விக்கினேஸ்வரா மன்றம் லண்டன் நடாத்திய விளையாட்டு விழா 2010 தொகுப்பு.குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா யூலை18 2010 அன்று சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. காலை 10.45 க்கு ஆரம்பமான நிகழ்வு மாலை 8.00 மணிக்கு முடிவுற்றது. திரு.கணேஸ்குமார் அவர்களின் ஆரம்ப உரையை தொடர்ந்து மங்கல விழக்கு ஏற்றப்பட்டது. பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட திரு திருமதி தர்மபாலன் (சுவிஸ்) மங்கல விழக்கை ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நாட்டில் இடம் பெற்ற போரில் பலியான அனைவருக்கும் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
திரு.பத்மநாதன் குப்பிழான் கிராம கொடியுடன் முன்னே செல்ல விளையாட்டு வீரர்கள், குப்பிழான் விக்கினேஸ்வரா மன்ற தொண்டர்கள் அணிவகுத்து பின்னால் செல்ல, அணிவகுப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நோர்வேயில் இருந்து வருகை தந்திருந்த திரு.பாலா அவர்களின் மகள் குப்பிழான் தேசிய கீதம் (இது கலாநிதி கணேசலிங்கம் அவர்களால் இயற்றப்பட்டது) இசைக்க, திரு.பத்மநாதன் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்ற கொடியை ஏற்றினார். இத்துடன் ஆரம்ப நிகழ்வுகள் நிறைவு பெற போட்டிகள் ஆரம்பமானது.
முதல் நிகழ்வாக 6 வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கான கரண்டி ஓட்டம், 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பழம் பொறுக்கல், 12 வயத்துக்கு உட்பட்டவர்களுக்கான நீளம் பாய்தல், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான குண்டெறிதல் போட்டிகளுடன் 2010 ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் ஆரம்பமானது.அதனைத் தொடர்ந்து பல போட்டிகள் நடைபெற்றது. இறுதி நிகழ்வாக தடைதாண்டல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகள் இனிதே நிறைவு பெற உரைகள் இடம் பெற்றன. உரையாற்றியோர் பின்வருமாறு திரு.மோகனதாஸ் (விக்கினேஸ்வரா மன்ற தலைவர்), திரு.தர்மபாலன் (பிரதம விருந்தினர்), திரு.ஜங்கரலிங்கம், திரு.ரவி, திரு.ரட்ணபாலன், திரு.பத்மநாதன், திரு.பலா(நோர்வே), விக்கினராஜா (பிபிசி அறிவிப்பாளர்). அதனைத் தொடர்ந்து திரு.புஸ்பநாதன் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது.
நிறைவாக பரிசளிப்பு விழா இடம் பெற்றது. பரிசை வளங்கியோர் திரு திருமதி.தர்மபாலன், திரு திருமதி.பத்மநாதன், திரு திருமதி. ரட்ணபாலன், திரு திருமதி.பாலா, திரு திருமதி உபேந்திரன்.

பரிசளிப்பு நிகழ்வுடன் 2010 ஆண்டுக்கான விளையாட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.