இன்றைய முக்கிய செய்தி பலரும் ஆவலாக காத்திருந்த குப்பிழான் கிராமத்தின் வளர்ச்சிக்கு இரண்டு அமைப்புக்கள் உருவாக்கம்.


கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற போரின் காரணமாக எமது கிராமம் பல அழிவுகளை சந்தித்தது. எமது கிராம மக்கள் படிப்படியாக எமது கிராமத்தை விட்டு வெளியேறினர். பலர் வெவ்வேறு ஊர்களிலும், புலம் பெயர்ந்த தேசங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் தம் தாய் மண்ணை என்றும் மறந்ததில்லை. செம்மண்ணான எமது கிராமத்தின் மண் எமது உடம்பில் ஒட்டிக் கொண்டால் அதை எப்படி கழுவினாலும் அது போகாது, அதுபோல் எமது மண் வாசனையும் என்றும் எம் மனதை விட்டு அகலாது. எமது இறுதிக் கணத்திலும் நமது குப்பிழான் மயானமே எங்கள் ஞாபகத்தில் வரும். எனது நண்பர்(லண்டன்) ஒருவர் சொல்வார் தான் செத்தால் தனது உடம்பு குப்பிழான் சுடலையில் எரிய வேண்டுமென்று . அப்படி மண் பற்று உள்ளவர்கள் நம் ஊர் மக்கள். கடந்த காலங்களில் அழிவுற்ற எமது ஆலயங்களை சிறப்பாக புரணுத்தாரணம் செய்து வருகிறார்கள். தமிழர்களின் கலாச்சாரம் ஆனாது இந்து சமயத்துடன் உயிரும் சதையும் போல கலந்து உள்ளது. இதை யாராலும் மறுதலிக்க முடியாது.

அழிந்து போன எமது நாட்டை கட்டி எழுப்புவது அனைவரினதும் கடமை. நாம் எமது கிராமத்தை முன்னேற்றினால் மற்றவர்கள் தம் ஊரை முன்னேற்றுவார்கள். இதன் போது நமது தமிழர் தாயகம் பெரும் வளர்ச்சி நிலையை அடையும். எமது ஆலய வளர்ச்சியோடு மற்ற துறைகளையும் வளர்ப்பது எமது கடமை. ஆனாலும் எம் மக்களுக்கு உள்ள பிரச்சினை யார் மூலம் பணம் அனுப்பி எப்படி செய்வது என்று, அங்கு பல அமைப்புக்கள் இயங்கினாலும் சரியான முறையில் அந்த பணம் போய் சேருமா என்ற சந்தேகம் நம் இடையே இருந்தது, அதை போக்கும் வகையில் இன்று இரண்டு பொதுவான அமைப்புக்கள் உருவாக்கப்பட்டள்ளன அதன் விபரம் வருமாறு.

இன்று 10-10-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை மாபெரும் பொதுக்கூட்டம் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது இரண்டு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டது. ஒன்று குப்பிழான் விக்கினேஸ்வரா கிராம அபிவிருத்தி மன்றம், மற்றையது குப்பிழான் பாடசாலை அபிவிருத்தி மன்றம். குப்பிழான் விக்கினேஸ்வரா கிராம அபிவிருத்தி மன்றமானது குப்பிழானில் இயங்கும் அமைப்புக்களுக்கு பொது அமைப்பாக இயங்கும், குப்பிழான் பாடசாலை அபிவிருத்தி மன்றமானது பாடசாலையின் அபிவிருத்தி சம்பந்தமானது. இதன் நிர்வாக சபை விபரங்கள்.

குப்பிழான் விக்கினேஸ்வரா கிராம அபிவிருத்தி மன்றம்
தலைவர் - நா.பஞ்சலிங்கம்
உபதலைவர் - நா.கணேசலிங்கம்
செயலாளர்- செ.நவரத்தினராசா (கப்பூர்)
பொருளாளர் - தி.சசிதரன்
போசகர் - செ.ஞானசபேசன்
த.தருமலிங்கம்

அங்கத்தவர்கள்
வ.தமிழ்ச்செல்வன்
வி.செந்தில்குமார்
பெ.பிரசாந்த்
க.கவாஸ்கர்
கு.நிரூபன்குப்பிழான் பாடசாலை அபிவிருத்தி மன்றம்


தலைவர் - சிவ மகாலிங்கம்
உப தலைவர் - ஞானசபேசன்
செயலாளர் - தி.சசிதரன்
பொருளாளர் - தில்லை ரவீந்திரன்

அங்கத்தவர்கள்
குணரத்தினம்
வைரவநாதன்
சக்திதரன்
ஜ.சண்முகலிங்கம்

எமது உறவுகள் அனைவரும் தனிப்பட்ட ரீதியிலோ, அல்லது அமைப்பு ரீதியாக இந்த அமைப்பின் ஊடாக உங்கள் வேலைத்திட்டங்களை மேற்கொள்வது மிகவும் சிறந்தது. kuppilanweb.com ஆனது சகலருக்கும் விருப்பு வெறுப்புக்களை கடந்து ஊடக பணி என்றும் செய்யும்.