பரிதாபமாக இழக்கப்பட்ட எமது மண்ணின் மைந்தனின் உயிர், சோகத்தால் ஆழ்ந்துள்ள குப்பிழான் மக்கள். updated 17-12-2012குப்பிழான் இளைஞன் செல்வன் உதயகுமார் நிதர்சன் அவர்கள் 16-012-2012 ஞாயிற்றுக்கிழமை கடல் அலைகளால அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்துள்ளார் என்ற செய்தி குப்பிழான் கிராமத்தை மட்டுமல்ல புலம்பெயர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது வங்கியில் வேலை பார்க்கும் செல்வன் நிதர்சன் அவர்கள் அன்றைய நாள் விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் காரைநகர் கசூரினா கடலில் குளிப்பதற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் காற்று கொஞ்சம் வேகமாகவும், கடல் சிறிய கொந்தளிப்பாகவும் இருந்துள்ளது. ஆனாலும் பழக்கப்பட்ட கடற்கரையென்பதால் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தார். எதிர்பாராமல் வந்த பெரிய அலையினால் அவர் அடித்து செல்லப்பட்டார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. நண்பகலில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட அவரை தேடி கடலில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. அந்தி சாயும் நேரம் அவரின் உடல் மட்டும் கடற்கரைக்கு சற்று அப்பால் பனை வடலி பக்கம் ஒதுங்கியது. அவரின் உயிர் எல்லோரையும் விட்டு விண் உலகம் சென்றது. சிறந்த விளையாட்டு வீரர் செல்வன் நிதர்சன். உதைபந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டம் போன்ற துறைகளில் சிறந்தவரும், எல்லோருரிடமும் அன்பாக பழகும் சுபாவமும் கொண்ட அவரின் இழப்பு குப்பிழான் மக்களை குறிப்பாக இளைஞர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு அஞ்சலி தெரிவிக்குமுகமாக குப்பிழான் சந்தியெங்கும் தோரணம் கட்டப்பட்டு, சோக கீதங்கள் இசைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இளைஞர் குளாம் சந்தியில் ஒன்று கூடி அஞ்சலி செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

அதேசமயம் அவரின் உடல் யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குப்பிழான் தெற்கை பிறப்பிடமாக கொண்ட செல்வன் நிதர்சன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கின்றோம்.

நாளை நடைபெறவிருந்த சந்திப்பு தீடீரென நிறுத்தி வைப்பு. updated 16-12-2012

11-12-2012 செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த சந்திப்பு தீடீரென வேறு திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறியத்தருகிறார்கள். எமது மக்கள் பெருமளவு அணி திரள்வதை கேள்வியுற்ற பிரதேச செயலகம் புதிய திகதி ஒன்றையும் கொடுக்காமல் இடைநிறுத்தியுள்ளனர். பெருமளவு பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் வருகை தந்தால் சேச்சை அமைப்பதற்கு அனுமதி கொடுக்க முடியாமல் போகலாம் என்று கருதி இதை நிறுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இன்று யாழில் உள்ள பெரும்பாலான அரச அதிகாரிகள் ஒரு தனிக் கட்சி உறுப்பினர்களாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும், அதற்கு தகுதியில்லாதவர்களுமே உள்ளனர். அவர்களிடம் நாம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. ஒன்று சேர்ந்த எமது பலத்தை காட்டுவதன் மூலமே இந்த சதிகளை முறியடிக்க முடியும். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சேச்சை இயங்க அனுமதிக்க போவதில்லை என்று எமது மக்கள் உறுதியாக உள்ளனர்.

விசமிகள் சிலரால் சேதமாக்கப்பட்ட குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய மின் வாசிப்பு மாணி. updated 30-11-2012

எமது குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையதுக்கான மின் வாசிப்பு மானி ஆனது
சேதமாக்கப்பட்டமையால் மின் சாரப்பட்டியல் மீள செலுத்தப்பட்டும் மின்சார
விநியூகத்தினை மீளவும் உடனடியாக பெறமுடியாமல் இருகின்றது ……………………..
இது ஒருசிலரின் திட்டமிட்ட செயலா? எமக்கான அச்சுறுதலா? என்று வினா எழுப்புகின்றனர் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய நிர்வாகத்தினர்.
அதே சமயம் இவ்வாறான செயல் தவிர்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.

 


மதமாற்றத்திற்கு எதிராக அணி திரளும் இந்துக்கள். updated 20-10-2012


சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட தேவ சபைக்கு எதிராகவும், பண ஆசை காட்டி கட்டாய மதமாற்றத்திற்கும் எதிராகவும், எமது மக்கள் கொடுக்கும் குரல் உலகமெல்லாம் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. எமது கிராமத்தில் ஏற்பட்ட நிலமையிலும் பார்க்க மிகவும் மோசமான நிலமைகள் வெவ்வேறு ஊர்களிலும் நடைபெற்று வருகின்றன. வன்னிப் போர் அவலம் நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளது. மதமாற்றம் செய்யவதற்கு பல்வேறு கிறிஸ்தவ அமைப்புக்கள் நமது தாயக பிரதேசத்தை கழுகுகள் போல் வட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கணவரை இழந்த தாய்மார்கள் பிழைப்புக்கு வழியில்லாமல் அல்லல்படும் இந்த சந்தர்ப்பத்தை பாவித்து இரக்கமேயில்லாத கொடியவர்கள் தீவிரமான மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தில் 75 இந்து தமிழ் குடும்பங்கள் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். யாரும் இந்த அநீதிகளுக்கெதிராக குரல் கொடுக்க தயங்கினர், அல்லது பயத்தால் முன்வரவில்லை. ஒவ்வொருதரும் தமது ஆற்றாமையை மனதுக்குள்ளேயே புளுங்கிக்கொண்டு இருந்தனர். ஆனால் எமது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து மற்ற பெரியவர்களையும் அணி திரட்டி இந்த அநீதிகளுக்கு எதிராக தொடுத்த போர் எம்மை நோக்கி உலகத்தில் வாழும் இந்துக்களை ஒருகணம் திரும்பி பார்க்க வைத்தது. பல இந்து அமைப்புக்கள், அறிஞர் பெருமக்கள், மற்றைய ஊர்களில் உள்ள ஆலய நிர்வாகங்கள் எமது கிராமத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் நமது சாத்வீக போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்தும் வருகிறார்கள். அந்த வகையில் சின்மயா மிசன் சுவாமி யாக்கிர சைத்தன்யா சுவாமி அவர்கள் வருகை முக்கியமாகிறது.

குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் முன்மண்டபத்தில், சின்மயா மிசன் சுவாமி யாக்கிர சைத்தன்யா சுவாமி அவர்கள் முதன்முதலாக வருகைதந்து எமது குப்பிளான் மக்களிற்கான ஆசிகளையும் மக்கள் இந்துசமயத்தின் மீதுவைத்துள்ள பற்றினை பாராட்டியதுடன் தொடர்ச்சியாக அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தினையும் எடுத்துரைத்தார். மேலும் தமது உரையில் இந்துசமயத்தின் பெருமைகளையும் குப்பிளான் மண்ணில் பிறந்த மகான் காசிவாசி செந்தில்நாதயர் மற்றும் எஞ்சியுள்ள தனிதமிழ் சைவ கிராமங்களில் குப்பிளான் மண் தற்போதும் இந்துசமயத்திற்காக ஆற்றும் பங்களிப்புக்களை போற்றியதுடன் இந்துசமய கலாச்சாரத்தினை பாதுகாக்கும் ஓர் முன்மாதிரிக் கிராமமாகவும் திகழ்கிறது . காலத்திற்கு காலம் வேற்றுமதத்தினர் தமது மதத்தினை பரப்புவதற்காக ஆதியும் அந்தமும் இல்லாத இந்துசமயத்தினை அழிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதுடன் அவர்களின் போலியான நடவடிக்கைகள் தாமாகவே காணாமல்பேனதே வரலாறாகும் போன்ற பல்வேறு இந்துசமய கருத்துக்ளை இனிமையாக எடுத்துரைத்தார்.
21 வயதிற்குட்பட்டவர்களிற்கான உதைபந்தாட்ட போட்டி. updated 12-10-2012இலங்கை தேசிய காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2012 ற்கான 21 வயதிற்குட்பட்டவர்களிற்கான உதைபந்தாட்ட போட்டிகளானது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழக மைதானத்தில் உடுவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களிற்கிடையில் கடந்த 29.09.2012 அன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று 09.10.2012 ல் இறுதிப்போட்டி ஞானமுருகன் அணிக்கும் நியூவொறியஸ் அணிக்கும் இடையில் எமது கழக மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளில் பங்குபற்றிய எமது கழக அணி காலிறுதி வரை முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் ஞானமுருகன் அணி 03 கோல்களை அடித்து 03: 01 என்றவாறு வெற்றிபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாவட்டமட்ட போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் அணிக்கான சிறந்த வீரர்கள் தெரிவில் மிகச் சிறப்பாக விளையாடிய எமது கழக வீரர்களான நிறன்சன் மற்றும் டேவிட்குமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தகவல்
குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்

வலிகாமம் தெற்கு பிரதேச சபையால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிய கடிதங்கள். updated 06-10-2012உதயன் நாளேட்டில் வந்த செய்தி.யுக்தியை மாற்றிய தேவ சபை, வேடிக்கை மட்டும் பார்க்கும் மற்றையவர்கள் மற்றும் புலமைப் பரிசிலில் சித்தியடைந்தவர்களுடன் விரிகிறது.
updated 29-09-2012திருமதி அருந்தவம் அவர்களின் காட்டிக்கொடுப்பினால் அமைக்கப்பட்டிருக்கும் தேவ சபை கட்டிட வேலைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது சகலரும் அறிந்ததே. சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்ட அந்த கட்டிட வேலைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு திருமதி அருந்தவம் மிக மோசமான குறுக்கு வழியில் வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளார். அவருக்கு ஆதரவாக வேறு ஊர்களில் இருந்தும் தேவ சபையை சேர்ந்த குண்டர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். அதோடு ஊரிலுள்ள சிலரையும் நாள் கூலியின் அடிப்படையில் தம்மோடு இணைத்திருக்கிறார்கள். அவர்கள் பெரிய கும்பலாக வீடுகளுக்கு சென்று பணத்தை கொடுத்தும், பயமுறுத்தியும் கையொப்பம் பெற முயற்சி செய்கிறார்கள். அதை விட இன்னுமொரு கேவலமான தந்திரத்தையும் கையாள்கிறார்கள். அதாவது சிங்க கொடிகளை சேச்சுக்கு முன்னால் பறக்க விட்டு தமக்கு சிங்கள அரசின் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். இதனால் மக்கள் அச்சம் அடைந்து விடுவார்கள் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. ஆனாலும் சொக்கர்வளவை தளமாக கொண்டு இயங்கும் இந்து அமைப்பு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குப்பிழான் சமாதி கோவிலடியை சேர்ந்த நடேசபிள்ளை குடும்பம் வறுமை காரணமாக தேவ சபையில் ஏற்கனவே இணைந்துவிட்டார். ஆனாலும் அவர் தன் அயலவர்களிடம் பேசும் போது தாம் விரும்பி மாறவில்லையென்றும், வறுமை காரணமாக தான் மதம் மாறியதாகவும், அருந்தவம் தமக்கு மாதாந்தம் செலவுக்கு பணம் தருவதாகவும் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது தம்மை கையெழுத்து வேட்டைக்கு அழைத்த போது தான் பெடியங்களுக்கு பயந்து போக மறுத்ததாகவும், அதற்கு அருந்தவம் சொன்னார் சொக்கர்வளவு பகுதியை சேர்ந்த வயது போன கொஞ்சப் பேர் தான் இதற்கு இடைஞ்சல் போடுவதாகவும், இந்த பெடியங்கள் இதில் தலையிடவில்லையென்றும் அவங்களுக்கென்ன வெளிநாட்டிலை இருந்து காசு வருகிறது அவங்கள் குடித்து விட்டு கும்மாளம் போடுவதற்கே ரைம் இல்லை நீ பயப்படாமால் வா என்றாராம். காலம் செய்த கோலத்தை பார்த்தீர்களா ஒருகாலத்தில் வறுமையால் வாடிய குடும்பம் இன்று வறுமைக்கு விலை பேசுகிறார்கள். அதன் விலை தான் மதமாற்றம்.

இப்படி கேவலமான வேலைகளை செய்து சேச் கட்டி இந்த அருந்தவம் என்ன செய்யப்போகிறார், அவருக்கு என்ன லாபம். இதோ இதற்கான பதில் அமெரிக்காவை தளமாக கொண்ட இந்த மத அமைப்புக்கு பெருமளவு சொத்துக்கள் உள்ளது. வெள்ளை இனத்தவர்கள் மத விடயத்தில் அக்கறை கொள்வதில்லை, முஸ்லீம் மக்கள் இந்த விடயத்தில் மிகவும் கடுமையானவர்கள். ஆகவே தான் போரால் பாதிக்கப்பட்ட எமது தாயகப் பிரதேசத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். தேவ சபை கட்டி முடிந்தவுடன் அருந்தவம் அவர்கள் பெரும் தொகையை பெறுவார்கள் என்பது அங்கிருந்து கசியும் தகவல்கள். இந்த பணத்தாசையால் தான் கனடாவில் இருந்து வந்த பண்டிதரின் மகன் சோதி அவர்களும் முயற்சித்தார். தமக்கு ஏன் வம்பு என்று சுயநலத்தோடு ஒதுங்கியிராமல் இது ஒவ்வொருவருக்குமான கடமை. ஆகவே ஒவ்வொருவரும் இதை நிறுத்துவதற்கு தங்களால் முடிந்த பங்களிப்பை வளங்க வேண்டும். இந்து மன்றத்திற்கு தமது பூரண ஒத்துளைப்புக்களை வழங்க வேண்டும்.


இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைப் போட்டியில் 3 மாணவர்கள் எமது கிராமத்தில் இருந்து சித்தி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் படிக்கும் மாணவன் ஆவார்.


குப்பிழான் தெற்கில் இடம்பெற்ற திருட்டு சம்பவம். updated26-09-2012


சில நாட்களுக்கு முன்பு குப்பிழான் தெற்கு பங்கிலிட்டி பிரதேசத்தில் வீரசிங்கம் அவர்களின் மகளான ரோஜா+ வீட்டில் பட்ட பகலில் வீட்டை உடைத்து திருடர்கள் உட்புகுந்து பெருமளவு பணத்தையும், நகையையும் திருடி சென்றனர். வீட்டு உரிமையாளர்கள் ஆலயத்திற்கு சென்ற வேளை இச்சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக சுன்னாகம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.


பெரிய அச்சுறத்தலை ஏற்படுத்திய புதிய மதப்பிரிக்கான சேச் வேலைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
updated 23-09-2012திருமதி அருந்தவம் அருணாச்சலம் அவர்களினால் அமைக்கப்பட்டு வரும் புதிய மதப்பிரிவுக்கான சேச்சினுடைய கட்டிட வேலைகள் பிரதேச செயலகத்தினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. சொந்த குடியிருப்புக்காக வாங்குவதாக சொல்லி வஞ்சகமான முறையில் வீட்டோடு சேர்ந்த காணியை கொள்வனவு செய்து ஒருவருக்கும் தெரியாத முறையில் வீட்டின் பின்புறத்தில் பெரிய சேச் ஒன்றை கட்டியுள்ளார். ஆரம்பத்தில் பலருக்கு இந்த விடயம் தெரியவில்லை தெரிந்தவர்களும் ஏன் வம்பு என்று ஒதுங்கி கொண்டனர். விடயங்கள் பெரியளவில் எல்லோருக்கும் தெரிந்த பின்பு சட்டத்துக்கு புறம்பான விதத்தில் அமைக்கப்படும் இந்த கட்டிடத்தை பிரதேச செயலகம் இடை நிறுத்தியுள்ளது. ஆனாலும் திருமதி அருந்தவம் இந்த விடயத்தை விடுவதாக இல்லை ஊர் மக்களிடம் கையொப்பம் பெற்று மீணடும் கட்டிட வேலைகளை ஆரம்பிக்க முயன்றுவருகிறார். ஒரு கையெழுத்துக்கு ரூபா 4000 வீதம் கொடுத்து கையெளுத்து வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். மண்ணிலும் மதத்திலும் பற்றுக்கொண்ட கோட்டார்மனையை சோந்த இராசத்தி அவர்களிடம் கையெளுத்து பெற சென்ற வேளையில் அவரை பேசி அனுப்பியுள்ளார். இதனால் கோபமுற்ற அருந்தவம் அவர்கள் அவதூறான செய்திகளை தமது பேஸ்புக்கில் போட்டிருக்கிறார். சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். ஆனாலும் சைவ மதத்தில் பற்றுள்ள எமது கிராமமக்கள் துண்டுப் பிரசுரம் மூலமும் சட்ட ரீதியாகவும் சில வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு எல்லோரும் பக்க பலமாக நிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றோம். அதைவிட திருமதி அருந்தவம் அவர்கள் சமாதி கோவில் பகுதியில் சேச் கட்டுவதற்கும் முயன்று வருகிறார். அதற்காக காணி கொள்வனவிலும் ஈடுபட்டு வருகிறார். தயவு செய்து பணத்திற்கு ஆசைப்பட்டு உங்கள் காணியை அவர்களுக்கு விற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்கள். கடந்த மாதம் கனடாவிலிருந்து வருகை தந்த திரு பிரபாணசோதி(சோதி) அவர்கள் சின்ன சங்கக் கடைக்கு பக்கத்தில் அல்லோயா சமைய நிகழ்வு ஒன்று செய்ய முனைந்தவேளை ஊர்மக்களின் கடும் எதிர்பினால் அந்த முயற்சியை கைவிட்டு மீண்டும் கனடா திரும்பினார். ஆனாலும் தனக்கு சொந்தமான காணியையும், வைத்திலிங்கம் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு பகுதி காணியையும் சேர்த்து முள்ளு வேலி அமைத்துள்ளார். அதில் சேச் கட்டுவதற்கு அவர் முயலக்கூடும் என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். திருமதி அருந்தவத்திடம் பணபலம் உண்டு பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறார். என்னிடம் உள்ள பணத்தை வைத்து அரைவாசி குப்பிழானையாதல் மதமாற்றி காட்டுவதாக சத்தம் போட்டு கத்தியிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல் தெரிவிக்கின்றன. இவ்வளவு பெரிய சம்பவங்கள் நடைபெற்று, எங்கள் தனித்துவங்கள் அழிக்கப்படும் போதும் எங்கள் ஆலய நிர்வாகங்கள் கண்மூடி வாய் மூடி மெளனம் காக்கின்றன. வெளிநாட்டு மக்களிடம் பணத்தை கறந்து ஒவ்வொரு கோயிலும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு இடிக்கினம், கட்டுகினம் ஆனால் சமயம் அழிகிறதே என்ற கவலையோ, அல்லது அதை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வமோ தற்போது அவர்களிடம் துளியளவும் இல்லை. இதற்காக கொடுக்கப்படும் நேரத்தை ஏன் எமது மதத்தை காக்கவும், மக்கள் மதம் மாறுவதை தடுப்பதற்கும் முயலக்கூடாது. கோயிலுக்கு வருகிறவர்களையும் அவனுக்கு தொடக்கு, அவன் சாதி குறைந்தவன் என்று தடுத்து எமது மதம் அழிவதற்கு காரணகர்த்தாக்கள் இந்த ஆலய நிர்வாகங்களே. மக்களிடம் சமயம் சம்பந்தமான ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்த முயலவேண்டும். இதற்கு இதர பொது அமைப்புகளும் தங்களால் இயன்ற பங்களிப்பை சாத்வீக வழிகளில் செய்ய முயலவேண்டும். அண்மையில் வடக்கு கிழக்கில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணிப்பெடுப்புக்களில் 80 ஆண்டுகளில் ஒப்பிட்ட போது இந்துக்களின் வீதம் குறைவடைந்தும், கிறிஸ்தவர், முஸ்லீம்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. என்ன நடந்தாலும் எனக்கென்ன என்று இருந்தால் எதிர்காலத்தில் ஈழ நாட்டில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் மட்டும் தான் இருப்பார்கள்.
சைவ சமயத்தின் தனித்துவம் காக்க ஒன்றிணைவீர்! குப்பிளான் மக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள். updated 21-09-2012

சைவ சமயத்தின் தனித்துவம் காக்க ஒன்றிணைவீர் என்ற இந்தச் சுவரொட்டி தற்போது குப்பிளான் எங்கும் ஒட்டப்பட்டுள்ளது.
அங்கிருந்து இந்து சமயத்தின் மேல் தீவிர பற்றுக் கொண்ட அன்பர் ஒருவர் இந்த துண்டுப் பிரசுரத்தை எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த துண்டுப் பிரசுரத்தைப் படிக்க முன் உங்களுடன் ஒரு நிமிடம்,காலம் காலமாக தவப் பெரும் ஞானிகளாலும், அறிஞர் பெருமக்களாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்ட தொன்மையான எங்கள் இந்துமதம் படும் பாட்டைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது.

தனிச் சைவக் கிராமமாக இருந்த குப்பிளானில் இன்று அரங்கேறும் புதிய காட்சிகளை பார்க்க முடியாமல் அங்குள்ள பெரியவர்கள் உண்மையிலேயே மிகவும் வேதனைப்படுகிறார்கள். சிவனின் புகழ் பாடும் பாடல்களும், பிள்ளையார், முருகன், அம்மன் என்று பக்தி கீதங்கள் கேட்டுப் பழகிய எங்கள் குழந்தைகளும் பெரியவர்களும் இன்று தேவனின் பாடல்களை அதிக ஓசையோடு எந்நேரமும் கேட்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை ஒரு திட்டமிட்ட திணிப்பாகவே எங்கள் ஊரில் உள்ள பெரியவர்கள் வெளிப்படையாகவே பேசிக் கொள்கிறார்கள்.

இளைஞர்களாலும் பெரியவர்களாலும் இணைந்து கட்டமைக்கப்பட்ட எந்தவித சமரசங்களுக்கும் இடம் கொடுக்காத இந்து சமயத்தைப் பாதுகாக்கும் தீவிர இந்து அமைப்பு ஒன்று இன்றைய காலத்தின் உடனடித் தேவையாக உள்ளது.

இதனை உலகம் எங்கும் உள்ள எங்கள் மக்கள் உணர்வார்களா?

நன்றி நியு குப்பிழான்


ஆழிக்கப்பட்ட பாடசாலை மண்டப கட்டிட வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. updated 18-09-2012

எம்மை அழிக்க நினைக்கும் எதிரியை நம்பியிராமல் புலம்பெயர் தமிழர்கள் போரினால் அழிவடைந்த எமது தாயக பிரதேசங்களை தமது சொந்த முயற்சியாலும், சொந்த பொருளாதாரத்தாலும் கட்டி எழுப்ப முயன்று வருகிறார்கள். அந்த வகையில் எமது குப்பிழான் உறவுகளின் பங்களிப்புடன் நமது ஊரிலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 20 ஆண்டுகளுக்கு முன்பு முற்றாக அழிக்கப்பட்ட எமது பாடசாலையின் பிரதான மண்டபம் மீண்டும் அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அது கைகூடாமல் போனது. இப்போது பல பிரச்சினைகளையும் தாண்டி மாகாண கல்வி அமைச்சின் அனுமதி பெறப்பட்டு, கட்டிட வேலைகள் 19-09-2012 புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியத்தருகிறார்கள். இதற்கான ஒப்பந்தம் கடந்த ஞாயிற்றிக்கிழமை பாடசாலை அபிவிருத்தி சபைக்கும், எமது மண்ணின் மைந்தன் கிருபன் (Kanthu Sons Construction முகாமையாளர்) அவர்களுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இந்த பாடசாலையின் கீழ் மண்டபத்தை அமைப்பதற்கு 60 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. இதற்கான நிதியை புலம்பெயர் பழைய மாணவர்களிடமிருந்தும், எமது கிராம உறவுகளிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது. திரு வீரவாகு கிருஸ்ணராஜா(குகன்) அவர்கள் இந்த வேலைத் திட்டத்திற்கு பொறுப்பளாராக செயல்படுவார் என்று அறியத்தருகிறார்கள் பாடசாலை அபிவிருத்தி சபையினர்.

துடுப்பாட்ட சுற்றுப்போட்டி தொடர்பான அறிவித்தல். 30-08-2012

எமது விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்படும் மாபெரும் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியானது 29.08.2012 இன்று மாலை 4.00 மணிக்கு போட்டி ஒழங்கமைப்பு குழு தலைவர் (விக்கினேஸ்வரா விளையாட்டு கழக உபதலைவர்) திரு.சி.சிவசங்கர் தலைமையில் ஆரம்பமாகியது. இவ் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியானது யாழ் மாவட்ட 48 முன்னனி அணிகளிற்கு இடையில் சிறப்பாக நடைபெறவுள்ளதுடன் போட்டிகள் யாவும் விலகல் முறையில் 6 பேர் பங்குபற்றும் 5 ஓவர் கொண்டதான போட்டியாக அமைந்திருக்கும். இவ் மாபெரும் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் எமது விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்தின் சார்பிலும் 2 அணிகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி.

நிர்வாகம்
போட்டி ஒழங்கமைப்பு குழு – தலைவர் - திரு. சி.சிவசங்கர் 0774694141
செயளாளர் - திரு. இ.மயூரன் 0778058736
இனைப்பாளர் -திரு .வி.செந்தில்குமார் 0779679972

கனடாவில் கணவனால் குத்திக் கொல்லப்பட்ட குப்பிளான் பெண்ணின் உண்மை நிலவரம்! updated 18-08-2012குப்பிளானில் பிறந்து கனடாவில் வசித்து வந்த பாஸ்கரனின் இரண்டாவது மகளான அனுஜா அவர்கள் மது போதையில் இருந்த கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குப்பிளானைச் சேர்ந்த அப்புத்துரை அவர்களின் மூத்த மகனான பாஸ்கரன் அவர்களின் இரண்டாவது மகளான அனுஜாவே இவ்வாறு கொடூரமான முறையில் கொல்லப்பட்டவராவார்.

கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு வயது 21 என்பது தான் கொடுமையின் உச்சம். கடந்த வருடம் ஐப்பசி மாதம் இவர்களுக்கு திருமணப் பதிவு இடம்பெற்றுள்ளது. இன்னமும் திருமணம் இடம்பெறவில்லை. ஆனால் இருவரும் கனடாவில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ஏற்கனவே குடித்துவிட்டு பிரச்சினை பண்ணி இந்த பெண்ணை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் இந்த வீரக் கணவர். கணவனின் கொடுமை தாங்காத குறித்த பெண் தனிமையில் அடிக்கடி அழுது வந்துள்ளார்..

கணவனின் கொடுமை தாங்காத நிலையில் கனேடியப் பொலிஸாருக்கு குறித்த பெண் அறிவித்த காரணத்தினால் இரண்டொரு முறை சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். பிறகு ஒற்றுமையாக இருக்க முயற்சித்தபோது பெண்ணை கணவன் கத்தியால் குத்தி சாகடித்துள்ளார்.

குறித்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட தாத்தா அப்புத்துரை அவர்களும் பெண் பிள்ளையை வளர்த்த இராஜதுரை அவர்களின் மனைவியான தவேஸ்வரி மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்து இன்னமும் அதிர்ச்சி விலகாமல் உள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட குறித்த பெண் படிப்பில் மிகுந்த கெட்டிக்காரியாகவும் இருந்துள்ளார்..

கனடாவில் ஒருவனைக் காதலித்து கைப்பிடித்த அப்பாவிப் பெண்ணுக்கு கிடைத்த காதல் பரிசு கத்தியால் குத்தப்பட்ட அவலச் சாவு...

நல்ல பெடியன் என்று விசாரித்து செய்து வைத்த உறவே விபரீதத்தில் முடிந்துள்ளது...

வருகிற திங்கள்கிழமை தான் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது..

அப்பாவிப் பெண்ணைக் கொன்ற தறுதலைக் கணவனுக்கு எதிராக கனேடியப் பொலிஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

"குடி குடியைக் கெடுக்கும்.... சமயத்தில் மனுசியையும் கொல்லும்..."

 

வரலாற்றுச் சிறப்புமிக்க கற்கரை கற்பக விநாயகர் ஆலய மாகோற்சவ விஞ்ஞாபனம் மற்றும் சில செய்திகள். updated 03-07-2012

கற்கரை கற்பக ஆலய நிர்வாகசபை வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் இடம் பெற்றது அதன் விபரங்கள் வருமாறு

தலைவர்- கதிர்காமு சின்னராசா
உபதலைவர் - தில்லையம்பலம் சசிதரன்
செயலாளர் - ஏரம்பமூர்த்தி அனுக்ஷாந்தன்
உபசெயலாளர் - நாகமணி கணேசலிங்கம்
பொருளாளர் - நாகலிங்கம் செல்வரட்ணம்
கணக்கு பரிசோதகர் - நல்லதம்பி சிவலிங்கம்.

கடந்த சனிக்கிழமை நிர்வாக சபையினருக்கும் திருவிழா செய்பவர்களுக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஆலய மகோற்சவம் எதிர்வரும் 23-07-2012 ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர் மாவை சேனதிராஜா அவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது அவர்களால் விளையாட்டுக் கழகத்திற்கு 10,000 ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டது,

எதிர்வரும் 23-07-2012 திங்கட்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க கற்கரை கற்பக விநாயகர் ஆலய மாகோற்சவ விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 31-07-2012 செவ்வாய்க்கிழமை தேர் திருவிழாவும் இடம்பெற இருக்கிறது. கொடியேற்றம், தேர்த்திருவிழாவை TRT தமிழ் ஒலி நேரடியாக அஞ்சல் செய்கிறது. இதன் விபரம் வருமாறு ஜரோப்பிய நேரம் காலை 5.00 மணி தொடக்கம் காலை 8.30 வரை.

எமது கிராமத்தில் 1980க்கு முன்னர் இருந்த நிலமை மெல்ல மெல்ல மாறி வருகிறது. இளைஞர்கள் சமுதாய கண்ணோட்டத்தோடு செயல்பட தொடங்கியுள்ளார்கள். இதன் அறுவடை எப்படி இருப்பினும் ஆரம்பமாகியது எல்லோருக்கும் மகிழ்ச்சி தான்.??????

பெண்கள் தனித்திருந்த வீட்டில் நகை பணம் கொள்ளை -அச்சத்தில் பொதுமக்கள் - குப்பிளானில் சம்பவம்

[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2012, 08:29.07 PM GMT ]

குப்பிளானில் பெண்கள் தனித்திருந்த வீடொன்றினுள் புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்த பெருந் தொகையான பணம் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் குப்பிளான் தெற்கு கன்னிமார் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

பெண்கள் தனித்திருந்த வீட்டிற்கு நேற்று அதிகாலை சென்ற முகமூடியணிந்த நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டின் உள்ளே சென்ற இவர்கள் மூன்று இலட்சம் ருபா பெறுமதியான நகை மற்றும் பணம் உட்பட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இசம்பவத்தின் போது குறித்த வீட்டில் மூன்று பெண்கள் மட்டுமே இருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு பெண்களே தனித்திருந்த வீட்டினுள் கொள்ளைக் கும்பல் சென்றதனால், அங்கு பெண்கள் தான் தனித்திருக்கின்றார்கள் என கொள்ளைக்கும்பலுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன என மக்கள் அச்சத்தில் தெரிவித்துள்ளனர்.

 

யாழ். குப்பிழான் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் புதிதாக பாதுகாப்பு வேலி அமைக்கும் இராணுவம்


யாழ். குப்பிழான் - வடக்கில் கண்ணிவெடியகற்றப்பட்டு, மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களையும் உள்ளடக்கி இராணுவத்தினரால் புதிதாக பாதுகாப்பு வலயத்திற்கான வேலி அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், 22 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு ஒக்டோர் மாதமளவில், கண்ணிவெடியகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு, மீள்குடியேற்றத்திற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி, காசுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் தமது வாழ்விடங்களை துப்புரவு செய்து வந்தனர்.

இந்நிலையில் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போர்க்கால மண் அணை அகற்றல் திடீரென நிறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியிலிருந்து, மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிக்குட்பட்டுச் செல்லும் மண் அணைக்கூடாக உயர்பாதுகாப்பு வலயத்திற்கான வேலிகளை படையினர் கடந்தமாதத்தின் இறுதிப்பகுதியிலிருந்து அமைத்து வருகின்றனர்.

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் 250பரப்பு நிலம் இராணுவத்தினரால் மீண்டும் எடுக்கப்படுகின்றது.

மேற்படி 250 பரப்பு நிலமும் பொதுமக்களின் வீட்டுநிலம் மற்றும் தோட்டம் நிலமுமேயாகும். மேலும் மீண்டும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படும் நிலப்பகுதிக்கு முன்னாலுள்ள பகுதியிலும் மக்கள் மீள்குடியேற மறுத்து வருகின்றனர்.

முழுவதும் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் மீண்டும், இராணுவத்தினரின் வேலிகள் மற்றும் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகாரித்துள்ள நிலையில், அப்பகுதியில் மீள்குடியேறி வாழ முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் 22வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் மீளக்குடியேற முடியாத நிலையில் 200ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றன.