தனிச் சைவைப் பெருமக்கள் வாழும் குப்பிழான் பதியில் அருள் கொண்டு இருப்பவர் எம் பெருமான் சோதி விநாயகர். குப்பிழான் மத்தியில் இருந்து எல்லோருக்கும் அருள் பாலிப்பவர். எம்பெருமானுக்கு வருடம் தோறும் மாகோற்சவம் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தேர்திருவிழா நடைபெறுவதில்லை இக் குறைபாட்டை தீர்த்துக் கொள்ள எம்பெருமானுக்கு ஆழகிய சித்திர தேர் அமைக்கப்பட்டது. இத்தேர் உற்சவம் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறுது. 02.07.2010 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய வருடாந்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 9ம் நாளாகிய தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்திருவிழாவுக்கு பெருமளவு மக்கள் வருகை தந்திருந்தனர். பெரும்பாலும் வெளி நாடுகளில் வதியும் எமது உறவுகள் வருகையை காணக் கூடியதாக இருந்தது.மேலதிக படங்கள் நிழல்பட பகுதியில்

குப்பிழான் கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயிகள். வளம் கொளிக்கும் எமது மண் பல விவசாயிகளை வாழ வைத்திருக்கிறது. விவசாயமே எமது மண்ணின் ஆதாரம். எங்குமே பச்சை பசேல் என்று காட்சி தரும் எமது மண் எங்கள் உடலின் உயிர் நாடி. விவசாயமே வாழ்கை என்ற நிலையில் இருந்த எமக்கு புதிதாக குப்பிழான் விவசாய சங்கம் தொடங்கப்பட்டது.குப்பிழான் விவசாயிகள் சங்கத்தின் முயற்சியால் 40 லட்சம் இலங்கை ரூபா, குறைந்த வட்டியில் கடனாக, இலங்கை வங்கியிடம் இருந்து பெறப்பட்டது. இத்தொகை குப்பிழான் விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் தலைவராக க.நவரத்தினராசா(கப்பூர்) உள்ளார்.

 

 

 

பிரித்தானியா தமிழர் விளையாட்டு கழகத்தினால் மிகப்பெரிய அளவில் மெய்வல்லுனர் போட்டி 4-07-2010 அன்று நடத்தப்பட்டது. இதில் பிரித்தானியா முழுவதிலும் இருந்து 2500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஜந்து இல்லங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் எமது கிராமத்தை சேர்ந்த போட்டியாளர்களும் பங்கு பற்றினர், அதில் வெற்றியும் பெற்றனர். அதன் விபரங்கள் வருமாறு.
நிலேஸ் சச்சிதானந்தம் - பத்து வயதுக்கு உட்பட்ட கரண்டி ஓட்டம் - முதலாம் இடம்.
நிதேஸ் சச்சிதானந்தம் - பத்து வயதுக்கு உட்பட்ட 4x100 அஞ்சல் ஓட்டம் - முதலாம் இடம்.
நிலேஸ் சச்சிதானந்தம் - பத்து வயதுக்கு உட்பட்ட 4x100 அஞ்சல் ஓட்டம் - முதலாம் இடம்.
நாகரட்ணம் புஸ்பநாதன் - 40 வயதுக்கு மேற்பட்ட உயரம் பாய்தல் - இரண்டாவது இடம்.
ஜெயவாணி புஸ்பநாதன் - 40 வயதுக்கு மேற்பட்ட நீளம் பாய்தல் - மூன்றாவது இடம்.
கெளரி புஸ்பநாதன் - 16 வயதுக்கு உட்பட்ட தட்டு எறிதல் - மூன்றாவது இடம்.