3333333333


குப்பிழான் விக்கினேஸ்வரா கலைவாணி கலைமன்றம் மொன்றியல் அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட சந்திப்பும் பதிய திட்டங்களும்.

 குப்பிழான் விக்கினேஸ்வரா கலைவாணி கலைமன்றம் மொன்றியல் சார்பில் திரு பரமநாதன் குகானந்தன் அவர்களுக்கும் குப்பிழான் விக்கினேஸ்வரா பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்களுக்கான சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இதன் போது ஆண்டு தோறும் நடைபெறும் செம்மண் இரவு நிகழ்ச்சிகளின் காணொளி பதிவும் ஒளிபரப்பபட்டது. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர். வெளிநாட்டவர் அமைப்பின் சார்பில் புலமை பரிசில் பெற்றவர்களுக்கு வங்கியில் பணம் வைப்பில் இடப்பட்டு வங்கி புத்தகமும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. மாணவர்களின் சத்துணவுக்கான மரக்கறி வகைகள் கலைவாணி கலை மன்றத்தால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் முன்பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக மதிய உணவு இந்த அமைப்பினால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நன்றி - கோகுலன் விமலேஸ்வரன்

 

60 ஆண்டுகளுக்கு பிறகு குப்பிழானில் பறந்த நீலக் கொடி. updated 03-08-2013
கடந்த வாரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பொதுக் கூட்டம் குப்பிழான் மண்ணில் 60 வருடங்களுக்கு பிற்பாடு நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதம வேட்பாளர் திரு அங்கயன் அவர்கள் உரையாற்றினார். இந்த பொதுக் கூட்டத்தில் பெருமளவிலான இளைஞர்கள கலந்து கொண்டு அங்கயனுக்கு தமது ஆதரவை தெரிவித்தனர். தமக்கு தேவயானவற்றை ஒரு மகயராக பட்டியலிட்டு திரு அங்கயனிடம் கையளித்தனர். திரு அங்கயன் அவர்கள் பல சலுகை திட்டங்களை அறிவித்தார். இதனால் மனம் குளிர்ந்த எமது இளைஞர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இன்று தாயகத்தில் தமிழர்களுக்கு உரித்தான சுயநலமே மேலோங்கி நிற்கின்றது. பெரும்பாலானவர்கள் உரிமையை விட தமக்கு ஒவ்வொரு விடயத்திலும் என்ன பலன் கிடைக்கும் என்று மட்டும் தான் எதிர்பார்க்கின்றார்கள். இதை சரியாக புரிந்து கொண்ட அரசியல்வாதிகள் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி வாக்குகளை பெற முயற்சிக்கின்றார்கள். குப்பிழானிலேயே இந்த நிலமை என்றால் மற்ற ஊர்கள் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். வாழ்க தமிழ்


தம்பிமார்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து பொது கட்டிடங்களில் உங்கள் தலைவர்களின் போஸ்ரர்களை ஒட்டி அதை நாசமாக்காதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் வீட்டு சுவர்களில் ஒட்டுமாறு வேண்டுகின்றோம். எல்லோரும் எமக்கு தெரிந்த தம்பிகள் தான். எதிர் காலத்தில் அவர்கள் பொதுக் கட்டிடங்களில் துண்டுப் பிரசுரங்களை ஒட்ட மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.

 

காளி கோவில் திருவிழா காட்சி - படங்கள் விமலேஸ்வரன் கோகுலன் updated 01-09-2013

 குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்திற்கு வெளிநாட்டு வாழ் உறவுகளால் சேகரிக்கப்பட்ட பணம் அதன் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு updated 30-08-2013

குறிஞ்சிகுமரன் சனசமூக நிலையத்துக்கு வெளிநாட்டுகளில் இருந்து ந . லோகநாதன் அவர்களால் சேர்க்கப்பட்ட பணம் 250,000.00, 6,000.00, 100,000.00 மொத்தம் 4,10,000.00 வட்டி 45,000.00 இப் பணம் வங்கியில் நிரந்தர வைப்பில் இட்டபட்டு இருந்தது இப் பணத்தை தற்போது நிர்வாகத்திடம் ஒப்படைக்க பட்டுள்ளது , மொத்தமாக நிர்வாகத்திடம் ஒப்டைக்க பட்ட மொத்த பணம் 4,55,000.00 ரூபாய்க்கள்.


குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாக சபை கூட்டம். updated 28-08-2013

 


குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாக சபை கூட்டம் 25-08-2013 ஞாயிற்றுக்கிழமை குப்பிழான் வடக்கு கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக ரெண்டர் கோருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தின் போது கட்டிட பொறியியலாளர் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்தார். கட்டிடத்தின் கீழ் மாடியை அமைப்பதற்கு தற்போதுள்ள விலைவாசியின் அடிப்படையில் இவ்வளவு தொகை தேவைப்படும் என்றும். அதைவிட குறைந்த செலவில் செய்ய முயற்சித்தால் அவை தரமான கட்டிடமாக இருக்கப்போவதும் இல்லை என்றும் குறிப்பிட்டார். இவ்வளவு தொகையில் அமைக்கப்படும் கட்டிடம் தரமானதாக இருக்க வேண்டும் என்று வலுயுறுத்தினார். ஏற்கனவே ரெண்டர் கோரப்பட்டு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது யாவரும் அறிந்தது. 31-08-2013 அன்று உதயன், தினக்குரல் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படும் என்று அறியத்தரப்பட்டது. இனியும் காலத்தை கடத்தாது சரியான முறையில் ரெண்டர் கோரப்பட்டு நிபந்தனைகளை தளர்த்தாது விரைவில் முடிப்பதாக அறியத்தருகின்றார்கள்.குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையேயான சந்திப்பு. updated 25-04-2013

 குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையேயான சினேகிதபூர்வமான சந்திப்பு கடந்த 24-08-2013 சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த சந்திப்பானது அண்மையில் இடம்பெற்ற குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியே ஆகும். ஊரின் ஒற்றுமை கருதி இரு கழகங்களும் இணைந்து வெளியில் நடைபெறும் போட்டிகளில் ஒன்றாக விளையாடுவது பற்றி ஆராயப்பட்டது. இந்த சந்திப்புக்கு பின்னர் தாமும் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து வெளியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்ற தயாராக உள்ளதாவும் அறியத் தந்தார்கள். இதன் ஆரம்ப கட்டமாக வயதில் அனுபவம் மிகுந்தவர்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை சபையை விரைவில் உருவாக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் மிக முக்கியமான திருத்த வேலைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதி. updated 23-08-2013


குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு வகுப்பறைகள் நீண்ட காலமாக திருத்தப்படாமல் இருந்து வருகின்றது. இந்த கட்டிடத்தை திருத்தி வர்ணம் பூசுவது, அதிபரின் அலுவலகத்திற்கு வர்ணம் பூசுவது மற்றும் பாடசாலை தெற்கு புறம் உள்ள மதிலை 2 கல் வைத்து உயர்த்துவது மிகவும் அவசரமான தேவையாக உள்ளது. பாடசாலை மதிலை உயர்த்துவதற்கு காரணம் நீணட காலமாக பாடசாலையில் படிக்கும் மாணவிகளுக்கு வெளியிலிருந்து தொல்லைகள் கொடுத்து வருகின்றார்கள். இதனால் ஆசிரியர்கள் கற்பித்தல் செயல்பாடுகளில் பெரும்பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா, உதவும் கரங்கள் அமைப்பு சுவிஸ் ஆகியவற்றின் அனுசரணையுடன் வேலைகள் ஆரம்பக்கப்படவுள்ளன.இதற்கான நிதியை இரு அமைப்புக்களின் சார்பில் ந.மோகனதாஸ் அதற்கான நிதியை அதிபரிடம் வழங்குகின்றார்.

 

குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம், சனசமூக நிலைய பிரதிநிதிகளுடான சந்திப்பு. updated 18-08-2013

 குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம், சனசமூக நிலைய பிரதிநிதிகளுடன் சினேகிதபூர்வமான சந்திப்பு ஒன்று 17-08-2013 சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள், தற்போதைய நிலமை, எதிர்காலத்தில் ஆற்றப்பட வேண்டிய விடயங்கள் போன்றன விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடல்கள் திறந்த மனத்துடன் நட்பு ரீதியாக இடம்பெற்றது. தற்போது உள்ளது போல் இரண்டு கழகங்களும் செயல்பட்டுக் கொண்டு வெளியில் நடைபெறும் போட்டிகளில் ஒன்றாக சேர்ந்து ஒரு பெயரில் பங்கு பற்றுமாறு அவர்களிடம் வேண்டிக் கொள்ளப்பட்டது. இரண்டு பகுதியினரும் சேர்ந்து விளையாட குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழகம் சம்மதித்தாலும் என்ன பெயரில் விளையாடுவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும் அதையும் சாதகமாக பரிசீலிப்பதாக குறிப்பிட்டார்கள். மேலும் இரு கழகங்களுகக்கும் வயது முதிர்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை சபையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கு இடையேயான சந்திப்பு 20-08-2013 செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முதல் எல்லோரும் ஒன்றாக இருந்த போது மாவட்ட மட்டத்தில் மூன்றாவது இடத்தில் குப்பிழான் விக்கினேஸ்வரா இருந்தது. இன்று ஏற்பட்ட பிளவு காரணமாக பின் தள்ளப்பட்டு எமது ஊருக்கு கிடைக்க வேண்டிய நியாயபூர்வமான வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம் என்பது தான் தற்போதைய உண்மையான நிலமை. இரண்டு பகுதியினரும் முன்னோக்கி வருவதாக குறிப்பிட்டாலும் உண்மை நிலமை அதற்கு எதிர்மாறாக உள்ளது. எமது ஊரின் நன்மை கருதி இரண்டு பகுதியினிரும் உளப்பூர்வமான விட்டு கொடுப்புக்களை மேற்கொண்டால் தான் ஒற்றுமை என்பது சாத்தியமாகும். இரண்டு பகுதியிலும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் வெற்றி வாய்ப்புக்களை இழந்து வருகின்றோம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. தமிழர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை இன்மையே எம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அதனை எமது கிராமத்திலும் இருக்க அனுமதிக்க கூடாது. இரண்டு கழகங்களின் புலம்பெயர் ஆதரவாளர்களும் தமது மனதை விசாலமாக்கி இதனை சாதாகமாக பரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஊரில் பற்றுள்ள ஒவ்வொருவரினதும் அவா.

 

பாடசாலை அதிபர் அவர்களுக்கும் புலம்பெயர் வாழ் குப்பிழான் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு. updated 17-17-2013

 எமது பாடசாலையான குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு தவராஜா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே. வெளிநாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அதிபருக்கும் இடையில் ஒரு நட்பு ரீதியான சந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது மற்றும் பாடசாலையை பழைய நிலைக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதன் போது அதிபர் அவர்கள் பாடசாலையின் தற்போதைய அவசர தேவைகளை எடுத்துரைத்தார். பழைய மாணவர் சங்கத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான செயல்பாடுகளும் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. பாடசாலைக்கு வரும் நிதி போன்ற அன்பளிப்புக்கள் ஒரு பொதுவான அமைப்புக்குள் மட்டுமே எதிர் காலத்தில் உள் வாங்கப்படவுள்ளது. இனிவரும் காலங்களில் பாடசாலையின் கல்வி வளர்ச்சியை இலக்காக வைத்து அதிபருடனும், பழைய மாணவர் சங்கத்துடனும் இணைந்து வெளிநாட்டு அமைப்புக்கள் செயல்படவுள்ளன. பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தராத பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அன்றைய சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும், எதிர் காலத்தின் மீது ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. புதிய அதிபர் ஒரு சிறந்த சிந்தனைவாதியாகவும், செயல்பாட்டாளராகவும் இருப்பார் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியது.பாடசாலை பிரதான மண்டபத்தின் கணக்கறிக்கை இறுதி செய்யப்பட்ட நிகழ்வு.

 


பாடசாலை பிரதான மண்டப கணக்குகள் சரி பார்க்கப்பட்டு அகற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. இதன் கணக்குகளின் பிரதிகள் துண்டு பிரசுரமாக கற்கரை கற்பக ஆலய தேர்த்திருவிழா அன்று எல்லோருக்கும் வழங்கப்படவுள்ளது. பாடசாலை வெளியீட்டு மலர் விரைவில் வெளியிடப்படும் என்பதையும் அறியத்தருகிறார்கள்.


எமது பாடசாலையின் புதிய அதிபரான திரு தவராஜா அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.குப்பிழான் மத்தியில் இருந்து எமக்கெல்லாம் ஆரம்ப கல்வியை அளித்தது குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம். 90க்கு முதல் இந்த பாடசாலையானது 800க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. அரம்ப காலங்களில் அயலூர் மாணவர்களும் இங்கு கல்வி கற்றது யாவரும் அறிந்ததே. அதற்கு காரணம் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் திறமையான நிர்வாகமும், சுயநலமற்ற சேவையுமே காரணம் ஆகும். அதன் பிறகு நீண்ட போர், இடப்பெயர்வு ஆகியவற்றால் பாடசாலை முற்றாக அழிக்கப்பட்டு குறிப்பிட்ட சில காலங்கள் முற்றாக இயங்கவில்லை. மீண்டும் பாடசாலை இயங்கிய போது போதியளவு வசதிகள் இருக்கவில்லை ஆனாலும் முடிந்தளவு முயற்சி செய்தார்கள். எமது கிராமத்திலிருந்து பலர் புலம்பெயர்ந்திருந்தாலும் இன்றும் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்கின்றார்கள். ஆனால் எமது பாடசாலையில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 150 மட்டுமே. பெரும்பாலானவர்கள் மிகவும் வறிய மாணவர்கள். ஓரளவு வசதியானவர்களின் பிள்ளைகள் அயலூரில் கல்வி கற்று வருகின்றார்கள். இங்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயங்குவதற்கு காரணம் தமது பிள்ளைகளுக்கு சரியான கல்வி கிடைக்காது என்பதனால் தான். அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் 5ம் வகுப்பு வரை இங்கேயே கல்வி கற்றார்கள். பலர் புலமைபரிசில்கள் பெற்றார்கள், யாழின் பிரபல்யமான பாடசாலைகளில் கல்வி கற்க தகுதியும் பெற்றார்கள். தற்போதைய நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றது. நிலமை இப்படியே சென்றால் பாடசாலையை இழுத்து மூடும் நிலமை ஏற்படலாம். இந்த இழிநிலைக்கு காரணம் திறமையற்ற, சுயநலமுள்ள நிர்வாகத்தின் செயல்பாடுகளும், எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் நாங்களும் தான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் புதிய அதிபர் பதவி ஏற்றிருக்கின்றார். புதிய அதிபராக திரு தவராஜா அவர்கள் 23-07-2013 அன்று பொறுப்பேற்றுள்ளார். திரு தவராஜா அவர்கள் ஸ்கந்தா கல்லூரியின் உப அதிபராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிதைந்து போயிருக்கின்ற பாடசாலை நிர்வாகத்தையும், பாடசாலையையும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு நாமும் அவரோடு இணைந்து கைகொடுப்போம். பெற்றோர் பழைய மாணவர் சங்கமும் புதிய அதிபரோடு நட்புறவோடு செயல்பட்டு பாடசாலை வளர்ச்சியில் போதியளவு கவனம் செலுத்த வேண்டும்.