நுவரெலியா மாவட்ட தமிழ் சிங்கள மாணவர்கள் யாழ்.குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்துக்கு விஜயம்

 

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட 06 பாடசாலைகளைச் சேர்ந்த தமிழ், சிங்கள மாணவர்கள் இணைந்து குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்திற்கு அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டனர்.

தமிழ் சிங்கள உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்பும் வகையில் யாழ்ப்பாணத்துக்கான சுற்றுப் பயணம் அமைந்திருந்தது. நயினாதீவு நாகவிகாரை, நாகபூசணி அம்மன் ஆலயம் ஆகியவற்றைத் தரிசித்த மாணவர்கள் தென்மராட்சியிலுள்ள சில பாடசாலைகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

அதனைத் தொடர்ந்து குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட குறித்த குழுவினர் அங்கு இடம்பெற்ற சமயம் சார்பான நிகழ்விலும், விசேட பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டனர்.

சிவபூமி ஆச்சிரமத்தின் பொறுப்பாளர் எஸ்.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவபூமி ஞான ஆச்சிரமத்தால் மேற்கொள்ளப்படும் சமயப் பணிகள் தொடர்பில் அவரால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போது மாணவர்களுடன், ஆசிரியர்கள், பௌத்த தேரர், கல்வி அதிகாரிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் ஆகியோரும் உடனிருந்தனர். வருகை தந்த அனைவருக்கும் சிவபூமி ஞான ஆச்சிரமத்தால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

தென்மராட்சியில் இடம்பெறும் கலை கலாச்சார விழாவில் பங்கேற்ற குறித்த குழுவினர் தமது மூன்று நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமது இருப்பிடம் நோக்கிப் பயணமாகினர்.

 

செய்தி மற்றும் படம்: ரவி

 

கற்கரை கற்பக விநாயகர் ஆலய நிர்வாக சபை உப தலைவர் திரு. தெட்சணாமூர்த்தி அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். updated 30-07-2014கடந்த காலங்களில் ஏற்பட்ட பல குழப்பங்களால் ஆலய நிர்வாக சபையினர் ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்தனர். அதன்பின்னர் புதிய நிர்வாக சபை ஏற்படுத்தப்பட்டது. இந்த நிர்வாக சபையின் உப தலைவராக திரு தெட்சணாமூர்த்தி அவர்கள் செயல்பட்டு வந்தார். நிர்வாகத்துக்குள் ஏற்பட்ட கருத்துவேற்றமை காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்தார். மேலும் அறிய முடிவதாவது பழைய நிர்வாகம் போன்று புதிய நிர்வாக சபையிலும் ஒரு சிலரே முக்கிய முடிவுகளை எடுப்பதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர். ஆலய மகோற்சவத்தின் பின்னர் புதிய நிர்வாக சபை அமைய வாய்ப்புள்ளதாக மேலும் கருத்து தெரிவித்தனர்.

வறுமை கோட்டில் வாழும் குப்பிளான் விக்னேஸ்வரா மகா பாடசாலை மாணவர்களுக்கு இலவச சப்பாத்துக்கள் வழங்கபட்டன. updated 17-06-2014


விக்னேஸ்வரா மக்கள் மன்றம் கனடா அமைப்பின் நிதி உதவியுடன் 33 மாணவர்களுக்கும் 3 மாணவிகளுக்கும் சப்பாத்துக்கள் மற்றும் சொக்ஸ் வழங்கபட்டன. அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடாவில் இருந்து வருகை தந்த திரு மதியழகன் அவர்கள் அன்பளிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்வுக்கு பிள்ளைகளின் பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் மொத்த பெறுமதி 35,000 ரூபாய்கள்.

 


இந்து மயான திறப்பு விழா மற்றும் பொன்விழா கொண்டாட்டம். updated 23-05-2014

 குப்பிழானை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வள்ளியம்மை கந்தையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவை முன்னிட்டு குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களுக்கு மதிய போசனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

22-09-2012 தொடக்கம் குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மதிய போசனத்திற்கு குப்பிழான் கலைவாணி கலைமன்றத்தால் 1,32,700.00 ருபாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் சிறப்பான முறையில் புனரமைக்கப்பட்டுள்ள குப்பிழான் கடா கரம்பை இந்து மயானம் 25-05-2014 அன்று திறப்பு விழா செய்ய ஏற்பாடாகியுள்ளது.

குப்பிழான் கிராமம் உருவாகியதன் 50 ஆம் ஆண்டில் நிற்கின்றோம். இந்த பொன்விழா ஆண்டை மிகவும் சிறப்பாக செய்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. புலம்பெயர் நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்புக்களின் நிதி உதவியுடன் ஊரில் உள்ள அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு பெரும் விழாவுக்கு தயார் படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த பெரும் விழாவில் குப்பிழானுக்கு வெளியல் வாழும் அறிஞர் பெருமக்களும், பொதுமக்களும் பங்கு பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

கற்கரை கற்பக விநாயகர் ஆலய இந்த வருட மகோற்சவத்தை நடாத்துவதென்று புதிய நிர்வாக சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது அவைகள் பற்றிய விபரங்கள் வருமாறு.

 


கற்கரை பிள்ளையார் ஆலயத்திற்கு புதிய முகங்களுடன் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


நீண்ட வரலாற்றையும் எமது ஊரின் பெருங்கோயிலாகவும் திகழ்ந்த கற்கரை கற்பக விநாயகர் ஆலய நிர்வாகத்தில் கடந்த சில வருடங்களாக பல பிரச்சினைகளும் குழப்பங்களும் இடம்பெற்று வந்ததை யாவரும் அறிவீர்கள். இதன் உச்சக்கட்டமாக 4 மாதங்களுக்கு முன்பு ஆலய நிர்வாகத்தினர் அனைவரும் இராஜினாமா செய்தனர். கடந்த 11ம் திகதி நடைபெற்ற கூட்டமும் குழப்பத்தில் முடிந்தது. இன்று உதவி அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டனர்.
அவர்களின் விபரங்கள் வருமாறு
தலைவர் பேராசிரியர் கந்தப்பு பாலசுப்பிரமணியம்
உப தலைவர் திரு இ.செ.தெட்சணாமூர்த்தி
செயலாளர் திரு கிருபானந்தகிருஸ்ணன்
உப செயலாளர் திரு ந.வைரவநாதன்
பொருளாளர் திரு சி.ரதீஸ்குமார்
அங்கத்தவர்கள்
திரு கந்தசாமி
திரு குணம்
திரு போமர்
திரு கிருபானந்தகிருஸ்ணன்

புதிய நிர்வாகம் பொறுப்பேற்றமையால் இந்த வருட உற்சவம் நடைபெறுவதற்கு சாத்தியங்கள் இருப்பதாகவே எதிர்வு கூறப்பட்டுள்ளது.


குப்பிழான் வடக்கு கிராம சேவகர் திரு ஞானசபேசன் அவர்கள் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார்.


குப்பிழான் வடக்கு கிராம சேவகராக 25 ஆண்டுகள் பணியாற்றிய திரு ஞானசபேசன் அவர்கள் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார். தனது 25 வருட சேவையில் எமது மக்களுக்கு அவர் ஆற்றிய பணி மகத்துவமானது. மிகவும் நேர்மையாகவும், எழிமையாகவும் மக்களுக்கு சேவை செய்த ஒரு நல்ல மனிதன் ஓய்வு பெறுகின்றார் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம் ஆகும். ஆனாலும் காலவோட்டத்தில் ஓய்வு என்பது தவிர்க்க முடியாதது ஆகும். அவர்களின் அளப்பரிய பணிக்கு எமது மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் ஓய்வு பெற்றாலும் அவரின் சேவை எமக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். திரு சோ.பரமநாதன் அவர்கள் குப்பிழான் வடக்கின் புதிய கிராம சேவகராக பொறுப்பேற்கின்றார்.

கற்கரை கற்பக விநாயகர் ஆலய இந்த வருட வருடாந்த மாகோற்சவம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. updated 25-04-2014


வழமை போல் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் இம்முறையும் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆலய திருப்பணிகள் மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யும் கும்பாபிசேகம் செய்யும் நோக்கோடு இந்த வருட உற்சவத்தை நிறுத்துவதாக நிர்வாக சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓரு ஆண்டுக்கு முதலே கும்பாபிசேகம் நடைபெற்றிருக்க வேண்டும் ஆனால் ஆலய நிர்வாகத்தினருக்கிடையே ஏற்பட்ட உட்பூசல் காரணமாக ஆலய திருப்பணியும், கும்பாபிசேகமும் இடம்பெறவில்லை. ஆலய மகோற்சவத்திற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் திடீரென நிறுத்தபடுவதாக எடுக்கப்பட்ட முடிவானது பக்தர்களிடையே அதிர்வலைகளையும், வாதப் பிரதிவாதங்களையும் உருவாக்கியுள்ளது. அண்மைக்காலமாக ஆலய நிர்வாகத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் நிலையில் இல்லாமல் இருந்து கொண்டு வருகின்றது. அண்மையில் ஆலய நிர்வாகத்தினர் ஒட்டு மொத்தமாக இராஜினாமா செய்தனர் என்பதும் அண்மை வாரத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் பெரும் குழப்பத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு தற்காலிக நிர்வாக சபையே இயங்கி வருகின்றது.

 

ஆலய புனருத்தானம் மற்றும் பாடசாலைக்கு திரு கிறிஸ்ணர் வழங்கிய உதவி. updated 20-04-2014

 


கடந்த வருடத்திலிருந்து 3 ஆலயங்களின் புனருத்தான பணிகள் மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்றன. சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலயம், குப்பிழான் வடக்க காளி கோவில், கேணியடி வைரவர் போன்றவையாகும். சொக்கர் வளவு ஆலயத்தை பொறுத்தவரையில் தேர்த் தரிப்பிடம் மற்றும் முன் பகுதியில்தேரடி வைரவர் ஆலயம் அமைக்கும் வேலைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படுகின்றது. உற்சவத்திற்கு முதல் வேலைகள் பூர்த்தியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. அதே போல் மற்ற ஆலயங்களின் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளபடுகின்றது.


பாடசாலை கட்டிடத்திற்கு வர்ணம் தீட்டப்படாத பகுதிகள் மீண்டும் வர்ணம் தீட்டுவதற்கு திரு கிறிஸ்ணர் ஜயா அவர்கள் ஒரு லட்சம் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார்.

அமரர் நாகேஸ்வரி நடராஜா ஞாபகார்த்தமாக குப்பிழான் விக்கினேஸ்வரா பாடசாலை மாணவர்களுக்கு மதியபோசனம் வழங்கப்பட்டது.

 

சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெறுகின்றார் எமது மண்ணின் மைந்தன். updated 09-04-2014

 

இலங்கை பல்கலைகழக விளையாட்டு சங்கத்தினால் நடாத்தப்படும் இலங்கை பல்கலைகழகங்களின் பல்வேறு விளையாட்டு அணிகளுக்கு இடையிலான தெரிவு செயப்பட்ட 2012,2013 ஆம் சிறந்த விளையாட்டு வீரர்களுக்காண விருதுகள் வழங்கும் விழா 2014.04.09 இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் எமது ஊரைச் சேர்ந்த ப,கிருஸ்ணகுமார் அவர்கள் பளு தூக்கல் விளையாட்டில் விருதை பெறுகின்றார். திரு கிருஸ்ணகுமார் அவர்கள் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுத் துறை பொறுப்பாளாராகவும் செயல்பட்டு வருகின்றார். இந்த விருதை பெறுவதன் மூலம் எமது தமிழ் சமூகத்துக்கும், எமது ஊருக்கும் பெருமை சேர்க்கின்றார். அவர்களுக்கு அனைவரின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அவரின் திறமைக்கு உரிய மதிப்பளித்து அவருக்கு கொடுக்கப்படும் பாராட்டானது எதிர் காலத்தில் மேலும் பல வீரர்கள் உருவாக ஊன்று சக்தியாக அமையும் என்பதில் ஜயமில்லை.


இன்று வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம் கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளது. updated 03-04-2014

செல்வரத்தினம் சஜிந்தன்  -  2A , 4C , 2S
பழனிவேலு டிலுக்சினி       -   A , 2B , 2C , 4S
பாலச்சந்திரன் சுதர்சனா    -  A , B, 2C , 4S
பாலகுமார் சொர்ணா         -  A , B , C , 4S
மேற்படி நான்கு மாணவர்களும்  கணித பாடத்துடன் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகைமை பெற்றுள்ளனர். 

அத்துடன்  சிவராசா தீபிகா என்னும் மாணவி  A , 3C , 2S   பெறுபேற்றைப் பெற்றிருப்பினும் கணிதத்தில் சித்தி பெறவில்லை.
பரீட்சைக்குத் தோற்றிய 11 மாணவர்களில் மேற்குறிப்பிட்ட ஐவரும் உயர்தரம் கற்க தகைமை பெறுகின்றனர். இவர்களைப் பாடசாலைச் சமூகம் வாழ்த்துகின்றது.

கடந்தகாலப் பெறுபேறுகள்

வருடம்              தோற்றியோர்                    சித்தி          சித்திவீதம்
2007                              20                                 07                     35%
2008                              12                                 05                     42%
2009                              26                                 05                     19%
2010                              18                                 06                     33 %
2011                               18                                04                     22%
2012                               12                                01                     08%
2013                               11                                05                      45%

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் கடுமையான உழைப்பினால் இந்த பெறுபேறை பெற முடிந்தது என்பது குறிப்பிடதக்கது இனி வரும் காலங்களில் பாடசாலையின் வளர்ச்சி என்பது எமது ஊர் மக்களின் கைகளில் தான் உள்ளது. அவர்கள் தமது பிள்ளைகளை இங்கு கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் அப்போது தான் மிக சிறந்த பெறுபேற்றை பெற முடியும்.

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய கட்டிட பணிகள் ஆரம்பம் மற்றும் முன்பள்ளிக்கு புதிய நிர்வாகம். updated 22-02-2014குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய கட்டிட பணிகள் நீண்ட கால இழுபறிக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கந்துஸ்தன் கட்டிட ஒப்பந்த காரருக்கும், விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாகத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் வேலைகள் ஆரம்பாகியுள்ளன. இந்த கட்டிட வேலைகள் இந்த வருட நடுப்பகுதியில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 


முன்பள்ளிக்கு புதிய நிர்வாகம்.


குப்பிழான் விக்கினேஸ்வரா முன்பள்ளி நிர்வாகத்தின் புதிய தலைவராக திரு கணேசலிங்கம் அவர்கள் பொறுபேற்றுள்ளார். அண்மையில் ஏற்பட்ட வன்முறை ரீதியிலான அசம்பாவித சம்பவத்தால் பழைய நிர்வாகி எதுவித முன்றிவுப்புமின்றி தமது பதவியை இராஜினாமா செய்தார். இதனால் முன்பள்ளியின் செயல்பாடுகள் முற்றாகவே செயலிழக்குமோ என்று எல்லோரும் அஞ்சியிருந்தனர். யாரும் இதன் நிர்வாகத்தை பொறுப்பேற்க முன்வராத காரணத்தால் இந்த நிலை நீடீத்தது. . குறிப்பிட்ட சிலரே எல்லா நிர்வாகத்திலும் இருப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் இந்த நேரத்தில் புதியவர்கள் யாருமே இப்படியான சமூக வேலைகளில் தம்மை இணைத்துக்கொள்ள பின்னடிக்கிறார்கள். அதேசமயம் தனிநபர்கள் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களையும் இந்த சமூக வேலைகளில் ஒதுங்கியிருக்கும் செயல்பாடுகளை ஒரு சிலர் மேற்கொள்வது கவலை அளிக்கும் செயல்பாடாகும். இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார் திரு கணேசலிங்கம் அவர்கள் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.

குப்பிழான் விக்கினேஸ்வரா பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள். updated 02-02-2014

 

குப்பிழான் கற்கரை ஆலய நிர்வாகத்திற்கும் பூசகருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு முடிவுக்கு வந்தது. updated 12-01-2014

ஆலய நிர்வாகத்திற்கும் பூசகருக்கும் ஏற்பட்ட பிணக்கினால் ஆலய நிர்வாகத்தினர் அனைவரும் இராஜினாமா செய்தனர். தற்காலிகமாக வேறு ஒரு பூசகர் கோயில் பொறுப்புக்களை ஏற்று நடத்திக் கொண்டு வந்தார். இந்த பிணக்குகள் பேச்சுவார்த்தைகள் மூலமாக ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க ஒரு சிலர் முற்பட்டமையால் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதானதற்கு காரணமாகும். ஆனாலும் காலம் கடந்தாதல் இரு தரப்பும் தமது பிடிவாதத்தை கை விட்டு இதற்கு ஒரு நல்ல முடிவை கொண்டு வந்துள்ளனர். இதன் பிரகாரம் பழைய பூசகர்களே எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் இந்த பொறுப்பினை ஏற்பார்கள் என அறியத்தருகின்றார்கள்.