காளி கோவிலுக்கு புதிய நிர்வாக தெரிவும், புதிய வீட்டுத்திட்டமும். updated 18-09-2011


இந்தியா அரசாங்கத்தின் ஆதரவில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வீட்டுத் திட்டங்கள் அமைக்கும் வேலைத் திட்டங்கள் நடைபெற்ற வருகிறது. இந்த வீட்டுத்திட்டத்திற்கு எமது கிராமத்தில் இருந்து 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த வீடுகள் சமாதி கோவிலடி போன்ற பாதுகாப்பு வலயத்தில் இருந்த பகுதிகளில் அமைக்கப்படவுள்ளது. காணி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வீடுகள் பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள். சுமார் 5,50,000.00 ரூபா செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படவுள்ளது.

வைரவர் ஆலய புனருத்தானம் மற்றும் கனடா திருமண நிகழ்ச்சிகளுடன் செய்தித்தொகுப்பு. updated 30-08-2011கற்கரை விநாயகர் ஆலயத்தில் இருந்து தொடங்கி சமாதி கோவிலடி வரை முடியும் வீதி திருத்த வேலைகள் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அண்மையில் தான் சமாதி கோவில் பிரதேசம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மக்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கே இருந்த சமாதி கோவில் முற்றாக அழிக்கப்பட்டு வெறும் பற்றைகளை தான் காண கூடியதாகவுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னைய காலத்தில் பெருமளவு மக்கள் வாழ்ந்த இந்த பிரதேசம் இன்று ஒரு சூனிய பிரதேசமாக காட்சி அளிக்கிறது. ஆனாலும் எமது பிரதேசங்கள் இத்தகைய அழிவுகளில் இருந்து பழைய நிலைக்கு கொண்டு வருவது சகலருடையதும் கடமையாகும். இதன் ஒரு கட்டமாக எமது ஆலயங்கள் முக்கிய இடத்தை பெறுகின்றன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களவர் என்று பலர் எங்களை ஆட்சி செய்தார்கள். அவர்கள் ஆயுத பலத்தாலும், சலுகைகளை கொடுத்தும் மதம் மாற்ற முயற்சித்தார்கள் ஆனால் எமது மூதாதையர்கள் இவை எதற்கும் கீழ் படியாமல் அஞ்சாத நெஞ்சோடு பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஆலயங்களை நாம் கை விடலாமா. கடவுள் நம்பிக்கைக்கு அப்பால் தமிழர்களின் கலை, கலாச்சார மையமாக ஆலயங்களே விளங்குகின்றன. ஆலயங்கள் அழிக்கப்படும் போது நாம் நமது சுயத்தை இழக்கிறோம். ஆகவே அழிக்கப்பட்ட எமது சமாதி கோவிலை பழைய நிலைக்கு கொண்டு வர எல்லோரும் முயல வேண்டும். திரு வைரவநாதன் அவர்கள் இதனை மீழ் அமைக்க தன்னாலான முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். உங்கள் கைகளையும் அவரோடு இறுக பற்றிக்கொள்ளுங்கள்.அடுத்தது குப்பிழான் வடக்கில் உள்ள வைரவர் ஆலயம். இவ் ஆலயமானது பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டு முற்றாக அழிக்கப்பட்ட ஆலயம் ஆகும். இவ்வாலயம் ஆனாது திரு நடராசா குடும்பத்தினரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. மீண்டும் இந்த ஆலயமானது நடராசா குடும்பத்தினரால் புனருத்தான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்சமயம் வைரவர் சூலம் ஆனது ஆலமரத்தடியில் வைக்கப்பட்டு கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கும்பாபிசேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


குப்பிழான் வடக்கில் உள்ள வீரபத்திரர் ஆலயத்திற்கு செல்லும் ஆலய வீதி புனரமைப்பு நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இவ்வாலயமானது பெரிய பாதிப்புக்கள் இன்றி அப்படியே இருக்கிறது.

08-08-2011 செவ்வாய்க்கிழமை கற்கரை கற்பக ஆலயத்தில் நடைபெற்ற திருமஞ்ச திருவிழா பற்றிய செய்திக்குறிப்பு. updated 09-08-2011

08.08.2011 அன்று இடம்பெற்ற திருமஞ்ச திருவிழாவின் போது மாலை ஆரம்பிக்கப்பட்ட அபிசேக ஆராதனைகளை தொடன்ர்து சிறப்புற அழகுபடுத்தும் வகையில் அமைந்திருந்த நம் கற்கரை வாழ் மன்னனுக்கு வசந்தமண்டப பூயைகள் இடம்பெற்று அடியவர்களால் புதிதாக அமைக்கப்பட்ட திருமஞ்சத்தில் நம் தும்பிக்கையான் தன சகோதரன் மயிலோனுடன் வீதி வலம் வந்த இராக்காட்சி கான்பதர்க்கரிதேன்றே கூறலாம். விசேட மேளதாளங்களுடன் ஆங்காங்கே வீதிகளில் தவில் கச்சேரிகளும் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறு விக்கினம் தீர்க்கும் விநாயகனின் வளர்ச்சியானது நம் மக்களின் வளர்ச்சிக்கும் ஒரு வழி கோலும் என்பது திண்ணம்.

மேலதிக படங்கள்

நன்றி.
தகவல் மற்றும் படங்கள் குப்பிளானிலிருந்து தனுஷன்.வரலாற்று சிறப்பு மிக்க குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய கொடியேற்ற நிகழ்வு தொடர்பான செய்திக் குறிப்பு. updated 06-08-2011

வரலாற்று சிறப்பு மிக்க குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் மகோற்சவம் 04-08-2011 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சிவசஸ்ரீ கி.வைத்தீஸ்வர சிவாச்சாரியர் தலைமையில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது. காலை 5.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் பூசைகள் ஆரம்பமானது. அபிசேக ஆராதனைகள் நடைபெற்று அதன் பின்னர் வசந்த மண்டப பூசைகள் நடைபெற்றன, அதனைத் தொடர்ந்து கொடிக்கம்ப பூசைகள் நடைபெற்று பகல் 10.00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.

அதன் பின்னர் எம்பெருமான் உள்வீதி, வெளி வீதி வழியே திருவுலா வந்தார். அடியார்கள் தோழினில் சுமந்தபடி உள் வீதி, வெளி வீதி சுற்றி வந்தனர். எம்பெருமான் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த அந்த அற்புத காட்சியை அடியார்கள் கண்டு கூதூகலித்தனர்.

அதன் பின்னர் மஞ்சம் வெள்ளோட்டத்துக்கு விடப்பட்டது. அடியார்கள் மஞ்சத்தை இழுத்துக்கொண்டு வீதி உலா வந்தனர். முதன்முறையாக இம்முறை 5ம் திருவிழாவை மஞ்ச திருவிழாவாக செய்ய ஏற்பாடாகியுள்ளது. ஆலயத்தின் 5ம் திருவிழாவை செய்யும் அடியார்களால் சுமார் 20லட்சம் செலவில் மஞ்சம் செய்யப்பட்டு முதன் முதலாக வெள்ளோட்டம் விடப்பட்டது. இதனை வடிவமைத்தவர் திரு இராசரட்ணம் ஆச்சாரியார்.

ஆரம்ப காலங்களில் 5ம் திருவிழா என்பது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும். இந்த திருவிழா ஆனது 80களின் ஆரம்பம் வரைக்கும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் தற்போது வரையும் நடைபெறவில்லை. இத்திருவிழா ஆனது வீதி எங்கும் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தென்இந்தியாவில் இருந்து பாடகர்கள், பேச்சாளர்கள் அழைக்கப்பட்டு இரவிரவாக நடைபெறும் திருவிழா. இந்த திருவிழாவை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம். அந்த திருவிழாவை காலம்காலமாக செய்யும் அடியார்களால் இந்த மஞ்சம் அமைக்கப்பட்டது.

வெள்ளோட்டம் முடிவுற்று அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு கொடியேற்ற திருவிழா இனிதே முடிவுற்றது. அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இம்முறை வெளிநாடுகளில் இருந்து பெருமளவான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். முதல் நாளே சுமார் 50 இல் இருந்து 60 குடும்பங்களை காண கூடியதாக இருந்தது. தேர் திருவிழா அன்று மேலும் பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா மற்றும் எமது கிராம முக்கியஸ்தர்களின் முயற்சியினால் சுடலை காணி பெரும்பகுதி பெறப்பட்டு நிலத்தை சமப்படுத்தும் வேலைகளை செயற்படுத்தவுள்ளார்கள். updated 12-07-2007


குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா மற்றும் எமது கிராம முக்கியஸ்தர்களின் முயற்சியினால் சுடலை காணி பெரும்பகுதி பெறப்பட்டு நிலத்தை சமப்படுத்தும் வேலைகளை செயற்படுத்தவுள்ளார்கள். எமது கிராமத்தின் மயானமாக கடா கடம்பை மயானம் ஆனது ஆரம்பத்தில் 30 பரப்பாக இருந்தது. பின்னர் நில ஆக்கிரமிப்பாள்களால் படிப்படியாக நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 18 பரப்பு மட்டுமே எஞ்சி இருந்தது. தற்போது மறுபடியும் 10 பரப்பு காணி பெறப்பட்டு. சுடலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 50 லட்சம் ரூபா சுடலை வீதி அபிவிருத்திக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீதி திருத்துவதற்கு முன்பு நிலங்களை மட்டமாக்கினால் தான் அமையப்போகும் வீதி புதிய எல்லையோடு அமைக்க முடியும். நிலங்கள் தோண்டப்பட்டு பெரிய அகழிகளாய் இருக்கின்றன. இதை மட்டமாக்கும் பணி குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியாவின் உதவியுடன் செயற்படுத்தபடவுள்ளது. இதன் மூலம் மீட்கப்பட்ட அந்த பெரு நிலப்பகுதியை தொடர்ந்தும் தக்க வைக்க முடியும்.

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலையத்தினரால் நடத்தப்படும் முன்பள்ளி சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டி எதிர்வரும் 15-07-2011 வெள்ளிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.