Total vistors
website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் 02-07-2010 (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் விபரங்கள் வருமாறு

02-07-2010 (வெள்ளி) காலை 10.00 மணிக்கு கொடியேற்றம்
10-07-2010 (சனி) தேர்த் திருவிழா.
11-07-2010 (ஞாயிறு) தீர்த்த திருவிழா.

10 நாட்களும் திருவிழாக் காரர்கள், அடியவர்கள் உதவியுடன் அன்னாபிக்ஷேகம் நடைபெறும்

ஆலய பிரதம குரு
கிரியா கலா மணி பிரஸ்டா குரு வித்துவ ஜோதி சி.கிருஸ்ணசாமி குருக்கள்.

---------------------------------------------------------------------------



குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் 15-08-2010 (ஞாயிறு) கொடியேற்றத்துடன் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் விபரங்கள் வருமாறு

15-08-2010 (ஞாயிறு) காலை 10.00 மணிக்கு கொடியேற்றம்
23-08-2010 (திங்கள்) தேர் திருவிழா
24-08-2010 (செவ்வாய்) தீர்த்த திருவிழா

ஆலய பிரதம குரு சிவ சிறி கி.வைத்தீஸ்வர குருக்கள்


----------------------------------------------------------------------------

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கென்று 160,000 ரூபா செலவில் போட்டோ பிரதி இயந்திரம், குப்பிழான் மண்ணில் பிறந்து 93 வயதில் மண் பற்றுடன் சிங்கப்பூரில் வசிக்கும் கந்தையா கிருஸ்ணர் அவர்களால் பேரன் தில்லையம்பலம் சசிதரன் மூலமாக வலிகாமம் கல்விப் பணிப்பாளர் திரு.விக்கினேஸ்வரன், முன்னாள் அதிபர் திரு.சி.சிவகுமாரன், தற்போதைய அதிபர் திரு.ந.குணரத்தினம் ஆகியோர்களிடம் வழங்கும் நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட புகைப்படம்.

----------------------------------------------------------------------------

குப்பிழான் முத்தர்வளவு ஆலயத்தின் தற்போதைய தோற்றம்




நாட்டின் போர் நிலமை காரணமாக பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டிருந்த முத்தர்வளவு கோயில் தற்போது துப்பரவாக்கப்பட்ட காட்சியையே காணுகிறிர்கள். எமது கிராமத்தில் உள்ள தத்தமது பகுதி ஆலயங்களை வெளிநாடுகளில் வசிக்கும் எமது கிராம மக்கள் நன்றாக நிர்மணிக்கும் இவ்வேளையில், இந்த ஆலயத்துக்கு புத்துயிர் கொடுப்பது அப்பகுதி மக்களின் கடமை ஆகும்.

----------------------------------------------------------------------------