இரண்டு விருதுகளைப் பெற்ற எமது ஊர் இளைஞன் உ.துளசிகனின் ரத்தசாசனம் குறும்பட வெளியீட்டு விழாவும், அதன் காணொளி காட்சியும். UPDATED 27-07-2016

உ.துளசிகனின் ரத்தசாசனம் குறும்படம் நேற்று 24-07-2016 அன்று குப்பிளான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய பாடசாலை மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார். திரு.பொன்.சந்திரவேல்,கலாச்சார உத்தியோகத்தர்,பிரதேச செயலகம்,வலி தெற்கு அவர்களின் தலைமையில் விழா நடைபெற்றது. பிரதம விருந்தினராக திரு.தி.விஸ்வேதிதன், வைத்திய அதிகாரி,பிராந்திய இரத்த வங்கி, போதனா வைத்தியசாலை,யாழ்ப்பாணம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.க.இளங்கோஞானியார் வைத்திய அத்தியட்சகர், ஆதார வைத்தியசாலை,தெல்லிப்பளை அவர்களும் திரு.ம.பிரதீபன் வைத்திய அத்தியட்சகர், ஆதார வைத்தியசாலை அவர்களும், தெல்லிப்பளை, திரு.அ.கிருபாகரன் அதிபர்,கிருபா லேணர்ஸ் அவர்களும்கௌரவ விருந்தினர்களாக திரு.கணேசநாதன் வடமாகாண பொலிஸ் அத்தியட்சகர் அவர்களும் திரைப்பட இயக்குனர் திரு.கேசவராஜா அவர்களும் கலந்து விழாவைச் சிறப்பித்திருந்தார்கள்.