குப்பிளான் கிராமம் தனிக் கிராமமாக உருவாக முன்னின்று உழைத்த தர்மலிங்கம் காலமானார் ( செய்தித் தொகுப்பும் இறுதி ஊர்வல நிகழ்வுப் படங்களும் )‏

 

1964 ஆம் ஆண்டு குப்பிளான் கிராமம் தனிக் கிராமம் ஆவதற்கு முன்னின்று உழைத்தவரும் குப்பிளான் கிராமத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவருமான  சமூக சேவகரும்.சமாதான நீதவானுமான தம்பு தர்மலிங்கம் நேற்று 15 ஆம் திகதி புதன்கிழமை தனது 90 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

 


அன்னாரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள்  இன்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெற்று  நண்பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன . 

 குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் தலைவர் என்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும் முன்னாள் பாலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் .முன்னாள்  அதிபரும் குப்பிளான் சொக்கவளவு  சோதி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவருமான  எஸ் .குணலிங்கம். குப்பிளான்  தெற்கின் முன்னாள்  கிராம சேவகரும் .கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய பரிபாலன சபைத் தலைவருமான சோ .பரமநாதன்.கட்டுவன் கிராமத்தின் ஓய்வு நிலைக் கிராம சேவகர் க.கனகநாயகம் .அன்னாரின் உறவினரான நாகலிங்கம் ஆகியோர் அஞ்சலி உரைகள் ஆற்றினர்.இதன்போது அஞ்சலி உரைகள் ஆற்றிய அனைவருமே அவர் குப்பிளான் கிராமத்துக்குச் செய்த சேவைகள்  தொடர்பில் மெச்சிப் பேசினர் .

 


அதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக குப்பிளான் காடகடம்பை இந்து மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.இறுதிச் சடங்கு நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்றனர்.

 


அன்னாரின் அளப்பரிய சேவைகளுக்காக குப்பிளான் கிராம ஜோதி .செம்மண் சுடர் முதலிய பல விருதுகள் வழங் கிக்  கெளரவிக்க்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தித் தொகுப்பு  மற்றும் படங்கள் :-செ .ரவிசாந்.