தவ முனிவரின் தமிழ் மந்திரம் என்ற நூல் வெளியீட்டு விழா பற்றிய விபரங்கள். updated 29-07-2013


சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்கள் எழுதிய தவ முனிவரின் தமிழ் மந்திரம் என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை யாழ் இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்றது. மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இந்த விழாவில் பல அறிஞர்கள் பங்கு பற்றி சிறப்பித்தனர். திரு சிவ மகாலிங்கம் அவர்கள் சைவ சமய வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் பெரும்பங்கை ஆற்றிவருகின்றார். இதுவரை பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் எமது மதத்திற்கு ஆற்றும் பணி மிகவும் மகத்தானது.

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா சன சமூக நிலைய அடிக்கல் நாட்டு விழா புகைப்படங்கள் இணைப்பு. updated 17-07-2013

குப்பிழான் விக்கினேஸ்வரா சன சமூக நிலைய அடிக்கல் நாட்டு விழா 15-07-2013 திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கட்டிடமானது இரண்டு மாடிகளாக அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சன சமூக நிலையத்தினால் எமது ஊர் மக்கள் பெரும் பயனை அடைவார்கள் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. இப்படி ஒரு சன சமூக நிலையத்தை அமைக்க வேண்டும் என்பது எமது மக்களின் நீண்ட நாள் கனவு. இந்த கனவவை நனவாக்க முனைகிறார்கள் கனடா மக்கள் மன்றம். அதற்கு எல்லோருடைய ஒத்துளைப்பும் பங்களிப்பும் அவசியம். போரினால் அழிவுண்டு போயுள்ள எமது கிராமங்களையும் நகரங்களையும் அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் என்று யாரும் கனவு காணாமல் நாமே எமது சொந்த பங்களிப்புடன் அபிவிருத்தி செய்வது எதிர்கால தமிழின இருப்புக்கு அத்தியாவசியமாகும். ஒவ்வொரு ஊரும் இப்படி வளர்ந்தால் எமது தாயக பிரதேசம் செழித்து வளரும்.



குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழத்தின் கலந்துரையாடல் தொடர்பான விடயங்கள். updated 23-05-2013

விளையாட்டு கழக புதிய மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்தல் தொடர்பான கலந்துஉரையாடல் எதிர்வரும் 26 . 05 . 2013 அன்று பிற்பகல் 6.00 மணி அளவில் மைதானத்தில் இடம் பெற உள்ளது. இதன் போது பல முக்கிய விடயங்கள் கலந்துரை யாட எமது உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் படி வேண்ட படுகின்றிர்கள்


சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 2013 பற்றிய விபரங்கள். updated 17-05-2013
கொடியேற்றம் - 26-06-2013 புதன்கிழமை
தேர்த்திருவிழா - 06-07-2013 சனிக்கிழமை
தீர்த்ததிருவிழா - 07-07-2013 ஞாயிற்றுக்கிழமை
12 நாட்கள் இந்த மகோற்சவ விஞ்ஞாபனம் சிறப்பாக நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர் ஆலய நிர்வாகத்தினர். இந்த இராதோற்சவ நிகழ்வை குப்பிழான்வெப் நேரடி ஒலிபரப்பு செய்கின்றது என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் சார்பில் 2 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் அன்பளிப்பு செய்யப்பட்ட காட்சிகளை இங்கே காண்கிறீர்கள்.



கற்கரை கற்பக விநாயகர் ஆலய மகோற்சவ நேரடி ஓலிபரப்பு TRT தமிழ் ஒலியில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் திரு பஞ்சாட்சரதேவன் அறியத்தருகிறார்கள்.
ஒலிபரப்படும் நாட்கள்.
கொடியேற்றம் - 11-08-2013 ஞாயிற்றுக்கிழமை
தேர் உற்சவம் - 19-08-2013 திங்கட்கிழமை
தீர்த்த உற்சவம் 20-08-2013 செவ்வாய்க்கிழமை

அருள்மிகு கன்னிமார் ஆலய வருடாந்த உற்சவம் பற்றிய விபரங்கள். updated 17-03-2013
கொடியேற்றம் - 16-04-2013 செவ்வாய்க்கிழமை
தேர்த்திருவிழா - 24-04-2013 புதன்கிழமை
தீர்த்த திருவிழா - 25-04-2013 வியாழக்கிழமை

எமது மக்கள் இந்த உலகப் பந்தெங்கும் பரந்து பட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் முக்கிய சந்திப்பு மையமாக தற்போது விளங்குவது கற்கரை கற்பக ஆலய வருடாந்த உற்சவமாகும். அந்த வகையில் உங்கள் வேலை இடங்களில் இருந்து விடுமுறைகளை விண்ணப்பிப்பதற்கும், விமான சீட்டுகளை பெறுவதற்கும் வசதியாக உற்சவ விபரங்களை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

கொடியேற்றம் - 11-08-2013 ஞாயிற்றுக்கிழமை
தேர் உற்சவம் - 19-08-2013 திங்கட்கிழமை
தீர்த்த உற்சவம் 20-08-2013 செவ்வாய்க்கிழமை

 

கொள்ளையர்கள் தொடர்ந்து அட்டகாசம்! குப்பிளானில் பதற்றம் (Full Report)


குப்பிளான் தெற்கு கன்னிமார் கோவிலடியில் நேற்றிரவு
04/03/2012 இடம்பெற்ற திருடர்களின் வாள்வெட்டில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.

... இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மருமகன் இல்லாத நேரம் பார்த்து அத்து மீறி வீட்டினுள் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் குறித்த பெண்மணி அணிந்திருந்த தங்கச் சங்கிலியினை அபகரிக்க முற்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து சுதாகரித்துக் கொண்ட பெண்மணி உரத்த குரலில் கூக்குரலிட்டுள்ளார். இதனை அடுத்து பெண்ணின் காலில் வாளால் வெட்டிய திருடர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோட முன்னதாக அங்கிருந்த சிறுமியின் தோடுகளை மிரட்டிப் பறித்ததோடு வாள் வெட்டுக்கு இலக்கான பெண்ணின் சங்கிலியோடும் அங்கிருந்து தலைமறைவானதாக தெரிய வந்துள்ளது.

கொள்ளையர்கள் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் பிஸ்டல் கைத்துப்பாக்கியும் வைத்திருந்தமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 50 வயதான ந. திரவியம் என்பவரே வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

இச்சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் உடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.

கொள்ளையர்கள் கொண்டு வந்த கூரிய ஆயுதங்களில் சில இங்குள்ள தெருக்களில் மீட்க்கப்பட்டன. குறித்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த குப்பிளான் வாழ் மக்கள் நேற்றிரவு முழுவதும் விழிப்புடன் குப்பிளான் வீதிகளில் நின்றிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இதனிடையே இன்று 05/03/2012 பிற்பகல் குப்பிளான் சுடலை மடத்துக்கு அருகே செல்லும் வீதியில் இடம்பெற்ற பிறிதொரு சம்பவத்தில் குப்பிளானைச் சேர்ந்த இளம் பெண் மயூரி என்பவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பறிபோயுள்ளது.

பட்டப்பகலில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பெண் துரிதமாகச் செயற்பட்டு திருப்பித் தாக்கியுள்ளார். இதன் காரணமாக கொள்ளையனின் கைத்தொலைபேசி மீட்க்கப்பட்டது.

பிந்திக் கிடைத்த தகவல்களின் படி குறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தொடரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கோடு இன்று இரவு குப்பிளான் வீதிகளில் ஆங்காங்கே எமது இளைஞர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்ததைக் காண முடிந்தது.

இவ்வாறான துணிகரத் தாக்குதல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் என்பன படையினர் மற்றும் பொலிஸாரின் உதவி, ஒத்துழைப்பு இன்றி மேற்கொள்ள முடியாது என்று குப்பிளான் வாழ் மக்கள் அடித்துக் கூறுகின்றார்கள்.

 

 

 

குப்பிழான் மைந்தன் ஒருவர் வவுனியா சமாதான நீதவானாக தெரிவு செய்யப்பட்டார் மற்றும் சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகம். updated 11-01-2013

குப்பிழானை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு கஜேந்திரகுமார் சிவபாதம் அவர்கள் வவுனியா மாவட்ட சமாதான நீதவானாக வவுனியா மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பேராதனை பல்கலைக் கழக கலைமானிப் பட்டதாரியான இவர், யாழ் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் பட்டம் பெற்று வருகிறார். சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவரான இவர், அரசியல் பணிகளிலும், வன்னி மக்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். அவரின் தகப்பனார் அமரர் சிவபாதம் அவர்கள் கற்கரை கற்பக ஆலய வளர்ச்சிக்கு சுயநலமில்லாத பெரும் தொண்டாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பிழான் விக்கினேஸ்வரா சன சமூக நிலையத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். அதன் விபரங்கள் வருமாறு.
தலைவர் - ந.சிவலிங்கம்
உப தலைவர் - இ.நீரூபன்
செயலாளர் - வை.தசீகரன்
பொருளாளர் - க.சின்னராசா
முன்பள்ளிக்கு பொறுப்பாக வை.ஜெனார்த்தனன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

குப்பிழான் குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவும் மற்றும் வருடாந்த கணக்கு அறிக்கையும். updated 01-01-2013


எமது குறிஞ்சிகுமரன் சனசமூக நிலைய பொது கூட்டம் 26/12/12 அன்று நடைபெற்றது. இதன் போது புதிய நிர்வாக தெரிவும் இடம் பெற்றது. அந்த வகையில் புதிய நிர்வாகத்தினர் ஆக
தலைவர் த .நெடுமாறன்
உப தலைவர் கு .வியகுமார்
செயலாளர் செ . செந்தூரன்
உப செயலாளர் .ப .மயூரன்
பொருளாளர் க . அருளரசன் தெரிவுசெய்யப்பட்டனர் .

மற்றும் கணக்கு ஆய்வாளர் - கு .உதயகுமார்.
மற்றும் எமது சனசமூக நிலையத்துக்கான வருங்கால செயற்திட்ட ஆலோசகர்கள் ஆக இருவர்
நியமிக்கப்பட்டனர் .
சோ . பரமநாதன்
ப . வசந்தகுமார்

அன்றைய கூடத்தில் நிர்வாக சபை உறுப்பினர்கள் 11 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.
மேலும் புதிய நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த செயர்த்திட்டம் எமக்கான மைதானம்
அமைத்தல் , எம்மீது பற்று உள்ள புலம் பெயர் உள்ளங்கள் அவர்களை எம்கூட
இணைத்து அவர்கள் ஆலோசனை பெற்று செயற்திட்டங்களை வகுத்தல் போன்ற பல
விடயங்கள் கலந்து அல்லோசிக்கப்பட்டது .

எமது சனசமூக நிலைய 10/11/12 இல் இருந்து இன்று வரையுமான கணக்கு விபரங்கள்

வரவு
சி . முருகவேல் (10.11.11) - 6000
இ .காண்டீபன் (16.02.12 ) - 7000
க . மோகன் - 12000
ஸ்ரீகாளி இடம் பெற்றுகொண்டது - 3000
க . மோகன் - 4000
வங்கியில் இருந்து எடுத்தது - 8000

மொத்தம் - 40000



செலவு
உதயகுமார்க்கு கொ்டுத்தது
(முன்னைய நிர்வாக கடன்) - 6180
பட்டம் '12" ஆணி (2.12.11) - 550
கூலி (10.12.11) - 800
பொங்கல் செலவு - 1030
விளையாட்டுக்கழககத்துக்கு கொடுத்தது (20.3.12) - 600
வங்கிப்புத்தகம் திறந்தது - 500
புதிய படம் தயாரித்தது (24.4.12) - 500
மின்சாரக் கட்டணம் - 7500
(10.11.11 இல் இருந்து 22.11.2012)

வரை பத்திரிக்கை செலவு - 21240

மொத்த செலவு - 38900

மீதி - 1100


வங்கயில் இருந்தது - 9876

வங்கியில் இருந்து எடுத்தது - (11.10.12) - 8000
தற்போதய வங்கி மீதி - 1876