொர்கர்வளவு சோதி விநாயகர் ஆலயம், கற்கரை விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் முறையே june, auguest 15 நடைபெற ஏற்பாடகியுள்ளது. இதன் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

->கன்னிமார் கோயிலுக்கென்று புதிய கலியாண மண்டபம் தம்பித்துரை செல்லம் ஞாபகார்த்தமாக லண்டனில் வதியும் தம்பித்துரை அவர்களின் பிள்ளைகளால் 2005 ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மண்டபத்தின் பெயர் அபிராமி மண்டபம்.

-> குப்பிழான் கற்கரை கற்பகவிநாயகருக்கென்று புதிய சித்திர தேரும், மண்டபமும் (திருத்தி கொடுக்கப்பட்டது) சுவிஸ் இல் வாழும் ெஐகநாதன்(ெஐயா) அவர்களால் 20 லட்சம் செலவில் கட்டி கொடுக்கப்பட்டது.

-> குப்பிழான் விளையாட்டு மைதானத்திற்கென்று தனி மண்டபம் விக்கினேஸ்வரா மன்றம் கனடா சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டது. இதன் மேற்பார்வையாளாராக நாகையா அப்பன் பணி செய்துள்ளார்

தகவல் தி.சசிதரன்