படங்களுடன் செய்தி சுருக்கம். updated 29-06-2011

அண்மையில் கற்கரை விநாயகர் ஆலயத்தில் நடந்த திருட்டை தொடர்ந்து எமது கிராமத்தில் உள்ள பெரிய ஆலயங்களான கற்கரை விநாயகர், சொக்கர் வளவு சோதி விநாயகர், வீரமனை கன்னிமார் கோவில் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக விளிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தினமும் ஜவர் இரவு வேளைகளில் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். எதிர்காலத்தில் நிரந்தரமான பாதுகாவலரை ஒவ்வொரு ஆலயத்திற்கும் நியமித்து வேதனமும் கொடுக்க உத்தேசித்துள்ளார்கள்.

எமது கிராமத்தின் தற்போதைய நிலமைகளை விளக்கும் படங்களுடன் செய்தி சுருக்கம்.


குருந்தடி மூலையில் இருந்து கற்கரை, ஊரங்குணை ஊடாக ஏழாலை செல்லும் திருத்தி அமைக்கப்பட்ட வீதியையே தற்போது மேலே காண்கிறீர்கள்.

மேலதிக செய்திப் படங்கள்


குப்பிளான் வடக்கு கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு பாரிய திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
updated 12-06-2011

 

ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்திலுள்ள விக்கிரகங்களிலிருந்த பெறுமதியான ஆபரணங்களையும் விக்கிரகத்தை புரட்டி அடியிலிருந்த இயந்திரத் தகடுகளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இங்கு திருடப்பட்டுள்ளன. விக்கிரகங்களின் பீடத்திற்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த பெறுமதி மிக்க இயந்திரத் தகடுகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட திருடர்கள் சுவாமி விக்கிரகங்களை புரட்டி வீழ்த்திவிட்டுச் சென்றுள்ளனர். லட்சுமி, முருகன், வள்ளி, தெய்வானை, கிருஸ்ணன் விக்கிரகங்களுக்கு அடியில் இருந்த இயந்திர தகடுகளை எடுத்துள்ளனர். ஆலய மூலஸ்தானத்தில் நுளைந்த திருடர்கள் மூலஸ்தானத்தில் உள்ள இயந்திர தகட்டை எடுக்கும் முயற்ச்சி தோல்வியில் முடிந்தது.


சம்பவ தினம் இரவு ஆலயத்திற்கு அண்மையிலுள்ள மக்கள் அனைவரும் உறங்கிய பின்னர் ஆலயக் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் நீண்ட நேரம் உள்ளே நின்று திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரகங்களில் அணியப்பட்டிருந்த வெள்ளி அங்கிகள், ஆபரணங்கள் போன்றவற்றைத் திருடிய பின் அலவாங்குகளைப் பயன்படுத்தி விக்கிரகங்களின் பீடங்களை உடைத்து அதன் கீழ் வைக்கப்படிருந்த இயந்திரத் தகடுகளையும் திருடியுள்ளனர். இதன் போது விக்கிரகங்கள் புரட்டி விழ்த்தப்பட்டுள்ளன. ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு அதற்குள்ளிருந்த 10 ஆயிரம் ரூபா வரையிலான பணமும் எடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் திருடர்கள் வடக்கு வாயில் கதவை உடைத்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

இதேநேரம் ஆலயத்திற்கு சற்றுத்தொலைவிலுள்ள பனை மரத்திடியிலிருந்து திருடர்களின் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் அலவாங்கு ஒன்று கிடந்ததாகவும் அப்பகுதி கிராம முகாமையாளர் தெரிவித்தார். இரண்டு சைக்கிள்களையும் அலவாங்குகளையும் பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தனது இரண்டு துவிச்சக்கர வண்டிகள் சம்பவ தினம் இரவு திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாகவே ஆலய நிர்வாகத்தினால் நகைகள் கோயிலில் வைக்கப்படுவதில்லை, கடந்த சில காலங்களாக நகைகளை சுவாமி கழுத்தில் போட்டு உள்ளார்கள். இதற்கு காரணம் வெளிநாட்டு, உள்நாட்டு பக்தர்களால் அன்பளிப்பாக வளங்கப்பட்ட நகைகள் அவர்களின் கட்டாயத்தின் விக்கிரகங்களின் மீது விடுவதனால் தான் திருடர்கள் ஆலயத்தை குறி வைத்தனர்.மறு நாள் சனிக்கிழமை சம்பிரோட்சன கும்பாபிசேகம் (பிராயச்சித்தம்) நடைபெற்றது. திருடப்பட்ட இயந்திர தகடுகளுக்கு பதிலாக உடனடியாக புதிய தகடு வைக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. சம்பிரோட்சன கும்பாபிசேகம் 24 மணி நேரத்தில் செய்யப்படவேண்டும். இந்த கும்பாபிசேகத்தின் செலவு 1 லட்சம் ரூபா.
வருடாந்த உற்சவம் எது வித இடையூறுகள் இல்லாமல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக படங்கள்


ஊருக்கு ஒரு உளவு இயந்திம். updated 05-06-2011

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் பணத்திற்கான வேலைத்திட்டம் எமது கிராமத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வீதிகள், பாடசாலை, வாசிகசாலை என்பவற்றை சிரமதான பணி மூலம் செய்வதற்கு 13 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 6 மாதகாலத்திற்கு செயற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதோடு கிராம அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமையும். நாளொன்று கூலியாக 500 ரூபா வளங்கப்படுகிறது.

இந்திய அரசாங்க உதவியுடன் குப்பிழான் விவசாயிகள் சம்மேளத்திற்கு 15 லட்சம் பெறுமதியான உளவு இயந்திம் அன்பளிப்பாக வளங்கப்பட்டுள்ளது. இந்த உளவு இயந்திரம் ஆனது குறைந்த வாடகை அடிப்படையில் எமது கிராம விவசாயிகளுக்கு வளங்கப்பட்டு வருகிறது.

மயானத்திற்கான புதிய வீதி . updated 18-05-2011எமது கிராமத்தின் மீழ் எழுச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமத்தின் சகல வீதிகளும் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக குப்பிழான் மயானத்திற்கு பின்புறம் உள்ள வீதி அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் புனரமைக்கப்படவுள்ளது. இதற்காக 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வீதியானது ஏழாலை கிழக்கை சென்றடைகிறது. குப்பிழான் கடா கடம்பை மயானமானது பிரதேச சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கென கடநத வாரம் நிர்வாக சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிர்வாக சபையானது மயானத்தின் சகல செயல்பாடுகளுக்கும் பொறுப்பாக இருக்கும். இதன் தலைவராக திரு நவரத்தினராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மயானத்தையே ஏழாலை கிழக்கு மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.குப்பிழான் சொக்கர்வளவு ஆலயத்தின் உட்பகுதி உடைக்கப்பட்டு புனருத்தான வேலைகள் நடைபெற்று வருக்கின்றது. அதன் காட்சிகளை மேலே காண்கிறீர்கள். வேலைகள் நடைபெறுவதால் இம்முறை வருடாந்த உற்சவம் நடைபெறமாட்டாது என்பதை அறியத்தருகிறார்கள்.

குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் நிதிசேர்ப்பு நிகழ்வு கடந்த 7ம் திகதி சுவிஸ் லவுசான் பகுதியிலும், 8ம் திகதி பேர்ன் பகுதியிலும் இடம்பெற்றன.குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலைய நிர்வாக தெரிவும், உதவும் கரங்கள் அமைப்பின் நிதி சேகரிப்பு நிகழ்வும். updated 01-05-2011

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலைய வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த வருடம் எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் பெரிய அபிவிருத்தியை முன்னிட்டு நிர்வாக சபையானது முற்று முழுதாக மாற்றி அமைக்கப்பட்டது. பல ஆண்டு வரலாற்றை கொண்ட, குப்பிழான் மக்களின் அறிவு பசியை போக்கிய மையம் தான் குப்பிழான் விக்கினேஸ்வரா சன சமூக நிலையம் ஆகும். அது ஆரம்பித்த காலம் தொடக்கம் 80 களின் ஆரம்பம் வரை சிறப்பாக இயங்கி வந்தது. 1987 ஆம் ஆண்டளவில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய வாசிக சாலை கட்டிடமும், பிரதான மண்டபமும் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கென்று நிதியும் சேகரிக்கப்பட்டது. வாசிகசாலை மட்டும் நிர்மானிக்கப்பட்டு எல்லோருக்குமே தெரியாத காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு 1989 ஆம் ஆண்டு சில இளைஞர்களால் பொது மக்களிடம் பணம் சேர்க்கப்பட்டு யன்னல், கதவு, பூச்சு வேலைகள் இடம் பெற்றது. ஆனாலும் 80 ஆண்டு மத்தியில் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அந்த சனசமூக நிலையத்திற்கு என்னும் விடிவு வரவில்லை. குப்பிழான் சந்தி என்பது குப்பிழானின் மையம். இது எல்லா குப்பிழான் மக்களுக்கும் பொதுவான இடம். நாம் எந்த அபிவிருத்தி திட்டத்தையும் குப்பிழான் மையத்தை நோக்கி செயல்படுத்தி செய்தால் தான் எல்லா குப்பிழான் மக்களும் பயன் அடைய முடியும். அது எமது விக்கினேஸ்வரா சன சமூக நிலையம் ஆனது திரும்ப மீள் நிர்மாணிக்கப்பட்டு சகல வசதிகளும் உள்ள ஒரு கட்டடமாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. குப்பிழான் மக்களின் கலை, கலாச்சாரம், கல்வி போன்றவைகளின் மையமாக இந்த கட்டிடம் திகழவேண்டும். இரண்டு மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் ஆனது எப்படி அமைய வேண்டும் என்று உலகில் பல்வேறு நாடுகளிலும் வாழும் எமது கிராம மக்களின் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் மனதில் பல விதமான எண்ணங்கள் இருக்கலாம், அந்த எண்ணங்களை எங்களுக்கு எழுத்துருவில் எழுதி அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் kuppilan@hotmail.com அல்லது 174 bexley road, erith, kent DA8 3HG என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள். உங்கள் கருத்துக்களை சம்பத்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம்.

இதன் புதிய நிர்வாக சபை விபரங்கள்
தலைவர் - ந.வைரவநாதன்
உப தலைவர் - இ.நிரூபன்
செயலாளர் - வ.சசிகரன்
உப செயலபளர் க.கவாஸ்கர்
பொருளாளர் - க.சின்னராசா
உறுப்பினர்கள்
தி.சசிதரன்
ஞா.கணேசலிங்கம்
இ.பிரணவரூபன்
சி.சிவசங்கர்.

கற்கரை கற்பக விநாயகர் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை இடம் பெற்றது. இதன் போது புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் லவுசான் பகுதியில் குப்பிழான் விக்கினேஸ்வரா உதவும் கரங்கள் உறுப்பினர்களால் எமது உறவுகளிடம் இருந்து நிதி சேகரிக்கப்பட்டது. இந் நிதிசேகரிப்புக்கு லவுசான் வாழ் உறவுகள் எமது கிராமத்தில் அல்லலுறும் மக்களுக்காக பெருமளவு நிதியை வாரி வழங்கினர். இந் நிதியானது நிட்சயமாக குப்பிழான் கிராம மக்களின் பொருளாதார கல்வி வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்பதை அறியத்தருகிறார்கள். வேறு எந்த தேவைகளுக்கும் இந் நிதி பயன்படுத்த படமாட்டாது.