வழங்கப்பட்ட உதவிகளுக்கு நன்றியை தெரிவிக்கிறார்கள் விக்கினேஸ்வராசனசமுக நிலையம். updated 26-04-2011


குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமுக நிலையம்
குப்பிளான்
17.04.2011

எமது குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமுக நிலைய முன்பள்ளி சிறார்களுக்கான சீருடை வழங்குவதற்கான நிதியினை தந்து உதவிய அருணகிரிநாதன் அருணாச்சலம் அவர்களுக்கும் வெளிநாட்டில் வசிக்கின்ற முன்னாள் குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமுக நிலைய உறுப்பினர்களுக்கும் எமது குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமுக நிலையம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இங்கனம்
இ.நிரூபன்
செயலாளர்எமது விளையாட்டு வீரர்களின் சாதனை

உடுவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வு 05.04.2011 அன்று மாலை 4.00க்கு ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இதில் எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டு கழகங்கம் சாதனைகள் படைத்துள்ளமை எமது குப்பிளான் கிராமத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். எமது குப்பிளான் இளைஞர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் பல சாதனைகள் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


2011ம் ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டியில் விக்கினேஸ்வரா விளையாட்டு கழகங்கம் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் 1ம் இடத்தினை பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்ததுடன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 2ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டதுடன் பிரதேச செயலக பிரிவில் முழுமையான தரப்படுத்தலில் 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் எமது கழக வீரர்கள் மாவட்ட மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் உடுவில் பிரதேச செயலக அணிசார்பாக பங்குபற்ற உள்ளமை சிறப்பம்சம் ஆகும்.

மேலதிக படங்கள்

குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய இரதோற்சவப் பெருவிழா தொடர்பான முழுமையான தகவல்கள் படங்களுடன். updated 17-04-2011.


குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 08-04-2011 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, கடந்த 8 நாட்களாக வெகு விமர்சையாக திருவிழாக்கள் நடந்து வருகிறது. நேற்று 16-04-2010 அன்று இரதோற்சவம் நடைபெற்றது. இவ் இராதோற்சவத்திற்கு பெருமளவான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெளிநாட்டு வாழ் உறவுகள் குறிப்பாக சுவிஸ் இல் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலை 6.30 மணியளவில் அபிஷேகம் பூஜைகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 9 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை இடம்பெற்றது.


அதனை அடுத்து அம்பாள் உள்வீதியிலே ஆடி அசைந்து வருகின்ற அற்புதக் காட்சியினைக் காணக் கூடியதாக இருந்தது. மலர்கள் தூவ மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்த அம்பிகையை அடியவர்கள் மெய்யுருக வழிபட்ட காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைப்பதாய் அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து 10.45 மணியளவிலே அம்பாள் அழகிய தேரிலே ஆரோகணித்தார். தொடர்ந்து திருத்தேர் முன்பாக சேந்தனாரால் இயற்றப்பட்ட திருப்பல்லாண்டு ஓதப்பட்டது. தொடர்ந்து அடியவர்களால் திருத்தேர் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை உடைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பகல் 11.15 மணியளவில் ஊர் மக்கள் ஒன்று கூடி வடம் இழுக்க தெருத்தேர் மெல்ல அசைந்து அம்பாள் பவனி வந்த திருக்காட்சி அந்த தேவர்களே மயங்கிடும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. நாதஸ்வரம் தவில் முழங்கிட அரோகரா என்ற கோசத்துடன் அடியவர்கள் ஆனந்தக் கூத்தாட அன்னை ஆதிபராசக்தி அடியவர்களுக்கு எழுந்தருளி அருள் பாலித்தாள்.

திருத்தேர் பவனி வந்த போது அடியவர்கள் பலர் கற்பூரச் சட்டி ஏந்தியும், அங்கப் பிரதட்சணம் செய்தும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியமையையும் காணக்கூடியதாக இருந்தது.

எங்கள் ஊரைச் சேர்ந்த அடியவர் ஒருவர் உடம்பில் செதில்களால் குத்தி பறவைக்காவடி எடுத்த காட்சியும் . பெண் அடியவர் ஒருவரும் தனது அலகில் செதில்களால் குத்தி பால் காவடி எடுத்த காட்சியும் பார்ப்பவர்களின் நெஞ்சங்களிலே பக்தியின் உச்சமாக அமைந்திருந்தது.


தொடர்ந்து அம்பாளின் திருத்தேர் பவனி மதியம் 12 மணியளவில் தனது இருப்பிடத்தை அடைந்தது. தொடர்ந்து தேரடியில் அர்ச்சனைகள் இடம்பெற்று 1.30 மணியளவில் பச்சைப் பட்டுடுத்தி அலங்காரம் செய்து பக்தர்கள் இசையோடு பாடி வர அம்பிகை திருத்தேரிலிருந்து இறங்கும் வைபவமான அவரோகணம் இடம்பெற்றது.

அடியார்களின் தாக சாந்தியை தீர்ப்பதற்காக இரத்தினம் மகேஸ்வரி அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் மோர்,பழரசம் வழங்கப்பட்டது. அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் தேர் வீதி உலா வந்து முடிந்ததும் இறுதிப் பேச்சுப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

மேலதிக படங்கள்


எமது கிராமத்தின் மிக முக்கியமான செய்திகளின் தொகுப்பு. updated 06-04-2011

புனர்வாழ்வு புனர் நிர்மான அமைச்சின் மாதாந்த உதவிக் கொடுப்பனவுகள் பெறும் குடும்பங்கள் அண்மையில் தெரிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு மாதம் 3000 ரூபா வழங்கப்படும். உடுவில் பிரதேசத்தில் இருந்து 6பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குப்பிழான் கிராமத்தில் இருந்து கோட்டார் மனையை சேர்ந்த சின்னத்தம்பி இலங்கநாதன் குடும்பம் மட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெரிய சங்கக்கடைக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் இலங்கை தொழில் பயிற்சி அமைப்பினால் தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விவசாய உபகரணங்கள் திருத்தல், தச்சு வேலை என்பன பயிற்றப்பட்டு வருகின்றது. 14 பேர் தெரிவு செய்யப்பட்டு தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

உடுவில் பிரதேச பாடசாலைகளுக்கான சித்திரப்போட்டியில் குப்பிழான் எறும்புக்கடவையை சேர்ந்த குமரேசன் ராகுலன் 3ம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

குப்பிழான் வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் குடியேற்றப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கென்று நோர்வே அகதிகள் சபையால் ஒரு லட்சத்தி இருபத்தையாயிரம் பெறுமதியான 17 வீடுகளும் அறுபத்தையாயிரம் ரூபா பெறுமதியான கழிவறைகளும் கட்டிக்கொடுக்கப்படவுள்ளது.

உடுவில் பிரதேச சபையால் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் குப்பிழான் வடக்கு பகுதி 3வது இடத்தை தனதாக்கி கொண்டது. cricket இல் முதலாம் இடத்திலும் football இல் 2ம் இடத்திலும் எல்லா விளையாட்டிலும் ஒட்டு மொத்தமாக 3ம் இடத்தை தனதாக்கி கொண்டது.

முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள் 26 பேருக்கு அருணகிரி அருணாச்சலம் அவர்களால் சீருடைகள் வழங்கப்பட்டது.

கடந்த வாரம் குப்பிழான் பாடசாலை அபிவிருத்தி சபையால் நடாத்தப்பட்ட சந்திப்பில் பாடசாலை மண்டபத்திற்கான flat போட்டு கட்டடத்தை கட்டி முடிப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. இதன்போது கட்டட பொருட்களை வாங்கி கொடுத்து நாள் கூலி அடிப்படையில் வேலைக்கு ஆட்களை எடுப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் பெரும் பகுதி செலவை சிங்கப்பூரை சேர்ந்த திரு.கிருஸ்ணன் அவர்கள் கொடுக்கும் அதேவேளை மற்றைய உறவுகளிடமும் இருந்தும் உதவி கோரப்பட்டுள்ளது.

நோர்வே அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் சார்பில் முத்தர்வளவு பகுதியை சேர்ந்த 9 பயனாளிகளுக்கு 60,000 பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களும், பம் செட்டுகளும் வழங்கப்பட்டன.

டெனிஸ் நிறுவனத்தால் சமாதிகோவில் பகுதியில் உள்ள கண்ணி வெடி அகற்றும் பணி நடைபெற்று வந்தன. இப்பணியானது கடந்த வாரத்துடன் நிறைவுக்கு வந்தது. இப்பிரதேசம் ஆனது தற்போது கண்ணிவெடி அற்ற பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மேலதிக படங்கள்


அருள்மிகு கன்னிமார் வருடாந்த உற்சவம் தொடர்பான தகவல்கள். updated 13-04-2011

அருள்மிகு கன்னிமார் வருடாந்த உற்சவம் கடந்த 8-04-2011 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இவ் உற்சவத்தின் போது அடியார்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மாலை உற்சவத்தில் சைவ பிரசங்கங்களும் இடம்பெற்று வருகின்றன. 13-04-2011 இன்று மாம்பூத் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதன்போது அபிராமி அந்தாதி பக்க வாத்தியங்களுடன் திரு பரமநாதன் அவர்களால் ஓதப்பட்டது. நாளை வேட்டை திருவிழா இடம் பெறவுள்ளது. எம்பெருமாள் நாளை வீதிவழியாக சொக்கர் வளவு ஆலயம் சென்று வேட்டையில் ஈடுபடுவார். அதன்பின்னர் ஆலயம் திரும்பி மாலை பூசைகள் இடம்பெறும். தேர்த்திருவிழா இம்முறையும் விமர்சையாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. தேர்த்திருவிழா அன்று இறுதிப் பேச்சு போட்டி இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. கீழ்பிரிவு , மேல்பிரிவு, மத்தியபிரிவு சிறுவர்களுக்கிடையே நடைபெறும் போட்டியில் பரிசில்களும் வழங்கப்படும். கிழே உள்ள காட்சிகள் எம்பெருமாள் வீதி உலா வரும் போதும், மற்றைய நாள் அன்னதானத்திற்காக தொண்டர்கள் காய்கறி வெட்டி ஆயத்த வேலைகளில் ஈடுபடும் போதும் எடுக்கப்பட்டது..

மேலதிக படங்கள்

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கேணியடி வைரவர் ஆலய தீர்த்தக் கேணி பற்றிய விபரங்கள். updated 22-03-2011


அண்மையில் அரச நிதி உதவியில் புனரமைக்கப்பட்ட கேணியடி வைரவர் கோவிலின் தீர்த்தக் கேணி 10-03-2011 வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஆலய நிர்வாக சபை தலைவர் திரு.நா.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு சுந்தரசிவம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு சோ.பரமநாதன், திரு.சபேசன், திரு சிவ மகாலிங்கம் , திரு சுகுமார் (ஆலய பொருளாளர்), மற்றும் ஊர் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறப்பு பூஜைகள் இடம்பெற்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் கணக்கு விபரங்கள் மற்றும் கிராம செய்திகள். updated 06-03-2011


குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் தலைவர் தி.பஞ்சாட்சரதேவன் அவர்களால் அதன் அமைப்பின் கணக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அண்மையில் குப்பிழான் விக்கினேஸ்வரா கலைவாணி கலை மன்றத்தின் சார்பில் பாடசாலை உணவுத் திட்டத்திற்கு 1000 கனடியன் டொலர்கள் வழங்கப்பட்டது. இத்தொகையானது அண்மையில் கனடா மொன்றியல் நகரில் நடைபெற்ற செம்மண் இரவு நிகழ்வில் சேகரிக்கப்பட்ட தொகையாகும். இத்தொகையை வெளிநாட்டு அமைப்பின் மொன்றியல் பிரதிநிதிகளான திரு.குணபாலசிங்கம், திரு.குகா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மேலும் திருநாவுக்கரசு அவர்களின் மருமகன் செல்வரத்தினம் ரூபா 5000ஜ உணவுத் தேவைகளுக்காக வழங்கியுள்ளார். இதுவரை குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் சார்பில் ரூபா 182,360.00 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத் தொகையானது சாப்பாட்டு பாத்திரங்கள் வாங்கவும், புலமைபரிசில்களுக்காக ரூபா 10,000.00மும், உணவு வழங்கல்களுக்காக நாள் தோறும் ரூபா 300.00 செலவிடப்படுகிறது.

அரசாங்கத்தின் நிதி உதவியுடன் குப்பிளான் குருந்தடியில் இருந்து கற்கரை விநாயகர் ஆலயம் ஊடாக சென்று குப்பிழான் ஊரங்குணை ஞானவைரவர் ஆலயம் ஊடாக ஏழாலை வடக்கு சந்தியை சென்றடையும் வீதி அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. இதன் மொத்த செலவு பல லட்சங்கள் ஆகும். அதற்காக கற்கள் குவிக்கப்பட்டு இருக்கும் காட்சியே கீழ் உள்ள படத்தில் காண்கிறீர்கள்


கடந்த வருடம் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்திலிருந்து இரண்டு மாணவர்கள் புலமை பரிசில் பெற்றனர். அவர்களின் திறமையை பராட்டி குப்பிழான் வெளிநாட்டு அமைப்பினரால் ரூபா 5000 றொக்க பரீசில்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு மதிய உணவுக்கு தேவையான கோப்பைகளும் வழங்கப்பட்டன. அதனையே படத்தில் காண்கிறீர்கள்.