மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் கோலாகலமாக நடைபெற்ற செம்மண் இரவு 2013 - கனடா

 


பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி சதானந்தரூபி பரமேஸ்வரன் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்து சிறப்பித்தார். முதலாவது நிகழ்வாக எமது மூத்தோரைக் கெளரவிக்கும் மூத்த குடிமக்கள் கெளரவம் சிறப்பாக இடம்பெற்றது. தொடர்ந்து வழமையான ஆடல், பாடல், நாடகம் என்பவற்றுடன் வழிகாட்டிகள் என்னும் அண்மைய பட்டதாரிகளுடனான சந்திப்பு நிகழ்வும் புதிதாக இடம்பெற்றது. மொத்தத்தில் குளிர்காலத்தின் ஒரு குதூகலக் கொண்டாட்டமாக செம்மண் இரவு 2013 ஜொலித்தது.

 


குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா குப்பிழானில் பெரும்பரபரப்பு. updated 03-12-2013


குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிய முடியதாவது. அண்மையில் ஆலய நிர்வாகம் அவசரமாக கூடி ஆலய குருக்களை நிரந்தரமாக நீக்கி அவரது மகன் ஆனந்தி ஜயாவை அர்ச்சகராக வேலை செய்ய அனுமதி கொடுத்தனர். ஆனால் ஆனந்தி ஜயா அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. தனது தந்தையார் இருக்கும் பட்சத்திலேயே தானும் இருப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டார். தனது எழுத்து மூலமான பதிலையும் கொடுத்துமுள்ளார். இந்த விடயத்தில் ஊர் மக்கள் இரண்டாக பிளவுபட்டு ஒரு தரப்பினர் குருக்களை மீண்டும் கோயில் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்றும் மறுமுனையில் இருக்ககூடாது என்ற நிலைப்பாட்டிலும் உள்ளனர். இந்த கருத்து மோதல்களுக்கு மத்தியில் இதற்கு ஆதரவான எதிரான துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. அதே நேரம் ஜயருக்கு ஆதரவான சிலர் ஊரில் உள்ளவர்களிடமிருந்து கையொப்பத்தை பெற்று மகஜர் ஒன்றைஆலய நிர்வாகத்திடம் வழங்கினர். அந்த மகஜரில் ஆலய நிர்வாகம் 4 நாட்களுக்குள் தமது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் காலக்கெடுவையும் வழங்கினர். இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க யாரும் முன்வரவில்லை அதே நேரம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் நோக்கோடு விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக தலைமை இதில் இறங்க நிலமை இன்னும் மோசமானது. இதன் காரணமாக நிர்வாக சபை உறுப்பினர்கள் தமது இராஜினாமா கடிதத்தை கிராம சேவகர் திரு சபேசனிடம் கையளித்தனர். இனி திரு சபேசன் அவர்கள் இரண்டு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடாத்தி இதற்கு ஒரு நல்ல முடிவை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஒன்றரை வருடங்களாக விளையாட்டுக் கழகத்திற்கும் ஆலய நிர்வாகத்திற்கும் இடையில் முரண்பாடுகள் நிலவிவருவதை யாவரும் அறிவீர்கள். இந்த விடயத்தை தமக்குள் இருக்கும் பழியை தீர்த்துக்கொள்ளும் களமாக பாவிக்காமல் இந்த பிரச்சினையை ஊரின் நன்மை கருதி சுமூகமாக முடித்து வைக்க முயலவேண்டும். அதே நேரம் ஆலய நிர்வாகம் குருக்களின் விடயத்தை மீள் பரிசீலனை செய்வது அவசியமாகும். மற்ற தொழில்கள் போல் அவர் ஆலய பூசகராக கடமை ஏற்கும் போது அவரின் கடமைகள் என்ன, அவர் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதை எழுத்து மூலம் அவரின் சம்மதத்தை பெறவேண்டும். அதன் பிறகு அவரை தமது தொழிலை சுதந்திரமாக செய்ய அனுமதிக்க வேண்டும். ஆள் ஆளுக்கு அவருக்கு கட்டளைகள் பிறப்பிப்பதோ அல்லது அவரது கடமைகளில் குறுக்கிடுவதோ கூடாது. அதே போல் பூசகரும் பலர் முன் தமது கோபத்தை காட்டாமல் எல்லாம் முடிந்த பின்பு கருத்துக்களை பரிமாறிக்கொள்வதினூடாக எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துக் கொள்ள முடியும்.

 

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய நிர்வாக சபை கூட்டமும் அதன் முடிவுகளும். updated 23-11-2013


குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய நிர்வாக சபை அவசர கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது ஆலய குருக்கள் மற்றும் நிர்வாக சபையினருக்கும் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து அலசி ஆராயப்பட்டது. இந்த கூட்ட முடிவில் ஆலய குருக்களை நிரந்தரமாக நீக்குவதென்றும் அதற்கு பதிலாக வெறொரு குருக்களை அமர்த்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. அதே நேரம் குருக்களின் மகன் ஆனந்தி அவர்களை ஆலய பூசகராக தொடர்ந்து வைத்திருப்தென்றும் முடிவெடுக்கப்பட்டது. அவர் இன்னும் குருக்கள் பட்டம் பெறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் அவர் குருக்கள் பட்டம் பெறும் போது அவரை நிரந்தரமாக ஆலய பிரதம குருவாக அமர்த்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆலய பூசகரான ஆனந்தி எல்லாரிடமும் நல்ல முறையில் அன்பாக பழகும் சுபாவம் உடையவர். அவர்கள் மேல் எல்லோரும் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கின்றார்கள். ஆகவே இப்படியான ஒரு நல்ல மனிதனை கற்கரை கற்பக ஆலய அடியார்கள் இழக்க விரும்பவில்லையென்பதும் அதே சமயம் பிரம்மசிறி சோமசுந்தர குருக்களுடன் தொடர்ந்து மோதல் போக்குகள் உருவாகுவதால் அவரை விலத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. அதே சமயம் ஆலய நிர்வாகமும் அர்ச்சகரை தமது உடன் பிறந்த சகோதரனாய் நினைத்து அவர்கள் வாழ்வும் பொருளாதார ரீதியாக உயர்வடைய தம்மாலான பங்களிப்பை வழங்க வேண்டும். இது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். வெறும் கட்டிடத்தை கட்டுவதாலும், ஆச்சாரம் அனுஸ்தானங்களை பேணுவதாலும் எமது சமயத்தை வளர்க்க முடியாது. மக்களோடு மக்களாக அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு பற்றி ஒரு தர்ம ஸ்தாபனமாக ஆலயம் மாறுவதே தற்போதைய காலத்தின் தேவையாகும். அதே நேரம் ஆலய நிர்வாகத்தில் இருக்கும் கடும் போக்காளர்களை களை பிடுங்குவதும் அவசியமாகும். காலத்திற்கு ஏற்ப எமது மதங்களிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். எமது மதக் கொள்கைகள் 1000 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டவை. ஆனால் அன்றைய சமூகம் வேறு இன்றைய சமூகம் வேறு. சின்னத்திரைகளின் ஆதிக்கத்திலும் , பேஸ்புக் சமூக தளங்களிலும் மூழ்கியிருக்கும் எமது சமூகத்தை மீண்டும் ஆத்மீக வழிகளில் கொண்டு செல்லும் வழிவகைகளை ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.


குற்ற செயல்களை தடுப்பதற்க்கு கிராம மக்கள் ஒன்றிணைய வேண்டும்சுண்ணாகம் பொலிஸ நிலைய பொறுப்பதிகாரி. updated 06-12-2013

கிராமம் தோறும் குற்ற செயல்கள் அதிகரித்த  வண்ணம் உள்ளன இதனை தடுக்க வேண்டும் எனில் மக்கள் நலனுக்காக சகல கிராம மக்களும் ஒற்றுமையாக வேண்டும் என சுண்ணாகம் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்தார் .

குப்பிளான் தெற்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் இதனை தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கையர்கள் என்ற ரீதியில் நாம் எல்லோரும் ஒன்றானவர்கள் எமக்கு எலோருக்கும் இலங்கையின் சட்டம் ஒன்றுதான் வடக்குக்கு ஒன்று தெற்குக்கு வேறு ஒன்று என்று இல்லை எனவே தான் நாம் சட்டத்தின் முன் வேறுபாடுகள்  அற்றவர்கள். நாம் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சட்டத்தினை மீற்பவர்கள் தகுந்த தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

 இங்கு சட்டத்தினை மீறுபவர்கள் மீது பராபட்ட்சம் காட்டபடமாட்டாது பெரும்பாலும் சட்டத்தினை மீறுபவர்கள் இளைஞர்கள் ஆக காணப்டுகின்றனர். இதில் முக்கியமாக மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்ககள் பெரும்பாலும் குற்ற செயலில் ஈடுபடுகின்றனர்.

குப்பிளான் கிராமம் ஆனது இயற்கை வளம் செழிக்கும் கிராமம் ஆகும் இங்கு கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி சகலரும் முனேறவேண்டும். இவ் கிராமத்தினர் கல்வியில் சிறந்து விளங்குபர்கள் பலர் அரச சேவையில் இருபவர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இவ்வாறன இக் கிராமத்தில் அண்மை காலமாக குற்றசெயல்கள் அதிகரிப்பதனை காணமுடிகின்றது. இவ்வாறான குற்றசெயலை தடுப்பதற்கு பொது மக்கள் ஆகிய நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் குற்ற செயல்களை கண்டதுடன் கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுபதுடன் குற்ற வாளிக்கும் தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியும்  என தெரிவித்தார்.                

தகவல்
லிங்கம் மாறன்

திரு கிருஸ்ணர் அவர்களின் திபாவளிப் பரிசு. updated 05-11-2013


திரு கிருஸ்ணர் அவர்களின் 97 அகவையை முன்னிட்டு தீபாவளி சிறப்பு பரிசாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 40 குடும்பங்களுக்கு ரூபா 2000 பெறுமதியான உணவுப் பொருட்கள் கடந்த 31-10-2013 வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு வடக்கு மற்றும் தெற்கு குப்பிழான் கிராமத்துக்கு பொறுப்பாக இருக்கும் கிராம சேவகர்கள் தலைமை வகித்தனர். திரு சிவ மகாலிங்கம், திரு கணேசலிங்கம், திரு சசிதரன், திரு சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அவர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு 10 kg அரிசி, 1kg பருப்பு, 1kg சீனி, 2l தேங்காய் எண்ணை, 1 ரின் மில்க். திரு கிருஸ்ணர் அவர்கள் தனது இறுதி பிறந்த நாள் பரிசு என்று குறிப்பிட்டாலும். இப்படிப்பட்ட நல்ல இதயம் கொண்டவர்கள் மேலும் பல்லாண்டு காலம் அவருக்காக இல்லாவிட்டாலும் எமக்காக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

தகவல்
தி.சசிதரன்

யாருமற்ற நிலையில் வாழ்ந்து வந்த முதியவரின் மரண சடங்கை நடாத்திய இளைஞர்கள், ஊர் பெரியவர்கள் பாராட்டு. தினக்குரலில் வந்த செய்தி. updated 02-01-2013

தகவல்
செ.ரவிசாந்த்


எமது ஊரில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்களின் தொகுப்பின் ஒரு பகுதி.

தனி சைவ கிராமமாகிய குப்பிழான் மண்ணில் வாணி விழா மிகவும் சிறப்பாக இம்முறை இடம் பெற்றது. ஆலயங்கள், பாடசாலை, தனியார் கல்வி நிறுவனம், சிவபூமி ஞான ஆச்சிரமம் போன்றவற்றில் இம்முறை வாணி விழா களை கட்டியது என்றே சொல்ல வேண்டும். கடந்த 2 தசாப்த காலமாக பெருமெடுப்பிலான விழாக்கள் எமது மண்ணில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் எல்லோருக்கும் பெரும் துயரத்தை கொடுத்த இந்த பெரும் போர் என்று சொல்வதில் மிகையாகது. மக்கள் மெல்ல மெல்ல தமது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பிக்கொண்டு எமது தாய் மண் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு சென்று கொண்டு இருப்பது மிகவும் வரவேற்க தக்க விடயம் ஆகும்.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் நடந்த வாணி விழாவில் மதிப்புக்குரிய எமது முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமாகிய திரு சம்பந்தன் ஜயா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். எமது ஊரானது தனி சைவ கிராமம் தமிழ் தேசியத்தை நேசிக்கும் கிராமம். எமது மண்ணில் கட்டாயமாக திணிக்கப்பட்ட மாற்று மதத்திற்கு எதிராக போராடிய கிராமம். இதனால் எல்லோரும் தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள் இதனால் கவரப்பட்ட திரு ஆறுதிருமுருகன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான்இந்த சிவ பூமி ஆச்சிரமம். இதைப் பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்.

 

அதே நேரம் child college வாணி விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடினர். இம்முறை பெருமளவிலான மாணவர்கள் புலமை பரீசில்கள் பெற்றனர் என்பது யாவரும் அறிந்ததே. இதில் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. சிறந்த மாணவர்களுக்கு பரீசில்களும் வழங்கப்பட்டன.

 

5ம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றோர் விபரங்கள். updated 02-10-20135ம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சையின் பெறுபேறுகள் 01-10-2013 வெளியாகியுள்ளன இதில் எமது கிராமத்தில் வசிக்கும் 6 பேர் சித்தியடைந்துள்ளனர். அதைவிட குப்பிழானை சொந்த இடமாக கொண்டு வேறு ஊரில் வசிப்பவர்களும் இந்த பரீட்சையில் சித்தியடைந்தது குறிப்பிடத்தக்கது.

குப்பிழானில் இயங்கும் ஒரே ஏகபோக கல்வி நிலையமான child கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் 8 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். இதில் 6 பேர் எமது கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு தொகையானோர் சித்தியடைந்தது எமது ஊர் எவ்வளவு தூரம் கல்வியில் முன்னேறியுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். ஆனாலும் குப்பிழான் விக்கினேஸ்வராவில் கல்வி கற்கும் எவரும் சித்தியடையவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அதற்கு காரணம் போரினால் எமது பாடசாலை கட்டிடம் முற்றாக சிதைக்கப்பட்டதும் அதன் பிறகு நம்மவர்களின் நிர்வாக சீர்கேட்டினால் கல்வி சிதைக்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணம் ஆகும். ஒரு விடயத்தை ஆக்குவது என்பது மிகவும் கஸ்டம் அழிப்பது என்பது இலகுவானது. அதை நம்மவர்கள் செய்து முடித்து விட்டார்கள் ஆனாலும் இனி வரும் காலங்களில் சிறந்த பெறுபேற்றை பெறுவார்கள் என்பது திண்ணம். அதற்கு பெற்றோர்களாகிய உங்களுடைய ஒத்துளைப்பும் மிகவும் அவசியம்.

புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றோர் விபரங்கள்

1.ஞானேஸ்வரன் மதுசங்கர்-167
2. அருந்தவராசா பவித்திரா-164
3.தவேந்திரன் இலக்கியன்-160
4.சிவகுமாரன் கஜீபன்-159
5.விஜயதாசன் மிதுஷா-158
6.சிவராசா சாருஜன்- 158
7.தவேந்திரன் இலக்கியா-156
8.சிவசுதன் தக்‌ஷிகா-154

 

மேலும் எமது ஊரில் 120 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் விபரமும் தரப்படுகிறது

1.கங்காதரன் அஸ்வினி-120
2.சிவகெளரிதரன் பவித்திரன் -120
3.ஜெயக்குமார் வினுயன்-123
4.லக்சுமணன் ரணுயா-128
5.குமாரவேல் கம்ஷவி-130
6.மகேஸ்வரராஜ் பிறின்சிகா-147
7.ஜெயசீலன் லதுயா-148
8.விஜயகுமார் தவப்பிரியன்-149
10.சதீஸ் சதுர்சிகா-151 

தகவல் திரு விமலேஸ்வரன் கோகுலன்


குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா அமைப்பின் புதிய நிர்வாக சபை விபரங்கள். updated 27-09-2013


தலைவர் - திரு சுந்தரலிங்கம் அருந்தவராஜா
உப தலைவர் - திரு செல்லையா பரமசிவம்
செயலாளர் - திரு நல்லதம்பி மோகனதாஸ்
உபசெயலாளர் - திரு செல்லையா இரஞ்சன்
பொருளாளர் - திரு பாலசுப்பிரமணியம் முகுந்தன்
உபபொருளாளர் - திரு சின்னத்துரை சிவகுமார்

நிர்வாக உறுப்பினர்கள்
திரு பொன்னம்பலம் கணேசலிங்கம்
திரு இராமநாதன் சச்சிதானந்தன்
திரு வைத்திலிங்கம் ஜங்கரலிங்கம்
திரு சம்மந்தர் ஞானலோஜன்
திரு பாலசுப்பிரமணியம் உபேந்திரன்
திரு குணலிங்கம் குணதாஸ்
திரு சுப்பிரமணியம் மணிவண்ணன்
திரு சதானந்தன் கஜாணந்தன்
திரு பிரான்ஷிஸ் சேவியர் றொவின்சன்
செல்வி அனுசியா அருந்தவராஜா
செல்வி அஞ்சிதா ஜங்கரலிங்கம்
திரு பொன்னம்பலம் மணிசேகரன்