கேணியடி ஞானவயிரவர் கோயிலின் அருகில் உள்ள புராதன கேணியைப் பாதுகாப்பதற்கு 200,000 (இரண்டு இலட்சம் ரூபா ) கலாச்சார அமைச்சினால் ஒதுக்கப்பட்டு, குப்பிழான் கற்றுசண் நிறுவனத்தால் வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் மற்றும் சமுக நலத்துறை அமைச்சினால் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டமிடல் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விக்கினேஸ்வரா இளைஞர் கலை இலக்கிய மன்றத்திற்கு 200,000 ரூபா வழங்கப்பட்டது.

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய அடியார்களின் கால் கழுவுவதற்காக நீர்த் தொட்டி, நீர் வழங்கல் அமைப்பு கனடா வாழ் அன்பர் திரு.வீரவாகு ஞானராசாவின் 100,000 ரூபா நிதியுதவியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கற்கரை கற்பக விநாயகர் ஆலய சுற்று வீதிக்கு மண் பரவல், அன்னதான மடத்தில் அடியார்கள் கை கழுவ தொட்டி அமைத்தல் சுவிஸ் வாழ் அன்பன் பொன்னம்பலம் ஜெகநாதனின் மகனின் பெயரால் நல்லதம்பியின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது.


லண்டனில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் விக்கினேஸ்வரா மன்றத்தினால் எமது மக்களிடம் இருந்து எமது கிராமத்தின் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கென நிதி சேகரிக்கப்பட்டது. இந் நிதியானது அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் விக்கினேஸ்வரா மன்றத்தின் உபசெயலாளர் திரு.பாலசுப்பிரமணியம் முகுந்தனினால் வழங்கப்பட்டது. இந்த வருடம் யாழ் மாவட்டத்தில் உள்ள சகல விளையாட்டு கழகங்களுக்கிடையே cricket போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் குப்பிழான் விக்கினேஸ்வரா கழகம் வெற்றிக்கேடயத்தை தனதாக்கி கொண்டது. இவர்களை கவுரவபடுத்துவதற்காக 15 விளையாட்டு வீரர்களுக்கு வெள்ளிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.இந் நிகழ்வின் போது புன்னாலைக்கட்டுவன் கழகத்துக்கும் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றத்துக்கும் இடையில் நட்பு ரீதியான போட்டி நடைபெற்றது.

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் புலம்பெயர்ந்த எமது மக்களின் உதவியுடன் திரு.சோ.பரமநாதன் அவர்களால் வழங்கப்பட்டது.

குப்பிழான் வடக்கு உயர் பாதுகாப்பு வலய மீழ குடியமர்த்தலின் ஆரம்ப நிகழ்வாக 25,000 ரூபா வழங்கப்பட்டு பாதைகள், வீதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குப்பிழான் வடக்கு பழைய சந்தை வரையும் மக்களை குடியேற்றவுள்ளார்கள். அதன்படி சகல காணி உரிமையாளர்களும் தங்களுடைய காணிகளை துப்பரவு செய்யவேண்டும். அப்படி இல்லையெனில் அரசாங்கமே அதை திருத்தி இடம்பெயர்ந்து முகாங்களில் இருக்கும் வலி வடக்கு மக்களை குடியேற்றவுள்ளதாக எமக்கு கிடைக்கும் நண்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குப்பிழான் J/211 கிராம சேவையாளர் பிரிவில் உயர்பாதகாப்பு வலய மீழ் குடியேற்றத்தற்கான கொடுப்பனவு அறுபத்து மூன்று பேருக்கு ரூபா 20,000 வழங்கப்பட்டது.

குப்பிழானில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட காணிகள் அற்ற மூவருக்கு கன்னிமார் கோவில் பகுதியில் அமைந்துள்ள தனது காணியில் 2 பரப்புக்கள் வீதம் திரு.மனோகரன் (சிவம் வாத்தியாரின் மகன்) அவர்களால் நன்கொடையாக வளங்கப்பட்டது.


குப்பிழான் விக்கினேஸ்வரா இளைஞர் கலை இலக்கிய மன்றம் சார்பில் கற்கரை கற்பக விநாயகர் உற்சவத்தை முன்னிட்டு பேச்சுப் போட்டி 09-08-2010 அன்று ஆலய சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் தலைவராக பிரசாந்தன் அவர்களும், செயலாளராக ஞானரதன் அவர்களும், பொருளாளர் மயூரன் அவர்களும் உள்ளார்கள்.